நீ மறைய 
நினைவுகள் மட்டும் வளரும்.
வெட்டிய மூங்கில் மூட்டில்
வெடித்தெழும் முளைகள் போல.
நினைவுகளின்
மெழுகு வெளிச்சத்தில்
குளித்துக் கரையேறுகின்றன
இரவுப் பொழுதுகளின் இனிப்புத் தட்டுகள்.
இப்போதென்
இதயத்தின் இயங்கு தசைகளுக்குள்
இளைப்பாறிக் கிடக்கிறாய் நீ.
இரு முனைகள் எரித்துக் கொள்ளாமல்
இணைத்துக் கொள்ளும்
மின்சாரக் காலம் கவிழ்ந்து விட்டது.
இப்போது இடிபாடுகள் மட்டுமே மிச்சம்.
உடை வாளை உருவியபின்
உறையைத் தொலைத்து விட்டேன்.
வாளின் கூர்மை கேலியான பின்
ஓரமாய்க் கிடக்கிறது உறை.
வடிகட்டிகளை
வாரிக்கட்டிய வாழ்க்கையில்
தங்கி விட்டவை எல்லாம்
தவிர்க்க வேண்டியவை மட்டும்.
சூரியன் மறையத் துவங்குகிறான்.
தொலைதூரப் பயணம் துரத்துகிறது.
பாலைவனப் புதருக்குள்
யுகம் மறந்த ஒற்றை உயிராய்
வெப்பத்தில் ஜீவன் கனலாகத் துவங்கும்.
இன்னுமொரு காலை விடியும்,
நீ
இல்லை என்பதைச் சொல்ல.
இன்னுமொரு இரவு வரும்
உண்மையை செரித்து உறங்கிட.





ஷாமா சொன்னது,
பெப்ரவரி 23, 2010 இல் 11:38 மு.பகல்
//இன்னுமொரு காலை விடியும்,
நீ இல்லை என்பதைச் சொல்ல.
இன்னுமொரு இரவு வரும்
உண்மையை செரித்து உறங்கிட.//
ம்ம்ம்ம்ம்ம்
…….. இதயத்துள் பாரம்
K.SIVA(Fr) சொன்னது,
April 5, 2010 இல் 3:58 மு.பகல்
Naam Urangki NaaLUM , ItaYam EénRum UranKuvaThilLai, IthaYam EépPooLuThu UranKuMoo, Athan Pin Naam,ThooDarnThu Thugm NééRam, “THOO DARAA NééRAM” ++ K.SIVA++(Fr)
சேவியர் சொன்னது,
April 21, 2010 இல் 1:26 மு.பகல்
ஹாய்… சிவா…. எப்டி இருக்கீங்க ?
K.SIVA(Fr) சொன்னது,
மே 9, 2010 இல் 7:02 மு.பகல்
Anpu Soothara Nanraaji Ulléén, Niingkal Nalamaa ? Nalam Nalamariya AaKaa, AthThudan Sootharar Viyai Koopaal Avarkal Eppadi Yullaar , Inthap Pkkam Avraik Kaanéén, SukangKal Kéddathaaji Avarukkung KuuRungKal,Thamilil Eélutha” Azaki ” Pathin Thulléén Cila Maaitram Cejithapin Thamilil Eéluthuvéén, Inrum énrum éNiru Sootharai ééppadi Marppén, éngkal Uravu Sakoothara Uravu, éénénil Unmaijil énakku, Oruthaaji Vajiitru Sootharar ILLai, MaaRu Sootharar UngKal Iruvaraiaip Poola EnRum ILLai Unmai Sootharar Niingkal IRuVarum Thaan énpéin ” ANPU SOOTHARAR IRUVARUKKUM ” +K.SIVA +(France)
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 2:07 மு.பகல்
நலம் சிவா… நன்றிகள். வி.கோ நலம்
அவர் கொஞ்சம் பிஸி போல !
K.SIVA.Fr சொன்னது,
December 19, 2010 இல் 5:08 மு.பகல்
KanNil PadDa VUun
KaaLai Malar Pooil
énNiL LuRaiTha UinUruvam
ManNil MalaiYaal ThuLirkum MulaiPool
ééNNul PuukKum MalarPoonRéé
KanNil KanVaaji NirkKinraaji
KaaThal Aliyai ThanThuvidum
KanaVin NilaVéé éN NaRuké
Thinamum MukathThaikKaadDaaYoo
InnNum PalaMuRai éLiThaaji MukathThaik
KaadDaaYoo AnnPéé Arukéé VannThuvidu.
+ K.Siva.(France)+
சேவியர் சொன்னது,
ஜனவரி 10, 2011 இல் 5:45 பிற்பகல்
நன்றி சிவா.
சேவியர் சொன்னது,
ஜனவரி 10, 2011 இல் 5:49 பிற்பகல்
நன்றி பிரான்ஸ் தோழரே…