
அந்த
வெண்கல நிற விண்கலம்
உலோகக் கதவுகளை
விரித்துக் காத்திருக்கிறது.
நானும்,
என் தேசத்து தேவதையும்
செவ்வாய் கிரகம் போகிறோம்.
பிடிக்கவில்லை.
உருகும் போதே உலர வைக்கும்
இந்த
உலைக்கள உலகம் பிடிக்கவில்லை.
பூமி மக்களுக்கு
பனித்துளி கூட
பாதம் கழுவவே பயன்படுகிறது.
காதலைக் கழுவிலேற்று
என்று
கால்கள் கூட கத்துகின்றன.
அந்தஸ்தின் அட்டவணைகளில்
அன்புக்கு எதிராய்
அரிவாள் தான் சாய்க்கப்பட்டிருக்கிறது.
எனவே,
தேடாதீர்கள் என்று
சீட்டெழுதி விட்டு
சத்தமில்லாமல் செவ்வாய் செல்கிறோம்.
செவ்வாயில் உயிர்களில்லை
என்பதெல்லாம் இனி
சரித்திரத்திலிருந்து துரத்தப்படும்.
எங்கள்
இருவர் பெயர்களும்
துருவங்கள் வரை பொறிக்கப்படும்.
விண்கலம்
ஓர் ஆகாய திமிங்கலமாய்
காலத்தை வென்று
கலத்தை செவ்வாயில் நடுகிறது.
காதலுக்கு எதிர்ப்பில்லா
காற்றில்லா தேசமது,
எங்களிடம் மட்டும்
ஆக்சிஜன் அணிகலன்கள்.
மணித்துளிகள் மங்க மங்க
செவ்வாய் ஓர்
சவக்காட்டு ஊதுபத்தியாய்
அமைதி கெடுக்க ஆரம்பித்தது.
வற்றிப் போன வசந்தத்துக்கு
வாழ்க்கை என்று பெயரா ?
எதிர்ப்பில்லா தேசத்தில்
உதிர்ப்பதெல்லாம் சட்டங்களே.
ஆனால்
மக்கள் இல்லா தேசத்தில்
மணி மகுடம் எதற்கு ?
சமஸ்தானம் அஸ்தமனமானபின்
சிம்மாசனங்கள்
இருந்தென்ன சரிந்தென்ன ?
முடிவெடுக்கிறோம்,
இனி,
வௌவால்களாய் வாழ்வதென்றாலும்,
பூமியின் புதர்களோடுதான்.
விண்கலம்,
மீண்டும் எங்களை ஏற்றி
பூமி நோக்கி பாய்ந்த போது தான்
விண்கலக் கருவிகள்
சினிமாபோல் சட்டென செயலிழந்தன.
பிடி நழுவிய விண்கலம்
கீழ் நோக்கிப் பா.ய்ந்து
கடலில் . . . . .
திடுக்கிட்டு விழித்தேன்,
சாரளம் வளியே சாரல் அடித்தது.
மேஜை மீது
‘காதல்.’ தலைப்பிட்ட
காகிதம் ஒன்று
நான்
கவிதை நிரப்பக் காத்திருந்தது.





வித்யாசாகர் சொன்னது,
பெப்ரவரி 18, 2010 இல் 7:34 மு.பகல்
//பூமி மக்களுக்கு
பனித்துளி கூட
பாதம் கழுவவே பயன்படுகிறது//
//வற்றிப் போன வசந்தத்துக்கு
வாழ்க்கை என்று பெயரா ?
எதிர்ப்பில்லா தேசத்தில்
உதிர்ப்பதெல்லாம் சட்டங்களே.
ஆனால்
மக்கள் இல்லா தேசத்தில்
மணி மகுடம் எதற்கு ?
சமஸ்தானம் அஸ்தமனமானபின்
சிம்மாசனங்கள்
இருந்தென்ன சரிந்தென்ன ?
முடிவெடுக்கிறோம்,
இனி,
வௌவால்களாய் வாழ்வதென்றாலும்,
பூமியின் புதர்களோடுதான்//
மிக ரசனை மிகுந்த வ்பொருள் பதிந்த வரிகள்; அருமையான கவிதை! பாராட்ட மனம் துஞ்சுகிறது!
கலக்கிட்டீங்க சேவியர்;
வித்யாசாகர்
ஷாமா சொன்னது,
பெப்ரவரி 23, 2010 இல் 11:34 மு.பகல்
//பிடிக்கவில்லை.
உருகும் போதே உலர வைக்கும் இந்த உலைக்கள உலகம்
பிடிக்கவில்லை.//
எனக்கும் தான்
//வற்றிப் போன வசந்தத்துக்கு வாழ்க்கை என்று பெயரா ?//
அது தானே…சரியா சொன்னீங்க போங்க!
//திடுக்கிட்டு விழித்தேன், சாரளம் வளியே சாரல் அடித்தது.//
ஓ..ஓ..ஓ….இதெல்லாம் வெறும் க….ன….வு….தா…னா..ஆ..ஆ..
உண்மையை தான் சொல்றீங்களோண்ணு நெனைச்சுட்டேன் சேவியர்!!
yajini சொன்னது,
மார்ச் 14, 2010 இல் 11:20 பிற்பகல்
ok
RIFKY சொன்னது,
மார்ச் 27, 2010 இல் 2:18 மு.பகல்
dddd
udhaya சொன்னது,
April 8, 2010 இல் 4:51 பிற்பகல்
/வற்றிப் போன வசந்தத்துக்கு வாழ்க்கை என்று பெயரா/
super
சேவியர் சொன்னது,
April 21, 2010 இல் 1:25 மு.பகல்
நன்றி உதயா … மீண்டும்….
K.SIVA(Fr) சொன்னது,
ஜூன் 19, 2010 இல் 9:55 பிற்பகல்
Kuud Di KalithThaal Uravu
InaTh Thup Paarth Thaal -IThai Yam
PitrinThu CénRaal Véé Thani
Anath Thum Thuran Thaal
AaaSaami — Avn Edukum Mudivu
Saami – Avani Thoodarnthu Sénraal
Paaliyal Kuitram- MudiVi PaarthThaal
Nii Thi Manram.
++ K.Siva ++(France)
shiva சொன்னது,
ஜூன் 24, 2010 இல் 8:44 பிற்பகல்
miga miga azhago nanbare
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 1:35 மு.பகல்
//miga miga azhago nanbare
//
நன்றி ஷிவா…
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 1:52 மு.பகல்
நன்றி சிவா…