கவிதை : காய்க்காத அத்திமரம்

 

 

விரும்பாமலேயே
வாய்த்து விடுகிறது
பலருக்கும்
குழந்தைப் பாக்கியம்.

நாள்காட்டிகளின்
சுட்டுவிரல்
கணக்குகளில் பிசகியோ,

விசாரணைக்குரிய
பாதுகாப்புக்
கவசங்களின் கண்களில்
மண்ணைத் தூவியோ,

மோகத்தின்
முணுமுணுப்புகளில்
மறைந்து போன
எச்சரிக்கை உணர்விலோ,

ஏதோ ஒன்றில்
நழுவி விழுகின்றன
இந்த
மண்ணின் வரங்கள்
சாபங்களாக.

இந்த வானக வரங்களை
சாபங்களாகச் சித்தரிப்போர்
சந்தித்தல் நலம்.

மரத்தில் தொட்டில் கட்டி
கண்களில்
மதகு உடைத்துக் கரையும்
வேண்டுதல் ஒலிகளை.

தமிழிஷில் வாக்களிக்க….

12 மறுமொழிகள்

  1. வித்யாசாகர் சொன்னது,

    April 21, 2010 இல் 1:17 மு.பகல்

    //விரும்பாமலேயே
    வாய்த்து விடுகிறது
    பலருக்கும்
    குழந்தைப் பாக்கியம்.

    நாள்காட்டிகளின்
    சுட்டுவிரல்
    கணக்குகளில் பிசகியோ,

    விசாரணைக்குரிய
    பாதுகாப்புக்
    கவசங்களின் கண்களில்
    மண்ணைத் தூவியோ,

    மோகத்தின்
    முணுமுணுப்புகளில்
    மறைந்து போன
    எச்சரிக்கை உணர்விலோ//

    கவிதை, வாழும் காலத்தையும் தன்னோடு பதிவு செய்து கொள்ளல் வேண்டும் என்பார்கள்; இதுபோன்ற கவிதைகள் தான் ‘காலத்தின் வாழ்தலையும்’ பரைசாற்றிச் செல்கிறது சேவியர். அருமை!

    வித்யாசாகர்!

  2. சேவியர் சொன்னது,

    April 21, 2010 இல் 1:20 மு.பகல்

    ரொம்ப நன்றி வித்யாசாகர்… சுடச் சுட அளித்த கருத்துக்களுக்கு….

  3. எட்வின் சொன்னது,

    April 21, 2010 இல் 5:34 மு.பகல்

    //இந்த வானக வரங்களை
    சாபங்களாகச் சித்தரிப்போர்
    சந்தித்தல் நலம்.

    மரத்தில் தொட்டில் கட்டி
    கண்களில்
    மதகு உடைத்துக் கரையும்
    வேண்டுதல் ஒலிகளை.//

    அருமையாய் கோர்க்கப்பட்ட வார்த்தைகள். எத்தனை உண்மையும் கூட

  4. kunthavai சொன்னது,

    ஜூன் 30, 2010 இல் 6:52 பிற்பகல்

    //மரத்தில் தொட்டில் கட்டி
    கண்களில்
    மதகு உடைத்துக் கரையும்
    வேண்டுதல் ஒலிகளை//

    அருமையான வரிகள் அண்ணா…

  5. சேவியர் சொன்னது,

    ஜூலை 5, 2010 இல் 1:23 மு.பகல்

    நன்றி சகோதரி குந்தவை :)

  6. சேவியர் சொன்னது,

    ஜூலை 5, 2010 இல் 2:11 மு.பகல்

    ////இந்த வானக வரங்களை
    சாபங்களாகச் சித்தரிப்போர்
    சந்தித்தல் நலம்.

    மரத்தில் தொட்டில் கட்டி
    கண்களில்
    மதகு உடைத்துக் கரையும்
    வேண்டுதல் ஒலிகளை.//

    அருமையாய் கோர்க்கப்பட்ட வார்த்தைகள். எத்தனை உண்மையும் கூட
    /

    நன்றி எட்வின்

  7. seasonsali சொன்னது,

    ஆகஸ்ட் 11, 2010 இல் 5:55 மு.பகல்

    கவிதை எழுதும் வல்லமை கவிஞர்
    சேவியரிடம் உள்ளது அதனை அனுபவித்து ரசிக்கும் உரிமை நம்மிடம் தேவை

  8. renuka சொன்னது,

    ஆகஸ்ட் 19, 2010 இல் 8:21 பிற்பகல்

    solla varthaigal ellai ungal kavithai. very nice pa!

  9. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2010 இல் 10:14 பிற்பகல்

    நன்றி ரேணுகா…

  10. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2010 இல் 10:20 பிற்பகல்

    //கவிதை எழுதும் வல்லமை கவிஞர்
    சேவியரிடம் உள்ளது அதனை அனுபவித்து ரசிக்கும் உரிமை நம்மிடம் தேவை//

    நன்றி நண்பரே.. :)

  11. பால்ராசய்யா சொன்னது,

    செப்டம்பர் 8, 2010 இல் 6:52 மு.பகல்

    பின்னூட்டமிட கவிதையின் வரிகளில் சில அடிக்கோடிடுவார்கள் இங்கே கவிதையின் மொத்த வரிகளையுமல்லவா அடிக்கோடிட தோன்றுகிறது. எல்லா வார்த்தைகளும் நிறைவாய் கவிதையோ சுவையாய். ரசித்து ரசித்து படித்திருக்கிறேன்.

  12. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 12, 2010 இல் 10:39 பிற்பகல்

    /பின்னூட்டமிட கவிதையின் வரிகளில் சில அடிக்கோடிடுவார்கள் இங்கே கவிதையின் மொத்த வரிகளையுமல்லவா அடிக்கோடிட தோன்றுகிறது. எல்லா வார்த்தைகளும் நிறைவாய் கவிதையோ சுவையாய். ரசித்து ரசித்து படித்திருக்கிறேன்./

    நன்றி நண்பரே :) சந்தோசம் !


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 68 other followers