
முள்ளாய் இருந்து விடச்
சம்மதமெனக்கு,
தழுவலில் காயம் தருவேனோ
என்று தான்
தயங்குகிறேன்.
எப்போதேனும்
நீ
மொட்டுப் பல்லக்கை விட்டு
பூவாய்த்
தரையிறங்குகையில்
தாங்கிப் பிடிக்க முடியாதே
என்னும் வருத்தமும்,
காற்றோடு பேசும்
உன் கலந்துரையாடலில்
உன்னைக்
கைகுலுக்குப் பாராட்ட
முடியாதே எனும் பயமும்,
சில்மிசச் சிந்தனைகளை
முந்தானையில் கட்டி
மோகம் முன்வருகையில்
உன்
இதழ்களை வருட
இயலாதே எனும் கவலையும்,
இவைதான்
என்னை
முள்ளாய் இருக்க விடாமல்
மல்லுக்கு நிற்கின்றன.
பேசாமல்
முள்ளாய் மாறிவிடேன்.
தமிழிஷில் வாக்களிக்க..





uumm சொன்னது,
ஜூன் 20, 2010 இல் 8:35 பிற்பகல்
அருமை..
balu1981 சொன்னது,
ஜூன் 28, 2010 இல் 7:17 பிற்பகல்
fne
balu1981 சொன்னது,
ஜூன் 28, 2010 இல் 7:17 பிற்பகல்
fine
balu1981 சொன்னது,
ஜூன் 28, 2010 இல் 7:17 பிற்பகல்
sir nenga ena panring
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 1:24 மு.பகல்
/sir nenga ena panring/
பாலு நான் கணினி துறையில இருக்கேன்
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 1:39 மு.பகல்
நன்றி உமா
sakthivel.(sankari) சொன்னது,
செப்டம்பர் 26, 2010 இல் 3:43 மு.பகல்
superrrrrrrrrrrrrrrr
சேவியர் சொன்னது,
அக்டோபர் 7, 2010 இல் 10:49 பிற்பகல்
நன்றி ஷங்கரி…