கடந்து போகும்
நபரை
எங்கோ பார்த்திருக்கிறேனோ ?
யாரோ
உற்றுப் பார்க்கிறார்களே
தெரிந்தவர்களோ ?
கடந்து செல்லும்
வாகனத்து சன்னலில்
பரிச்சய முகம் ஏதும்
பயணம் செய்ததோ ?
இந்த நேரத்தில்
இங்கென்ன வேலையென
எந்தக் குரலேனும்
பின் காதில் மோதுமோ ?
என்று
பதட்டம் தின்னும்
பொழுதுகளைத் தானா
காதலா
காத்திருப்பு சுகமென்று
கவிதையில் சொல்கிறாய் ?






jothi சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 7:07 பிற்பகல்
காதலா
காத்திருப்பு சுகமென்று
கவிதையில் சொல்கிறாய் ? – nice
renuka சொன்னது,
ஆகஸ்ட் 19, 2010 இல் 8:14 பிற்பகல்
good
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 1, 2010 இல் 10:14 பிற்பகல்
நன்றி ரேணுகா…
கீதா சொன்னது,
December 8, 2010 இல் 4:42 மு.பகல்
ஹ ஹா அது காதலனோட பார்வையில்தானே சுகம்…
காஃபி குடிப்பதும்
கலர்களைப் பார்ப்பதும்
கடலை போடுவதும்…
ஆனாலும் நீங்க காதலியின் கஷ்டங்களை ரொம்ப நல்லா எழுதியிருக்கிங்க. I am amazed.
சேவியர் சொன்னது,
ஜனவரி 10, 2011 இல் 6:03 பிற்பகல்
/ஹ ஹா அது காதலனோட பார்வையில்தானே சுகம்…
காஃபி குடிப்பதும்
கலர்களைப் பார்ப்பதும்
கடலை போடுவதும்…
ஆனாலும் நீங்க காதலியின் கஷ்டங்களை ரொம்ப நல்லா எழுதியிருக்கிங்க. I am amazed
///
நன்றி கீதா…