
தலைப்புச் செய்திகளை
மட்டுமே
அவசரமாய் மேய்ந்து வந்த
கண்கள்,
வரி விளம்பரங்களையும்
விடாமல் படிக்கும்.
தொலைக்காட்சியில்
வானிலை அறிக்கை வருகையிலும்
விரல்கள்
ரிமோட் தேடாது.
ஃபேஷன் சானலின்
எண் மறந்து போகும்
நியூஸ் சேனல் எண்
நினைவில் நிற்கும்.
அதிகாலை மூன்றுமணி
தூங்கப் போகும்
நேரமென்பது மாறி,
தூக்கம் வராமல்
எழும்பும் நேரமென்றாகும்.
இந்தக் கால இசை
சத்தம் என்று
சத்தமாய்ப் பேசும்.
இளமைக் கலாட்டாக்கள்
தவறுகளே என்பது
தெரியவரும்
பேசும் போதெல்லாம்
அறிவுரை முறைக்கும்
தத்துவம் தெறிக்கும்
தூங்கும் முன்
மடித்து வைக்கும்
புத்தகத்தில்
ஆன்மீக வாசனை வீசும்.
ஃ





குயினி ஷாமா சொன்னது,
பெப்ரவரி 15, 2011 இல் 1:29 மு.பகல்
//அதிகாலை மூன்றுமணி தூங்கப் போகும் நேரமென்பது மாறி,
தூக்கம் வராமல் எழும்பும் நேரமென்றாகும்.//
ஓய்வு நாற்காலியில், சுகமும் இருக்கும் சுற்றமும் இருக்கும்…
(இப்போ நேரத்துக்கே நேரமில்லை)
மேனா. உலகநாதன் சொன்னது,
பெப்ரவரி 15, 2011 இல் 3:08 மு.பகல்
நல்ல கவிதை. எனினும் முதுமை குறித்த சொல்லப்படாத, சொல்லப்பட வேண்டிய கவித்துவங்கள் நிறையவே இருக்கின்றன. முதுமையின் அனுபவ அடர்த்தி இங்கே வீணடிக்கப்படுகிறது என்பதே உண்மை. அவர்களை கௌரவப்படுத்த வேண்டாம். அவமானப்படுத்தாமல் இருக்கவாவது இன்றைய தலைமுறை முயலலாம். மனித மதிப்பீடுகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து வரும் காலமிது. முதமை மட்டும் அதற்குத் தப்புமா என்ன?
ஹேமா சொன்னது,
பெப்ரவரி 15, 2011 இல் 4:11 மு.பகல்
அண்ணா…இப்பல்லாம் வயதானவர்கள் கொஞ்சம் புறுபுறுத்துக்கொண்டாலும் மாறியிருக்கிறார்கள்.மெகா சீரியல் எல்லாம் பார்க்கிறார்களே.நல்லதுதானே !
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 20, 2011 இல் 9:12 பிற்பகல்
//அண்ணா…இப்பல்லாம் வயதானவர்கள் கொஞ்சம் புறுபுறுத்துக்கொண்டாலும் மாறியிருக்கிறார்கள்.மெகா சீரியல் எல்லாம் பார்க்கிறார்களே.நல்லதுதானே !
//
மெகா சீரியல் பாத்தாலே வயசாயிடுமே
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 20, 2011 இல் 9:12 பிற்பகல்
//முதுமையின் அனுபவ அடர்த்தி இங்கே வீணடிக்கப்படுகிறது என்பதே உண்மை. அவர்களை கௌரவப்படுத்த வேண்டாம். அவமானப்படுத்தாமல் இருக்கவாவது இன்றைய தலைமுறை முயலலாம். மனித மதிப்பீடுகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து வரும் காலமிது//
ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை !
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 20, 2011 இல் 9:13 பிற்பகல்
//ஓய்வு நாற்காலியில், சுகமும் இருக்கும் சுற்றமும் இருக்கும்…(இப்போ நேரத்துக்கே நேரமில்லை)
//
வண்டி ஓட்டி ஓட்டியே வயசாயிடும்போல இருக்கா