மாடு மாதிரி
உழைத்தவர்களும்,
எருமை மாதிரி
பொறுமை காட்டியவர்களும்,
நாய் மாதிரி
விசுவாசம் சுவாசித்தவர்களும்
நரி மாதிரி
தந்திரம் கொண்டவர்களும்.
கற்றுத் தந்தார்கள்.
ஆறறிவின்
உச்சம்
ஐந்தறிவை எட்டுதல்
ஃ
பெப்ரவரி 20, 2011 இல் 9:23 பிற்பகல் (இன்னபிற)
Tags: இலக்கியம், கவிதை, சேவியர், தமிழ்க்கவிதை, புதுக்கவிதை
மாடு மாதிரி
உழைத்தவர்களும்,
எருமை மாதிரி
பொறுமை காட்டியவர்களும்,
நாய் மாதிரி
விசுவாசம் சுவாசித்தவர்களும்
நரி மாதிரி
தந்திரம் கொண்டவர்களும்.
கற்றுத் தந்தார்கள்.
ஆறறிவின்
உச்சம்
ஐந்தறிவை எட்டுதல்
ஃ
| TAMILARASAN.T on உலகம் உருவான கதை | |
| revathy on நட்புக் கவிதைகள் | |
| R.kumaresan on தலைவலி தீர பத்து ஆலோசனைகள… | |
| நுண்மதி on கவிதை : வரவேற்பறைக் காட்ச… | |
| Sakthi Priya on பிச்சையிடுதல் | |
| Pena Manoharan on கவிதை : தனிமைத் திண்ணைகள் | |
| aman on உலகம் உருவான கதை | |
| சேவியர் on உலகம் உருவான கதை | |
| சேவியர் on உலகம் உருவான கதை | |
| சேவியர் on நட்புக் கவிதைகள் |
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. Theme: Thirteen by Beccary.

விஜய்கோபால்சாமி சொன்னது,
பெப்ரவரி 20, 2011 இல் 9:34 பிற்பகல்
இப்பதான் வருஷம் ஆரம்பிச்சிருக்கு, அப்ரைசல் வேற வருது? அண்ணனுக்கு யாராவது ஆப்படிச்சிட்டாங்களா?
விஜய்கோபால்சாமி சொன்னது,
பெப்ரவரி 20, 2011 இல் 9:36 பிற்பகல்
// தமிழ்க்கவிதை, புதுக்கவிதை //
நெஜமா இது புதுக்கவிதைல வருமா? ஏமாத்தாதீங்க வாத்தியார்.
விஜய்கோபால்சாமி சொன்னது,
பெப்ரவரி 20, 2011 இல் 9:39 பிற்பகல்
நேத்து காலைல 9:23க்கு பதிவு போட்டிருக்காரு. எழுதுறதுக்கு ஒரு 15 நிமிஷம்னு வச்சிக்கிட்டா கூட, அண்ணன் நேத்து காலை 8:38 லேந்து 9:08 க்குள்ள யார் கிட்டயோ நல்லா திட்டு வாங்கிருக்காரு. போன்லயா நேர்லையான்னு ஊருக்குப் போகைல விசாரிக்கனும். எனக்கு தான் எத்தனை வேலை வந்து சேருது!
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 20, 2011 இல் 9:44 பிற்பகல்
//நெஜமா இது புதுக்கவிதைல வருமா? ஏமாத்தாதீங்க வாத்தியார்.
//
இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் “புதுக்” கவிதைன்னு சொல்லிட்டே இருப்போம். அதுவே பழசாயிப்போச்சு இல்லையா ? திங்க் பண்ணுங்க.. இன்னொரு அசைண்ட்மெண்ட்.
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 20, 2011 இல் 9:49 பிற்பகல்
//இப்பதான் வருஷம் ஆரம்பிச்சிருக்கு, அப்ரைசல் வேற வருது? அண்ணனுக்கு யாராவது ஆப்படிச்சிட்டாங்களா?
//
ஆஃப் தான் அடிச்சேன்
விஜய்கோபால்சாமி சொன்னது,
பெப்ரவரி 20, 2011 இல் 9:51 பிற்பகல்
// ஆஃப் தான் அடிச்சேன் //
அப்போ கவிதை இன்னும் பாக்கி இருக்குதா? அதையும் அடிச்சு ஒரே போஸ்டா போடக் கூடாதா? எனக்கு சிரமம் குறையுமில்ல…
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 20, 2011 இல் 10:09 பிற்பகல்
ஏன் இந்த கொலை வெறி ? இதை வெச்சு ஒரு கவுஜை தட்டத் தான் போறீங்க எப்படியானாலும்
( ஆஃப் அடிச்சா எனக்கு போதை தான் வரும், சிலரை மாதிரி கவிதை வராதேப்பா )
விஜய்கோபால்சாமி சொன்னது,
பெப்ரவரி 21, 2011 இல் 12:23 மு.பகல்
”கவிதைல” ஹாஃப் தான் ”டைப்” அடிச்சி போஸ்ட் போட்டிருக்கீங்கன்னு நான் நல்ல விதமாத்தான் புரிஞ்சுக்கிட்டேன். நீங்க தான் தப்பான அர்த்தத்துக்குப் போயிட்டீங்க. இதுக்கு தான் எங்க அம்மா அப்பவே சொன்னுச்சு… எத சொன்னாலும் புரியுற மாதிரி சொல்லுடான்னு…
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 21, 2011 இல் 2:00 மு.பகல்
யோவ்.. கவிதைல ஹாஃப் அடிச்சா அது நவீன கவிதைய்யா… நீ வேற….
விஜய்கோபால்சாமி சொன்னது,
பெப்ரவரி 21, 2011 இல் 3:29 மு.பகல்
வாத்தியார், நடுநிசி நாய்கள் படம் பாத்துட்டு வந்து விமர்சனம் எழுதுங்க. ரூ. 35க்கு டிவிடி வாங்கலாமா வேணாமான்னு முடிவு பண்ணனும். நீங்களே படத்த மோசம்னு சொல்லிட்டா டிவிடிய 5 ரூ. க்கு கேக்கறதத் தவிற வேற வழியே இல்லை.
Sinthuyah சொன்னது,
பெப்ரவரி 21, 2011 இல் 9:00 பிற்பகல்
Yes, it is true
விஜய்கோபால்சாமி சொன்னது,
பெப்ரவரி 26, 2011 இல் 9:16 பிற்பகல்
ந.நி.நா. விமர்சனம் எங்கே? வாத்தியார், க்விக்…
சேவியர் சொன்னது,
மார்ச் 10, 2011 இல் 1:23 மு.பகல்
நநிநா… நீயே எழுதிட்டியேப்பா
சேவியர் சொன்னது,
மார்ச் 10, 2011 இல் 1:28 மு.பகல்
நன்றி சிந்துயா…
David சொன்னது,
அக்டோபர் 16, 2011 இல் 3:23 மு.பகல்
அருமையான கவிதை…
Sakthi Priya சொன்னது,
நவம்பர் 24, 2011 இல் 5:56 பிற்பகல்
ஐந்து
பெரிது
ஆறு
சிறிது
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 14, 2012 இல் 11:05 பிற்பகல்
எந்த ஆறு ? வைகையா ?
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 14, 2012 இல் 11:24 பிற்பகல்
Thank You David