கொசுக்களுக்குப் பயந்து
சாயங்காலம் முளைக்கும் முன்னே
மூடிக் கொள்கின்றன
சன்னல்களும் கதவுகளும்.
மின்சாரத்தில்
கால் பதித்து நிற்கிறது
மின் கொசு விரட்டி.
ஊழலுக்குப் பழக்கப்பட்ட
அரசியல் வாதி போல
துணிந்து பறக்கின்றன
கொசுக்கள்.
இழுத்துக் கட்டிய வலைக்குள்ளும்
நுழைந்து விடுகின்றன
கொலைகாரக் கொசுக்கள்.
கொசுக்கடியை
மூலதனமாகக் கொண்டே
சூடு பிடிக்கிறது
வியாபாரம்.
அடித்தலும் திருத்தலும்
தாண்டியும்
சுவரில் நசுக்கப்பட்டும்
திருந்த மறுத்து
வலிய வலிய
வலம் வருகின்றன
தலைமுறை தலைமுறையாய்
வாரிசுக் கொசுக்கள்.
ஃ






குயினி ஷாமா சொன்னது,
பெப்ரவரி 25, 2011 இல் 3:24 மு.பகல்
// ஊழலுக்குப் பழக்கப்பட்ட அரசியல் வாதி போல
துணிந்து பறக்கின்றன கொசுக்கள். //
ஹா ஹா ஹா…. ரொம்ப ரசித்தேன் இவ்வரிகளை.
அடித்தாலும் நசுக்கினாலும் என்றுமே திருந்தாது,
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் “பீனிக்ஸ்” பறவைகள் இவர்கள்…lol
கோவை கவி சொன்னது,
பெப்ரவரி 25, 2011 இல் 8:36 பிற்பகல்
// ஊழலுக்குப் பழக்கப்பட்ட அரசியல் வாதி போல
துணிந்து பறக்கின்றன கொசுக்கள். //
ரசித்தேன் இவ்வரிகளை
ஹேமா சொன்னது,
பெப்ரவரி 26, 2011 இல் 11:31 பிற்பகல்
அண்ணா….கொசுவையும் விட்டு வைக்கலியா.சிரிச்சாலும் அர்த்தமாவே இருக்கு வரிகள்.என்னையும் தாக்குது கொசு !
vanishree சொன்னது,
மார்ச் 2, 2011 இல் 4:25 மு.பகல்
mnhngugmhk
vanishree சொன்னது,
மார்ச் 2, 2011 இல் 4:30 மு.பகல்
kosu tholla thangalla. allover the world kosu is the dangerous
சேவியர் சொன்னது,
மார்ச் 10, 2011 இல் 1:06 மு.பகல்
நன்றி வாணிஸ்ரீ
சேவியர் சொன்னது,
மார்ச் 10, 2011 இல் 1:23 மு.பகல்
நன்றி ஹேமா
சேவியர் சொன்னது,
மார்ச் 10, 2011 இல் 1:24 மு.பகல்
நன்றி கோவை கவி
சேவியர் சொன்னது,
மார்ச் 10, 2011 இல் 1:25 மு.பகல்
நன்றி குயினி ஷாமா