சத்தமிட்டு
கால்களைக் கட்டிக் கொண்டு
கதறி அழுது
புலம்பியது சுற்றம்.
கதறி அழாதவர்கள்
அன்பு குறைந்தவர்களாய்
கருதப்பட்டார்கள்.
திரட்டிய
கண்ணீர் துளிகளை
முந்தானைகளில் சேமித்து
கூட்டம்
கடந்த பின்,
ஜாமங்களின்
குறட்டை ஒலிகளையும்
மீறி
இருட்டின் விழிகளிலிருந்து
விழுந்து கொண்டிருந்தன
மெளனமான கண்ணீர் துளிகள்.
மின்மினிப் பூச்சிகளின்
மெல்லிய வெளிச்சத்தில்
பளீரிட்டது
இறந்து போனவரின்
கண்ணீர் விழிகள்.
ஃ






குயினி ஷாமா சொன்னது,
மார்ச் 19, 2011 இல் 2:10 மு.பகல்
எத்தனை முறைதான் உங்களைப் பாராட்டுவது?….

பாராட்டாமல் இருக்க ஒரு சந்தர்ப்பம் தாருங்களேன் சேவி ப்ளீஸ்!
உணர்வைத் தொடுகிறது சேவி….
மெளனமான கண்ணீர்த்துளிகளுக்கு இறந்த கண்ணீர்த்துளிகள் ஆறுதல் கூறுவது நெஞ்சைத் தொடுகிறது!….
வாழ்த்துகள் உங்கள் கவிப் பயணம் தொடர!
vijaygopalswami சொன்னது,
மார்ச் 19, 2011 இல் 4:38 மு.பகல்
எதிர்கவுஜை
ஏன் என் கணவனே?
ஒரு அரை மணிநேரம்
தாமதித்திருக்கக் கூடாதா!
அப்படி என்ன அவசரம்?
போய்ச் சேர்வதற்கு?
ஆக்கப் பொறுத்தவன்
தின்னப் பொறுக்கவில்லையே!
நீ தின்னாமல் சாகவில்லை,
தின்னவிடாமலும் செத்துவிட்டாய்…
ச்சீய்… உன் கட்டை வேகாமல் போகட்டும்…
இவள் – நீ பட்டிணியாய் விட்டுச் சென்ற உன் மணைவி
Vijay சொன்னது,
மார்ச் 19, 2011 இல் 6:33 மு.பகல்
அருமை நண்பா
விஜய்
சேவியர் சொன்னது,
மார்ச் 23, 2011 இல் 5:22 பிற்பகல்
மிக்க நன்றி விஜய்
சேவியர் சொன்னது,
மார்ச் 23, 2011 இல் 5:22 பிற்பகல்
விஜய்…. உன்னுடைய படைப்புகளில் மிதக்கும் அங்கதச் சுவை நான் எப்போதுமே ரசிப்பது ! நன்றி
சேவியர் சொன்னது,
மார்ச் 23, 2011 இல் 5:23 பிற்பகல்
சகோதரி ஷாமா… நன்றி…. நன்றி. உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி !
kurinjimaindhan சொன்னது,
மே 6, 2011 இல் 10:52 பிற்பகல்
vaazhthukkal.
shaila சொன்னது,
நவம்பர் 30, 2011 இல் 7:55 பிற்பகல்
SUPER KAVITHAIGAL
பெயரிலி சொன்னது,
ஜனவரி 31, 2012 இல் 4:53 பிற்பகல்
niyaayam, super
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 14, 2012 இல் 6:32 பிற்பகல்
//niyaayam, super
//
நன்றி…
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 14, 2012 இல் 10:52 பிற்பகல்
//SUPER KAVITHAIGAL
//
நன்றி ஷலீலா