கவிதைச் சாலை
நட்புக் கவிதைகள்
“எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
“எம் பேரு ஞாபகமிருக்கா”
என கேட்டு விடுவானோ ?
ஃ
அப்பப்போ
போன் பண்ணுடா…
எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு
“கண்டிப்பா”
என நகர்வான்,
நான் கொடுக்காத நம்பரை
அவன்
எழுதிக் கொள்ளாமலேயே.
ஃ
பொய்கள் தான்
உண்மையாகவே
நட்பைக் காப்பாற்றுகின்றன.
“நேற்று கூட பேச நினைத்தேன்”
என
யாரோ பேசிக் கடக்கிறார்கள்
செல்போனில்
ஃ
அவளா இது ?
மீன் வாங்கிச் செல்லும்
பெண்ணிடம்
கொஞ்சமும் மிச்சமில்லை
கால் நூற்றாண்டுக்கு முன்
கண்களில் சிரித்த வசீகரம்.
ஃ
நட்பு இருப்பதாய்
சொல்லிக் கொள்ளவேனும்
அடிக்கடி
தேவைப்படுகின்றன
வெள்ளிக்கிழமை பார்கள்.
ஃ
கிராமத்து மௌன வீட்டின்
கம்பி அளியின் ஊடாக
நண்பனின்
புன்னகை முகம் தெரிகிறது.
இறந்து
வெகு நாட்களான பின்னும்.
ஃ
“ஏழாயிரம் சம்பளம் டா மச்சி”
என
குதூகலித்துச் சொல்லும் நண்பனிடம்
சொன்னதில்லை
பல மடங்கு வாங்கும் நான்.
கவிதை : Take it ez … பி.டி பிரியா
வாசல் கடக்கையில்
எதேச்சையாய் மோதிய
வசீகர அழகிக்கு
“நன்றி” சொல்ல வாயெடுத்தேன்
சாரி
சொல்லி கடந்து போனாள்.
ஃ
இயற்கை அழகு அபாரம் என்றேன் !
உற்றுப் பார்த்தது
ஸ்கூட்டி ஜீன்ஸையோ
என
அருகிருந்த மனைவி
சந்தேகப்பட்ட வினாடியில்.
ஃ
மானே, தேனே எல்லாம்
பழசாகிப் போச்சு
ஆங்கிலக் கொஞ்சல்களைத் தான்
விரல் அலகுகளால்
கொத்தித் தின்கின்றன
எஸ் எம் எஸ் கிளிகள்
ஃ
பி.டி பருத்தி
பி.டி பிரிஞ்சால் …
இது
மரபணு மாற்று யுகமாமே
விரைவில் வரவாளோ
சந்தியாவின் சிரிப்பையும்
காவ்யாவின் குணத்தையும் இணைத்த
பி.டி பிரியா ?
பிரியமூட்டி வளர்க்கிறேன்….
வளர்த்து வருகிறேன்.
எங்கே சென்றாலும்
காலைச்
சுற்றிச் சுற்றி வந்து
முதுகு தேய்க்கும்
வெல்வெட்
நாய்க்குட்டியாகவோ,
புரண்டு படுக்கும் போதும்
கூடவே புரண்டு படுத்து
என்
போர்வைக்குள்ளேயே
மெல்லமாய்ப் பிராண்டும்
செல்ல
பூனைக்குட்டியாகவோ,
அதை நினைத்துக் கொள்ளலாம்.
உன்னைப் பற்றிய
கனவுகளைக்
கவளம் கவளமாய்த் தின்று
உன்
அழகு குடித்து
வளர்ந்து கிடக்கிறது அது.
நீ
புறக்கணிப்பாயோ
இல்லை
நீயும் ஒன்றை
அப்படியே வளர்க்கிறாயோ ?
தெரியவில்லை.
ஆனாலும்
கைகளில்
ஏந்திப் பார்க்காமல்
இருந்து விடாதே
பிரியமூட்டி பிரியமூட்டி
வளர்த்த இதயம் அது.
நீயற்ற பொழுதுகள்
கரங்கள் போல
நடுங்குகின்றன
எனது விரல்கள்.
வியர்வையில் குளித்துக்
களைக்கின்றன
கால்கள்.
இரவுகளின் வெப்பம்
நரம்புகளில்
தீமிதிக்கின்றன.
நீயற்ற
தனிமையின் தவிப்புகளே
இவை.
உன்
வருகையின்
காலடி ஓசையில்
தலைதெறிக்க
தப்பி ஓடுகின்றன தவிப்புகள்
காதல் புன்னகை
பரவச தேசத்தின்
பளிங்கு மாளிகை போல்
பரிசுத்தமானது
உன் புன்னகை.
அது
இரவை உடைக்கும்
ஓர்
மின்னல் கோடு போல
தூய்மையானது
தேவதைக் கனவுகளுடன்
தூக்கத்தில் சிரிக்கும்
ஓர்
மழலைப் புன்னகையுடனும்
ஒப்பிடலாம்
உன் புன்னகையை.
எனக்குள் கவிழ்ந்து வீழும்
ஓர்
பூக்கூடை போல
சிதறுகிறது உன் சிரிப்பு.
ஒரு மின்மினியை
ரசிக்கும்
இரவு நேர யாத்திரீகனாய்
உன்
புன்னகையை நேசிக்கிறேன்.
ஆதாமுக்கு
ஆண்டவன் கொடுத்த
சுவாசம் போல
எனக்குள் சில்லிடுகிறது
உன் புன்னகை.
எனினும்
உன் புன்னகை அழகென்று
உன்னிடம் சொல்ல
மட்டும்
ஆயுள் கால தயக்கம் எனக்கு.
நீ
புன்னகைப்பதை
நிறுத்தி விடுவாயோ என்று.
தமிழிஷில் வாக்களிக்கலாமே
நீங்க தான் வில்லன் நம்பர் 1
எல்லோருக்குமே தன்னை ஒரு ஹீரோவாகப் பாவிப்பதில் தான் ஆசையும், சிலிர்ப்பும். அதனால் தான் வில்லன்களைக் காணும் போது கோபமும் எரிச்சலும் பீறிட்டுக் கிளம்புகிறது நமக்கு. எப்படியாவது வில்லனை வீழ்த்தி நமது ஹீரோயிசத்தை நிலைநாட்டுவதே நமது கனவாய் இருக்கும். ஆனால் நாமே சில விஷயங்களில் வில்லனாகத் தான் இருக்கிறோம் என்பது தான் உண்மை. கோபப்படாம படிங்க.
பிளாஸ்டிக்
கவிதை : காதல் வழிப்போக்கன்
ஒவ்வொரு கவிதை
முடிவிலும்,
உன்னை இன்னும் அதிகமாய்
நேசிப்பதாய் உணர்கிறேன்.
அதற்காகவே
இடை விடாமல் எழுதத் துடிக்கிறேன்.
உன் உதடுகளை
என் உதடுகளால்
பிரதி எடுக்க
பிரியப்படுகிறேன்.
நீயோ
அதற்கு இன்னோர்
பிறவி எடுக்கச் சொல்கிறாய்
மறந்து போயிருந்த
ஒரு
இதயம் கொத்திய
பழைய பாடலை
இரவின் நிசப்தத்தில்
மெல்லிய சப்தத்தில் கேட்டேன்.
உன்
ஞாபகம் கொத்திக் கிளறுகிறது.
ஒவ்வொரு முறை
நீ
பார்வைத் தூரிகை தொட்டு
என்னை
வரையும் போதும்
அழிந்து கொண்டிருக்கும்
ஓவியமாய் நான்.
பட்டென்று கட்டிக் கொள்ளும்
ஓர்
குழந்தையின்
குரங்கு பொம்மையாய்
நீ.
ஏக்கத்தோடு எட்டிப்பார்க்கும்
கடைவீதியின்
கடைக்குட்டி குழந்தையாய்
நான்.
உதயம் காணக் காத்திருக்கும்
ஓர்
குடுட்டுப் பிச்சைக்காரனின்
இடுப்புப் பையில்
இடறிய காசு
காதலின் கனவுகள்.
என் வீட்டுக் கண்ணாடி
உனக்கான
என்னைக் காட்டுகிறது.
உன் காதல் மட்டுமே
நான் என்ற
என்னைக் காட்டுகிறது.
முள்ளை முள்ளால் தான்
எடுக்க வேண்டும்.
என் காதலை
உன் காதலாலும்.
செலவழித்தால்
சேரும்,
சேர்த்து வைத்தால்
தொலைந்துபோகும்…
ஓர்
வியப்பின் விதை
காதல்.
நாம் இருவரும்
மனசுக்கு டானிக் : கைகளில்லை + கால்களில்லை = கவலைகள் இல்லை
“உங்களுக்கு ஒரு பையன் பொறந்திருக்கான்” என நிக்கை (Nick Vujicic) அவனுடைய தந்தையிடம் காட்டியபோது உள்ளுக்குள் குமட்டிக் கொண்டு வர, ஆஸ்பத்திரியை விட்டு வெளியே ஒடி வந்து வாந்தியெடுத்தார் தந்தை !
“இந்தாங்க உங்க பையன்” என தாயிடம் நீட்டியபோது “ஐயோ.. என் முன்னாலிருந்து கொண்டு போங்கள்…” என நான்கு மாதங்கள் அவனைத் தொடாமலேயே அழுது தீர்த்தாள் தாய்.
கவிதை : மலைகளுக்கு மாலையிடு.
மலைகளே…
பூமிப் பந்தின்
கர்வக் கிரீடங்களே,
மலைகளே,
மலைப்பின்
மறு பெயர்களே.
உங்கள்
தலை துடைக்க
மென்மையின் மேன்மையான
மேகத் துகள்.
உங்கள் உள்ளுக்குள்
ஒளித்து வைத்திருக்கிறீர்கள்
ஓராயிரம்
ஒய்யாரச் சிற்பங்கள்.
காற்றுக்கும் கதிரவனுக்கும்
கலங்காத
கருங்கல்  இதயம்
உனக்கு.,
உன்னை
எப்படிப் புகழ்வது ?
நெஞ்சு நிமிர்த்தி நிற்கும்
வீரத்துக்கா,
சில செடிகளுக்கு
வேர் விட வழி விடும்
ஈரத்துக்கா ?
உன் மர்மப் பிரதேச
மரக்கிளைகளில்
தான்
உண்மைச் சங்கீதம்
உறங்கியே கிடக்கிறது.
சங்கீதத்தை
இரைச்சல்களிலிருந்து
இழுத்தெடுத்து
இதயம் வலிக்கும் போதெல்லாம்
மௌனத்துள் கரைந்து
இசைக்கச் சொன்னது
உன் மௌனம் தான்.
நாடுகளுக்கும்
காடுகளுக்கும்
நீ
வேலியாய் விளைந்தவன்.
சிங்கங்களின் சோர்வகற்ற
உன்னைப் போல உறுதியான
குகைகள்
குடைந்தவன்.
சில நேரம்
பரவசங்களின் பதுங்கு குழி
உயரமான உன்
முதுகு தான்.
நாங்கள்
உன்னைப் பார்த்து
ஆச்சரிய மூச்சு விடும்போது
நீ
பள்ளங்களைப் பார்த்து
பெருமூச்சு விடுகிறாயா ?
தெரியவில்லை.
ஆயிரம் தான் சொல்,
கல்லாய் நடக்கும்
மனிதர்களை விட,
கல்லாய் கிடக்கும் கல்
மேன்மையானதே.
ஃ
ரோபோவுடன் செக்ஸ் !
உலகின் உண்மையான வில்லன் இனிமேல் தான் வரப்போகிறான். ரோபோ வடிவத்தில் ! வெறும் இயந்திரம் எனும் நிலையில் ஆரம்பிக்கப்பட்ட ரோபோக்களின் இன்றைய வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.
இதுவரை வந்ததெல்லாம் வெறும் சாம்பிள் தான் இனிமேல் தான்பா மெயின் பிக்சர் என மிரட்டுகின்றனர் விஞ்ஞானிகள். அதாவது சுயமாகச் சிந்தித்து, முடிவெடுக்கக் கூடிய ரோபோக்கள் தான் அடுத்த இலக்காம்! அப்படி ஒன்று சாத்தியமாகும் காலத்தில் நிகழப் போகும் விபரீதங்கள் தான் திகிலை ஏற்படுத்துகின்றன.