நூல்கள்

ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும்

img_29751னது முதல் கவிதைத் தொகுப்பு. முதல் தொகுப்பு எப்போதுமே நெஞ்சுக்கு நெருக்கமானது, அந்த வகையில் இந்தக் கவிதை நூலும் எனது மனதுக்கு நெருக்கமானது.

கவிஞர் நா.முத்துகுமார் அவர்களின் அற்புதமான முன்னுரையுடன் வெளியான நூல். 2001ம் ஆண்டு இந்த நூல் வெளியானது.

காதல், சமூகம், குடும்பம் என பல்வேறு சிந்தனைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. ரிஷபம் பதிப்பக வெளியீடாக வந்தது.

மன விளிம்புகளில்img_29821

சபரி வெளியீடாக வந்த எனது கவிதை நூல். தினம் ஒரு கவிதை, அம்பலம், திண்ணை போன்ற இணைய இதழ்களில் வெளியான கவிதைகளில் சிறந்த கவிதைகளின் தொகுப்பு.

சமூகம், காதல், குடும்பம் என பல்வேறு தளங்களில் பயணிக்கும் கவிதைகள். பரவலான வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்ற கவிதை நூல்.

நில் நிதானி காதலி

img_29781
காதலையும் நேரத்தையும்
வைத்து
நிறையக் கவிதைகள்
எனக்கு
அதற்குக் கூட நேரமில்லை
உன்னைச் சந்தித்தபின்.

சின்னச் சின்னக் காதல் கவிதைகளின் தொகுப்பு. யுகபாரதி அவர்களின் அற்புதமான முன்னுரையுடன் வெளியான காதல் கவிதைகளை மட்டுமே உள்ளடக்கிய நூல். எளிய வாசிப்புக்கும், இனிமையான உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்த கவிதை நூல்.
சேவியர் கவிதைகள் காவியங்கள்.

2003 வரையிலான எனது கவிதைகளின் முழு தொகுப்பு இது. உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை 2003ம் ஆண்டுக்கான சிறந்த இளம் கவிஞராக என்னைத் img_30021தேர்ந்தெடுத்து, எனது கவிதைகளை முழுமையாக வெளியிட்டார்கள். சுமார் 1000 பக்கங்கள் கொண்ட மெகா தொகுப்பாக இது வெளியானது.

கவிதைகளோடு சேர்ந்து 5 கவிதைக் குறுநாவல்கள் காவியங்கள் எனும் தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. இனிய வாசிப்புக்கு உத்தரவாதம்.

அமெரிக்காவில் சிகாகோ நகரில் வெளியான இந்த நூலில் இடம்பெற்றுள்ள கவிதை ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பாராட்டையும் பெற்றுள்ளது. கவிப்பேரரசு வைரமுத்து உட்பட பல்வேறு கவிஞர்களின் பாராட்டுகளையும், பரிசுகளையும் பெற்ற கவிதைகள் இந்த நூலில் உண்டு.

கல்மனிதன்

சந்திimg_29881யா பதிப்பக வெளியீடாக வந்த கவிதை நூல் கல்மனிதன். கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்களின் அற்புதமான முன்னுரையோடும், பாராட்டுகளோடும், வாழ்த்துகளோடும் வெளியான நூல் இது.

எளிமையான, சமூக உறவுகளை முன்னிறுத்தும் கவிதைகளால் நிரம்பிய தொகுப்பு இது. இலக்கிய உலகில் பாராட்டுகளைச் சம்பாதித்த கவிதை நூல் இது.

இயேசுவின் கதை : ஒரு புதுக்கவிதைக் காவியம்

இறைமகன் இயேசுவின் வாழ்க்கை வரலாறை புதுக்கவிதை வடிவில் முழுமைimg_29951யாகச் சொன்ன முதல் நூல். கண்ணதாசனின் இயேசு காவியத்தைப் போல, தமிழில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை கவிதைப்படுத்திய நூல்.

கிறிஸ்தவ தமிழ் இலக்கியப் பேரவையின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்றது.

இலக்கிய வட்டாரத்திலும், கிறிஸ்தவ வட்டாரத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்ற நூல்.

ஷாரூக்கான்

நடிகர் ஷாரூக்கானைப் பற்றி தமிழில் வெளியான முதல் நூல். பிளாக் ஹோல் மீடியா பதிப்பகம் வழியாas1க வெளியான நூல்களில் ஒன்று. ஷாரூக்கானின் திரை அனுபவங்களை மட்டும் பேசாமல் அவரை இளைஞர்களுக்கான எனர்ஜி டானிக்காகப் படம்பிடித்த நூல்.

ஒரு திரைப்படத்துக்குரிய பரபரப்பு ஷாரூக்கானின் வாழ்க்கையில் உண்டு. வறுமை, காதல், நிராகரிப்பு, தோல்வி, அவமானம் என எல்லா நிலைகளையும் கடின உழைப்பின் மூலம் கடந்த வாழ்க்கை அவருடையது. உச்சியில் இருக்கும்போது எல்லோர் கண்களிலும் தட்டுப்படுவதும், பள்ளத்தாக்கில் கிடக்கும் போது புற்களால் கூட நிராகரிக்கப்படுவதும் மிகவும் சகஜம்.

ஷாரூக்கானின் வாழ்க்கை சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கான உற்சாக டானிக்.

ஏன் சாப்பிடவேண்டும் மீன் ?

மீன் உணவை சில மாநிலங்கள் கடல் பூ என அழைத்து சைவ உணவாகப் பார்க்கின்றன‌. நம்ம ஊரைப் பொறுத்தவரை அசைவப் பிரியர்கள் கூட img_30081பலவேளைகளில் மீனை ஒதுக்குவதுண்டு.

மீனில் ஏகப்பட்ட சத்துகள் உள்ளன. ஒவ்வொரு மீனுக்கும் ஒவ்வொரு சத்து உண்டு. அவற்றைப் பற்றிய ஒரு முழுமையான பதிவு. எளிமையாய் மீன் உணவின் மகத்துவத்தை விளக்கும் நூல் இது.

கருவில் இருக்கும் குழந்தை முதல், முதுமை தவழும் மனிதர் வரை மீன் யாருக்கெல்லாம் பயனளிக்கும் எப்படியெல்லாம் பயனளிக்கும் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள இந்த நூலைப் புரட்டலாம். பிளாக் ஹோல் பதிப்பக வெளியீடு.

இயேசு என்றொரு மனிதர் இருந்தார்
கிழக்கு பதிப்பக வெimg_30101ளியீடாக வந்த எனது முதல் நூல் இது. இயேசுவைப் பற்றி தமிழில் வெளியான முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல் இது எனலாம். இயேசு வாழ்ந்த கால சமூக, அரசியல், கலை பின்னணியையும் சேர்த்தே இந்த நூல் பதிவு செய்கிறது.

மிகை கலப்புகளோ, ஜோடனைகளோ இல்லாமல் இயேசுவின் வாழ்க்கையை அப்படியே பதிவு செய்த நூல் இது. இயேசுவைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த நூல் மிகவும் பயனளிக்கும்.

கிறிஸ்தவ வரலாறு

கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்த நூல் இது. கிறிஸ்தவம் தனது போதXavier Book Christianityனைகளில் அன்பையும், சாந்தத்தையும் கொண்டிருக்கிறது. ஆனால் மதம் கடந்து வந்த பாதை அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் மட்டுமே சந்தித்திருக்கிறது. இந்த நூல் இயேசுவின் வாழ்க்கை சுருக்கத்தை அறிமுகம் செய்து, அவரது பன்னிரன்டு அப்போஸ்தலர்களின் வாழ்க்கை, பணிகள், மரணம் வழியாகப் பயணிக்கிறது.

கிறிஸ்தவத்தின் இரண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றை மிகச் சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் விவரிக்கும் நூல் இது. எளிமையான வாசிப்புக்கும் முழுமையான புரிதலுக்கும் உத்தரவாதம்.

அலசல்

எனது முதல் கட்டுரைத் தொகுப்பு இது. பெண்ணே நீ, தமிழோசை களஞ்சியம், லண்டன் வெற்றிமணி ஆகிய பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இது. வாழ்வியல் கட்டுரைகளைimg_30191க் கொண்ட இந்தத் தொகுப்பு பாராட்டுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றது.

சமூகம், அரசியல், குடும்பம், தொழில்நுட்பம் என பல்வேறு பிரிவுகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. எளிமையான வாசிப்புக்கும் ஆழமான சிந்தனைகளுக்கும் இந்த நூல் உத்தரவாதம் தருகிறது. கட்டுரைப் பிரியர்களுக்கான நூல் இது.
அன்னை

அன்னை தெரசாவைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அன்னையின் வாழ்க்கையைப் புதுimg_30271க்கவிதை மொழியில் கொண்டு வந்த நூல் இது. கவிதையாய் வாழ்ந்த அன்னையின் வாழ்க்கை, இங்கே கவிதை நடையில்.

அன்னை தெரசாவின் இளமை முதல் மரணம் வரையிலான நிகழ்வுகளின் தொகுப்பு இது. எளிமையான வார்த்தைகளும், சுவாரஸ்யமான உவமைகளுமாய் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு யதார்த்த நூல்.

அன்னையையும், கவிதையையும் நேசிப்பவர்கள் இந்த நூலை வாசிக்கலாம்.

கி.மு விவிலியக் கதைகள்

விவிலியம் ஒரு அதிசயச் சுரங்கம். எல்லா விதமான இலக்கியக் கூறுகளும் அடங்கிய புனித நூல். கி.மு எனும் இந்த நூல், விவிலியக் கதைகளை சிறுகதைகளாக மாற்றி வாசிப்பு அனுபவத்தை இரட்டிப்பாக்குகிறது. விவிலிய மொழியைத் தவிர்த்து இலக்கிய மொழியைXavier KiMuக் கையாள்வதால் சிறுகதை படிக்கும் உணர்வு கிடைக்கிறது.

விவிலியத்தில் இப்படியெல்லாம் கதைகள் உண்டா என வியக்க வைக்கும் கதைகளின் தொகுப்பு இது. சிறந்த நூலுக்கான விருதை கிறிஸ்தவ தமிழ் இலக்கியப் பேரவையிடமிருந்து பெற்றது. கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் கிறிஸ்துவுக்கு முந்தைய காலகட்டத்தையும், வரலாற்றையும் கதை வடிவில் புரிந்து கொள்ள இந்த நூல் உதவும்.

ராகுல்காந்தி

காங்கிரஸ் கட்சி பெரிதும் நம்பும் ஒரு தலைவர். ராஜீவ் காந்தி விட்ட img_30331இடத்தை இட்டு நிரப்புவார் என்பது அவரைச் சார்ந்தவர்களின் நம்பிக்கை. மனதளவில் தெளிவும், நம்பிக்கையும் கொண்ட தலைவர். ஆனாலும் அரசியல் சூத்திரம் அவருக்குப் பிடிபட்டதா என்பது சந்தேகமே.

காங்கிரஸ் கட்சியின் வரலாறை சுதந்திர காலத்திலிருந்து துவங்கி, சமீப காலம்வரை அலசியிருக்கிறது இந்த நூல்.

சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்

தினத்தந்தி நாளிதழில் 60 Xavier Bookவாரங்கள் தொடராய் வந்த தன்னம்பிக்கைத் தொடர் இது. இலட்சக்கணக்கான வாசகர்களைச் சென்றடைந்து தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடரின் நூல் வடிவம். இளைஞர்களின் தன்னம்பிக்கையைத் தட்டி எழுப்பும் பணியை தவறாமல் செய்கிறது.

ஒவ்வொரு கட்டுரையும் படிப்பவர்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும் வகையில் இருப்பது சிறப்பு. மிகப்பெரிய வரவேற்பையும், பாராட்டையும் பெற்று இன்றும் தன்னம்பிக்கை நூல்களின் வரிசையில் தனியிடம் பிடித்துள்ள நூல் இது.

அன்னை : வாழ்க்கை அழகானது

அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாறை எளிய உரைநடையில் சொன்ன நூல்img_8644-e14575223231281. அவருடைய சமூக மத பின்னணியையும் சேர்த்தே அலசியதன் மூலம் இந்த நூல் சிறப்பிடம் பிடிக்கிறது.

அன்னை தெரசாவின் சிறு வயது வாழ்க்கை முதல், அவரது மரணம் வரையிலான பணிகளின் தொகுப்பாக இந்த நூல் அமைகிறது. ஏன் இந்த பணிக்கு அன்னை தெரசா வந்தார். அதற்கு அவர் சந்தித்த இன்னல்கள் என்னென்ன ? கிறிஸ்தவத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அவர் சந்தித்த சிக்கல்கள் என்னென்ன என்பதையெல்லாம் இந்த நூல் விவரிக்கிறது.

ஐடியில் வேலை வேண்டுமா

ஐடி நிறுவனம் இளைஞர்கit-job1ளை வசீகரிக்கும் ஒரு இடமாக இருக்கிறது. சவால்களை விரும்புவோருக்கும், தொழில்நுட்பத்தின் தோள்களில் பயணிக்க விரும்புவோருக்குமான தளம் இது. இதில் கிடைக்கின்ற பணத்தைத் தாண்டி பல்வேறு உளவியல், உடலியல் பிரச்சினைகள் இந்த தளத்தில் உண்டு.

இந்த துறையில் வேலைக்குச் சேர என்னென்ன அவசியம், எப்படியெல்லாம் தயாராக வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு அறிமுக நூல் இது. மாடல் கேள்வித்தாள்களுடன் ஒரு வழிகாட்டும் நூல். ஐடி துறையின் நீண்ட நெடிய அனுபவத்தின் கிளைகளிலிருந்து இந்த நூல் உருவாகியிருக்கிறது.

குழந்தையால் பெருமையடைய வேண்டுமா ?

பிளாக் ஹோல் மீடியா பதிப்பகம் வழியாக உருவான நூல் இது. கவிதை உறவு Xavier Kids Bookஅமைப்பின் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றது. பல பதிப்புகள் கண்டு மிகப்பெரிய வெற்றியடைந்த நூல் இது.

குழந்தைகளை வளர்ப்பது எப்படி ? அவர்களுடைய குணாதிசயங்களைக் கட்டியெழுப்புவது எப்படி ? அவர்களை பாதுகாப்பது எப்படி ? சமூகத்தில் பயனுடையவர்களாக அவர்களை உருவாக்குவது எப்படி என பல்வேறு கேள்விகளுக்கான விடைகள் இதில் உள்ளன. சர்வதேச உளவியலார்களின் சிந்தனைகளையும், நமது கலாச்சார, பாரம்பரிய மதிப்பீடுகளையும் இணைத்துக் கட்டிய நூல் இது.

டிப்ஸைப் படிங்க, லைஃப்ல ஜெயிங்க‌

வாழ்க்கையை வளமாக்க நல்ல டிப்ஸ் கிடைத்தால் எத்துணை நன்று. அப்படி my-next-book1நல்ல டிப்ஸ்களின் தொகுப்பாக மலர்ந்திருக்கிறது இந்த நூல். பிளாக் ஹோல் பதிப்பகத்தின் சிறப்புத் தயாரிப்பு. என்னென்ன தலைப்புகளில் கட்டுரைகள் வேண்டும் என அலசப்பட்டு, அதற்கான தகவல்களைத் திரட்டி உருவான நூல் இது.

வெற்றிகரமான இந்த நூல் நான்கு பதிப்புகளுக்கு மேல் கண்டு பெரும் வெற்றியடைந்த நூல். படிப்பவர்களை நிச்சயம் எமாற்றாது என்பதை மட்டும் உறுதியாய் சொல்லிக் கொள்ளலாம்.
மஹிந்த ராஜபக்ஷே

Xavier Book

தமிழினம் மறக்காத, மன்னிக்காத பெயர். ஈழத்தின் இதயத்தில் ஈட்டி பாய்ச்சும் பெயர். ஈழத் தமிழர்களின் ஈரக் கண்ணீருக்குக் காரணமான ஒரு சர்வாதிகாரி.

இந்த நூல் ராஜபக்ஷே எனும் மனிதரை அவருடைய சிறுவயது காலம் முதல், முள்ளி வாய்க்காலில் தமிழினத்தின் மீது நிகழ்த்திய வரலாற்று வலி வரை பிந்தொடர்கிறது.

அவரது பலம், பலவீனம், சூழ்ச்சி, ராஜதந்திரம், வஞ்சம், வன்மம், இன எதிர்ப்பு எல்லாவற்றையும் சேர்த்தே இந்த நூல் அலசுகிறது.

நீயும் வெல்வாய்
சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம் நூல் கொடுத்த இமாலய வரவேற்பின் பின்னணியில் உருவானneeyum-velvaai1 Xavier இரண்டாவது நூல் நீயும் வெல்வாய். தன்னம்பிக்கை சிந்தனைகளின் அடிப்படையில் மிக எளிமையாய் உருவான நூல் இது. சின்னச் சின்ன கட்டுரைகள், மிகப்பெரிய சிந்தனைகள் எனும் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நூல் இது.

இந்த கட்டுரைகள் பல்வேறு கல்லூரி, பள்ளி மாணவர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட நூல். தன்னம்பிக்கை நூல்களின் பட்டியலில் இதற்கும் ஒரு சிறப்பிடம் உண்டு.

நிக் வாயிச்சஸ்

nick1 xavier
தமிழின் மிக முக்கியமான நூல்களில் ஒன்று இது. இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாத நிக் வாயிச்சஸ் எனும் தன்னம்பிக்கை மனிதரின் அசாதாரண பணிகளைப் பற்றிய நூல் இது.

கைகளும், கால்களும் இல்லாத ஒரு மனிதன் எப்படி உலக நாடுகள் அனைத்திலும் பயணித்து கோடிக்கணக்கான மக்களின் தன்னம்பிக்கையைத் தட்டி எழுப்ப முடியும் ? அதற்குக் காரணம் என்ன ? அவருடைய உந்து சக்தி என்ன ? சிறுவயதில் தற்கொலை செய்து கொள்ள கடுமையாய் முயன்ற அவர் எப்படி பிற்காலத்தில் பல ஆயிரம் மக்களை தற்கொலை சிந்தனையிலிருந்து மாற்றினார் ?

நிக் வாயிச்சஸின் வாழ்க்கை நூல் ஒரு பாடம்.
பெண் : ரகசியமற்ற, ரகசியங்கள்

பெண்கள் வாழ்வின் கண்கள். பெண்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் வாழ்க்கை என்பதே இல்லை. பெண்கpenn1_Xavierளைத் தவிக்க விட்டுப் பார்த்தால் வாழ்வதில் அர்த்தமே இல்லை. அத்தகைய பெண்களுக்கு இன்றைக்கு சமூக, பணியிட, குடும்ப தளங்களில் சவால்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஏமாற்றும் கண்ணி வெடிகள் பாதங்களுக்குக் கீழ் மறைவாக இருக்கின்றன.

இந்த நூல் பெண்களுக்கு விழிப்புணர்வு தரவும், பெண்கள் பாதுகாப்பாய் இருக்கவும், பெண்கள் குடும்ப உறவுகளில் சிறந்து விளங்கவும், பெண்கள் சமூக அரங்கில் வெற்றிகளைப் பெற்றுக் கொள்ளவும் வழிகாட்டுகிறது. பெண்ணே நீ, தேவதை, அவள் விகடன் போன்ற பெண்கள் பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. கூடவே நூலுக்காக சிறப்பாகத் தயாரித்த கட்டுரைகளும் உண்டு.
தெரியும் ஆனா தெரியாது

தொழில்நுட்பத்தின் பின்னணியை அலசும் நூல். பள்ளி, கல்லூரிகளிtheriyum-aanaa-theriyaathu1ல் பெரும் வரவேற்பைப் பெற்ற நூல். நமக்குத் தெரிந்த தொழில்நுட்பங்களைப் பற்றி விரிவாக இந்த நூல் பேசுகிறது. உதாரணமாக ஏடிஎம் தெரியும். அதில் எப்படி பரிவர்த்தனை நடக்கிறது. தகவல்கள் எங்கே சரிபார்க்கப்படுகின்றன ? என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன ? உங்கள் தகவல்கள் எப்படியெல்லாம் களவாடப்படலாம் ? எப்படி மிக வேகமாக ஏடிஎம் செயல்படுகிறது போன்றவற்றை இந்த நூல் விளக்கும்.

இதே போல, புளூடூத், பிஓஎஸ் மெஷின், கிரடிட் கார்ட், என்.எஃப்.சி என பல்வேறு தொழில்நுட்பங்களை மிக எளிமையாய் விளக்குகிறது இந்த நூல்.

வாங்க ஜெயிக்கலாம்.

vaanga%20jeyikkalaam1
பெண்களுக்கான சிறப்புக் கட்டுரைகளின் தொகுப்பு. பெண்களின் பாதுகாப்பு, வாழ்க்கைத்தரம், சமூக பங்களிப்பு என அனைத்து விஷயங்களையும் இந்த நூல் பேசுகிறது.

இந்த தகவல் தொழில்நுட்ப உலகில் பெண்களுக்கு என்னென்ன நவீன அச்சுறுத்தல்கள் வரலாம் என்பதையும், அதை எப்படி மேற்கொள்வது என்பதையும் இந்த நூல் பேசுகிறது.

பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு இது.

வேலை நிச்சயம்

இன்றைக்கு வேலை வாங்குவது மிகப்பெரிய சவாலாகியிருக்கிறது.velai-nichayam%2011 காரணம் கடுமையான போட்டி நிறைந்த உலகம் இது.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, குழு உரையாடல், ஹைச்.ஆர் இன்டர்வியூ, டெக்னிகல் இன்டர்வியூ, என பல தளங்களைத் தாண்டி வேலை எனும் கோப்பையைக் கைப்பற்ற வேண்டியிருக்கிறது. அந்த நிலைகளையெல்லாம் எப்படி வெற்றிகரமாய்த் தாண்டுவது என்பதை இந்த நூல் பேசுகிறது.

நூலாசிரியரின் பல ஆண்டு கால இன்டர்வியூ நடத்திய அனுபவம் இந்த நூலை ஒரு பிராக்டிகல் நூலாக உருமாற்றியிருக்கிறது.

வெள்ளக்காரன் சாமி

vella-kaaran-saami1

முதல் சிறுகதைத் தொகுப்பு. பெரும்பாலான கதைகள் பல்வேறு கால இடைவெளியில் வெளியானவை. கல்கி, குமுதம், அம்பலம், சண்டே இந்தியன், புதிய பார்வை, தென்றல், வெற்றிமணி உட்பட பல்வேறு இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு இது.

சுஜாதா உட்பட பல்வேறு எழுத்தாளர்களின் பாராட்டுகளையும், பரிசுகளையும் பெற்ற சிறுகதைகள் இந்த நூலில் உள்ளன. பல போட்டிகளில் வென்ற கதைகளும் இதில் அடக்கம்.

சாலமோன்
சாலமோன் மன்னன் ஞானத்தின் உச்சமாய் வாழ்ந்தவர். கிமு 700களில் வாழ்ந்த இவருடைய சிந்தனைகள் கிறிஸ்தவர்களின் புனித நூலான விwrapper-solomonவிலியத்தில் உள்ளன. வியப்பும், பிரமிப்புமான சிந்தனைகள் இவருடைய எழுத்துகளில் நிரம்பியிருக்கின்றன.

திருக்குறளில் திருவள்ளுவர் கூறியிருக்கும் கருத்துகளில் பல சாலமோன் மன்னனாலும் கூறப்பட்டிருப்பது சிறப்புச் செய்தி. இந்த நூல் சாலமோன் மன்னனின் சிந்தனைகளை கவிதை நடையில் எளிமையாகவும், இனிமையாகவும் வாசகர்களுக்கு அளிக்கிறது.

தமிழில் சாலமோன் பற்றி வந்த‌ முதல் கவிதை நூல் இது என்பது சிறப்பு !

 

அப்துல்கலாம் : ஒரு கனவின் வரலாறு

அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அவருடைய குணாதிசயங்களை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்ட நூல். தொழில்நுட்பம் சார்ந்த சாதனைகளில் அவருடைய பெயர் எப்போwrapper-abdul-kalamதுமே பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் அப்துல்கலாமை நாம் கொண்டாடுவதன் முக்கிய காரணம் அவருடைய சாதனைகள் என்பதைத் தாண்டி, அவருடைய குணாதிசயம் என்பதை நாம் வியப்போடு ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

எளிமை, நேர்மை, உண்மை போன்றவற்றில் அப்துல்கலாம் அவர்கள் காட்டிய நேர்த்தி பிரமிக்க வைக்கிறது. பொருளாதாரத் தேடல் இல்லாத, கிடைப்பதில் திருப்தியடைகிற அவருடைய மனம் வியப்பின் விஸ்வரூபம். இந்த நூல், அப்துல் கலாமின் இளமைக் காலம் முதல் அவருடைய மரணம் வரையிலான பயணத்தை பதிவு செய்கிறது.

அப்துல் கலாமின் இளமை, பணி, வாழ்க்கை, குணாதிசயம், சிந்தனைகள் என எதையும் தவற விடாத கவனத்துடன் நேர்த்தியாக பின்னப்பட்ட நூல் இது. தோழமை வெளியீடு.

குழந்தை வளர்ப்பு

பெற்றோருக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது தனதுகுழந்தைகளை வளkidர்ப்பது தான். குழந்தைகளை உடலளவிலும், மன அளவிலும் ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது இரட்டை சவால். அந்த சவாலை சாதனையாய் மாற்றும் வித்தையை மிக எளிமையாக 170 டிப்ஸ்களின் வாயிலாக விளக்குகிறது இந்த நூல். அத்துடன் குழந்தைகளின் பாதுகாப்பு, அவர்களுக்குத் தரவேண்டிய எச்சரிக்கை உணர்வுகள், தொழில்நுட்ப அலையில் அலைக்கப்படாமல் அவர்களைப் பாதுகாத்தல் என பல விஷயங்களும் இந்த நூலில் உள்ளன.

மருத்துவ நிபுணர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்ற பயனுள்ள நூல் இது.

அன்னை : வாழ்க்கை அழகானது

download-1

 

 

 

திருத்தப்பட்ட இரண்டாவது பதிப்பு. சில விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளன, மற்றபடி இது முதல் நூலின் இன்னொரு பிரதியே.

 

கணவன் மனைவி : காதலின்றி அமையாது உலகு

இனிமையான இல்லறமே ஒரு குடும்பத்தை குட்டி சுவர்க்கமாக மாற்றும். தம்பதியர் அன்னியோன்யமாய் இருந்தால் ஆரோக்கியமான குடும்பம் அமையும். familyஆரோக்கியமான குடும்பங்கள், நல்ல சமூகத்தைக் கட்டியெழுப்பும். நல்ல சமூகங்களே நாட்டை மாற்றியமைக்கும். எனவே தம்பதியர் ஆழமான புரிதல், அன்பு கொண்டு ஒழுக வேண்டியது அவசியம். ஆனந்தமாய் குடும்ப வாழ்க்கையை அமைக்க விரும்புபவர்களுக்கு இந்த நூல் ஒரு அழகிய கையேடு.

ஜெர்மனிலும், லண்டனிலும் வெளியாகும் வெற்றிமணி நூலில் “நல்ல தம்பதியராய் வாழ்வது எப்படி ?” எனும் தொடராய் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். அது தவிர தம்பதியினருக்கும், குடும்பத்தினருக்கும் பயனளிக்கும் சில சிறப்புக் கட்டுரைகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நூலைப் படிக்கும் தம்பதியர் நிச்சயம் பயன்பெறுவர் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.

 

இயேசு : வரலாறு

இறைமகன் இயேசுவின்  வாழ்க்கை வரலாறு உரைநடை வடிவில்.

wrapper-jesus-003எளிமையாய்ப் புரிந்து கொள்ளவும், வரலாற்றுப் பின்னணியில் இயேசுவை அறிந்து கொள்ளவும் இந்த நூல் உதவும்.

கிழக்கு பதிப்பக வெளியீடாய் முதலில் வந்த நூல். திருத்தங்களுடன், இரண்டாம் முறையாக தோழமையில் வெளியாகிறது.

இயேசுவைப் பற்றி முழுமையாய்த் தெரிந்து கொள்ள விரும்புவோருக்கான மிகச் சரியான நூல் இது.
கே: பாலசந்தர்

wrapper-sigaram-k-balachanderஇயக்குநர் சிகரம் கே : பாலசந்தர் வாழ்வும் படைப்பும் நூல் அவரைப் பற்றிய முழுமையான ஒரு பதிவு. கே.பாலசந்தரின் படைப்புகளை ஒரு சினிமா ரசிகனாக இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நூல், இயக்குநருக்கு பதிப்பாசிரியரின் காணிக்கை.

இந்த நூல் திரை ரசிகர்கள் மத்தியிலும், திரை கலைஞர்கள் மத்தியிலும் அன்புடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட நூல். சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத நூல்களில் ஒன்று.

தோழமை பதிப்பகம்.

 

 

 

 

வாழ்க்கையும் எழுத்துகளும் அன்பை மட்டும் முன்னிறுத்துகையில் வணக்கத்துக்குரியவை ஆகி விடுகின்றன. வெறுப்பையோ, பிரிவினைகளையோ உருவாக்காமல் நட்பையும், அன்பையும், தகவல்களையும் பகிரவேண்டும் என்பதே என் எழுத்துகளின் நோக்கம். காலத்தின் பாதையில் பல எழுத்துகள் தவறிழைத்திருக்கலாம், காயப்படுத்தியிருக்கலாம், பாதை விலகியிருக்கலாம். நண்பர்களாகிய உங்களிடம் அதற்கா பணிவான மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்னமாய் மாறி அல்லன விடுத்து நல்லன எடுத்து நட்புடன் தொடர்க என அன்புடன் வேண்டுகிறேன்.

எனது நூல்கள்

1. ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும் (கவிதை)

2. மன விளிம்புகளில்(கவிதை)

3. நில் நிதானி காதலி (கவிதை)

4. கல் மனிதன். (கவிதை)

5. இயேசுவின் கதை/ஒரு புதுக்கவிதைக் காவியம். (கவிதை)

6. அன்னை ( அன்னை தெரசாவின் வாழ்க்கை ) (கவிதை)

7. கி.மு / விவிலியக் கதைகள் ( கதைகள் )

8. இயேசு என்றொரு மனிதர் இருந்தார் (வரலாறு )

9. கிறிஸ்தவம் – ஒரு முழுமையான வரலாறு

10. அலசல் – கட்டுரைத் தொகுப்பு.

11. ஷாரூக்கான் – Man of Positive Energy

12. ராஜபக்ஷே – சூழ்ச்சியும், தந்திரமும்

13. ராகுல்காந்தி – மாற்றங்களின் நாயகன்

14. டிப்ஸைப் படிங்க, லைஃப்ல ஜெயிங்க

15. வாங்க ஜெயிக்கலாம் ( கட்டுரைகள் )

16. குழந்தைகளால் பெருமையடைய வேண்டுமா ? ( கட்டுரைகள் )

17. ஐ.டி யில் வேலை வேண்டுமா ? (வழிகாட்டும் நூல் )

18. ஏன் சாப்பிட வேண்டும் மீன் ?

19. சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம் (தினத்தந்தி தன்னம்பிக்கைக் கட்டுரைகள் )

20. நிக் வாயிச்சஸ் : வாழ்க்கை வரலாறு.

21. நீயும் வெல்வாய் (தன்னம்பிக்கை நூல் )

22. தெரியும் ஆனா தெரியாது

23. வெள்ளக்காரன் சாமி ( சிறுகதைகள் )

24. வேலை நிச்சயம் ( வழிகாட்டும் நூல் )

25. சேவியர் கவிதைகள் காவியங்கள் ( உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை)

26. அன்னை .. வாழ்க்கை அழகானது.

27. இயேசு வரலாறு

28. சாலமோன் . நீதிமொழிக் கவிதைகள்

29. பெண் . ரகசியமற்ற ரகசியங்கள்

30. படிகளில் அமர்ந்திருக்கும் கதைகள்.

7 comments on “நூல்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.