கட்டம் – 13 ( நிறைவு )

வேலை கிடைக்கும் மோகன்,
கவலை எதற்கு ?

இவையெல்லாம்
தற்காலிகத் தோல்விகள் தான்.

கற்காலக் தவறுகளுக்காய்
கவலைப் படுவதும்,
தற்காலத் தோல்விகளுக்காய்
தற்கொலை செய்வதும்,
மனித வாழ்வின் பலவீனங்கள்.

உனக்குத் திறமை
இருக்கிறது,
மேகத்தை உருவாக்கியே
நீர் பிழியும் திறமைசாலி நீ.

இன்னொரு கிரகத்தைக் கூட
நீ நினைத்தால்
உருவாக்கலாம்,
வானத்தின் ஒரு துண்டை இழுத்து
அதன் மேல் போர்த்தவும் செய்யலாம்.

உனக்குத் தான்
பயிர்களைப் பாதுகாக்கும்
வித்தை தெரியுமே.

எங்கே எதை எப்படி
நகர்த்தவேண்டும் என்பதில்
உனக்கு
சதுரங்கச் சாமர்த்தியம்.

விதை முளைக்கும் வரை
மூச்சு விடாமல் காத்திருக்கும்
பூமியின்
பொறுமை உனக்கு.

வருத்தப்படாதே
வருத்தங்கள் எதையும்
வருவித்து விடாது,
நோய்களைத் தவிர.

சிந்தி,
சவால்களை சந்தி.

உன்னுடைய விவரங்களை
எனக்கும் கொடு,
தெரிந்த இடத்தில் நுழைந்து
உனக்கான வேலை வேட்டையில்
நானும் சில
அம்புகளை விடுகிறேன்

சிரித்தபடியே
கண்ணன் சொல்லச் சொல்ல
மோகனின் மனசில்
பாரம் கூடியது.

மோகன் கண்ணனின்
கரம் பற்றினான்,
விழிகளில் கண்ணீர் துளிர்த்தது.

அது சரி கண்ணன்,
நீ என்ன இங்கே ?
மோகன் கொஞ்சம் இயல்புக்கு
வந்து வினவினான்.

என் மனைவி
இன்று அமெரிக்கா வருகிறாள்.
என்
சுவாசத்தின் சரிபாதியைச் சந்திக்க
இதோ
விமானங்களின்
முதுகைப் பார்த்தபடி
நகம் கடித்துக் காத்திருக்கிறேன்.

உனக்கு
கல்யாணம் ஆயிடுச்சா
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
மோகன் உற்சாகமானான்.

யாருடா பொண்ணு ?

வேற யாருடா ?
நான் காதலித்துக் கொண்டிருந்த
என்
மாமன் வீட்டு மல்லிகை
உமா தான்.

கண்ணன் சொல்லி முடித்ததும்
உமாவா ???
என்று ஆச்சரியத்தில் அலறிய
மோகனை
வித்யா  வித்தியாசமாய் பார்த்தாள்.
———————-

 உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.  கருத்துக்கள் சொல்ல விருப்பமில்லையேல் ஒரு 49 ஓ வாவது போட அழைக்கிறேன் :))

அன்புடன்/சேவியர்

18 comments on “கட்டம் – 13 ( நிறைவு )

 1. Hi Xavier
  This is mugunthan prakash friend.really i like ur kavithai,no no no i live in ur words.kindly continue this.
  Thanks for again take me to my college days….

  Regards
  Mugunthan

  Like

 2. வணக்கம் சேவியர்!

  உங்கள் நகர்த்தல் அற்புதம். உண்மையைச் சொல்லப் போனால் நீங்கள் எழுதும் கவிதைகள் எல்லாமே அற்புதம்தான்.

  Like

 3. மிக அருமையான கவிதை, படிக்க நன்றாக இருநதது.

  Like

 4. kavithaiyum thalaippum migap porutham. ippadiyum silar punithamana natpai payanpaduthukirargal. muthal munru pagathil, kannan sathuranga kaigalai nagartha pogiran enru ninaithen, piragu therinthathu avan sathurangathil vizhthapatta oru raja. I liked it, its good and fast paced.

  Like

 5. சிறிது நேரம் மனதை
  நிறுத்தி, கட்டி வைத்தன
  உங்கள் வரிகள்
  உள்ளத்தை உலுக்கி
  நெஞ்சத்தை நெகிழ
  வைத்துவிட்டன
  உங்கள் எழுத்துக்களை
  நேசிக்கிறேன்

  Like

 6. Arputhamana Kavithai (kathai). 🙂
  ipadiyum manithargal iruka thaan seigiraargal..
  Kadhal tholvi enraalum mudivil summogamaai mudithirupathu arumai..
  miga sariyana thalaipu..

  Like

 7. சில விசயங்களுக்கு மௌனம்தான் பதிலாக அமைகிறது. உங்கள் நகர்த்தல் கவிதை படித்தபோது என்னிடம் வந்ததும் மௌனமே…. மோகனின் நிலையில் வந்த மௌனம் அல்ல.. கண்ணனின் நிலையில் வந்த மௌனமே.

  Like

 8. Mika chirantha Kavithai Kathai!..Thangalthu sirappana katpanai valamum, netrthiyana chotkalin anivakuppum, ennai piramikka cheithu vittathu! Koora Varthaikal Illai! Thaangal menmelum Valara Valthum!..

  Ungal Nanban,
  Endrum Anbudan,
  Thamarai chandiran

  Like

 9. நான் பொதுவா தொடர் கதையோ கவிதையோ படிப்பது கிடையாது. ஆனால், இந்த சதுரங்க காதல், அந்த தடையை முறியடித்து விட்டது. எப்படி சொல்றது, கதையை கவிதையாய் சொல்லிருக்கிறீர்கள், அல்ல.. கவிதையை கதையாய் சொல்லிருக்கிறீர்கள். மிக அருமை, தொடரட்டும் உங்கள் தமிழ் தொண்டு!!!

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.