முதலிரவு…

 முதலிரவு என்னும் தலைப்பில் ஒரு திரைப்படப் பாடல் எழுதச் சொன்னால் இப்படித் தான் எழுதியிருப்பேன்…

.

.
அச்சப்பட்டு வெக்கமும்
வெக்கப்பட்டு அச்சமும்
வெளியேறிப் போனதொரு ராத்திரி – அது
சத்தமிட்ட முத்தமும்
முத்தமிட்ட சத்தமும்
முக்காடிட்டுப் போன முதல் ராத்திரி.

0

ஏட்டுச் சுரைக்கா
உதவும் கறிக்கா ?
இல்லையிண்ணு சொன்னதடி பாடமே – நான்
கண்டதில்லை அன்று வரை நாணமே.

விரலில் பழுதா
இதயம் விழுதா
சேலை ஓரம் தொட்ட போதும் கூசுதா – நீ
பொத்தி வெச்ச மூச்சுக் காத்து பேசுதா ?

துவங்கும் முன்னமே துவண்ட சின்னமே
அழைக்கும் கன்னமே எனது கிண்ணமே
விட்டு விடு வாழை மர நாணமே – நீ
வெட்ட வெட்ட மீண்டும் முளை காணுமே.

0

முதலில் முத்தமா
விரல்கள் யுத்தமா ?
சொல்லி விடு பார்வையாலே பாவையே – உன்
சம்மதமும் சக்தி தரத் தேவையே.

முடிவில் முக்தியா
கற்ற யுக்தியா
கூச்சரிக்கும் ஆசை நெஞ்சில் வீசுதே – நீ
உச்சரிக்கும் பாஷை பிஞ்சில் காயுதே.

துணிந்து முன்னணி வந்தேன் கண்மணி
பணிந்து கொள்ளடி செய்வோம் கூட்டணி
விட்டு விடு வெட்கக் கடல் போகட்டும் – அலை
விட்டு விட்டு நம்மைத் தொட்டு ஓடட்டும்.

0

Advertisements

7 comments on “முதலிரவு…

 1. இனிய சேவியர்,

  நன்றாக வந்திருக்கிறது.

  மெட்டிற்கு முணுமுணுத்தீர்களா, ஏனென்றால் இசையமைப்பாக வரும்போது கொஞ்சம் அங்கே இங்கே வார்த்தைகளைச் செதுக்கவேண்டுமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

  நா-ண-மே
  போ-கட்-டும்
  கா-ணு-மே
  ஓ-டட்-டும்

  கடைசி வார்த்தைகளை இப்படித்தான் பிரித்துப் பாடவேண்டும் போலத் தோன்றுகிறது.

  அன்புடன்
  ஆசாத்

  Like

 2. வாவ்..அழகான டெம்ப்ளேட் மச்சி..!

  நல்லா இருக்கு…! எப்டி செய்ஞ்சீங்க பாஸ்…?

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s