பார்த்த இடத்திலெல்லாம்…

காதல்
காற்று என்றார்கள்
நீ சூறாவளியாய் வீசுகிறாய்
அதையும்
அதிகப்படியான அன்பென்றே
அர்த்தப்படுத்திக் கொள்கிறேன்.
 

நான் எழுதும் கவிதைகளில்
நம்மைக் காண்கிறேன் நான்
என்னை மட்டுமே
காண்கிறாய் நீ.
நீ
வாசகியாகி நேசிக்கிறாய்
நான்
வாசகியை நேசிக்கிறேன்.

கடித்த பாம்பின்
விஷம் விலக்க
கடித்த பாம்பையே பிடித்து
மீண்டும்
கடிக்க வைப்பார்களாம்.
கதை சொன்னாள் பாட்டி.

காதல் !!

பனியைத் தொட்டால்
சிலிர்க்கிறது,
நெருப்பைத் தொட்டால்
சுடுகிறது,
நெருங்கினால் மட்டுமே
நேர்கின்றன எல்லாம்.

காதலில் மட்டும்
விலகினால்.

காதல் அருவி போல
குளித்தால்
மனதுக்குள் சரணம் துலங்கும்
குதித்தால்
உயிருக்குள் மரணம் துவங்கும்.

நீ சிரித்தாலும்
இமைத்தாலும்
காதலெனக் கற்பிக்கிறேன் நான்.
பேசும்போது மட்டும்
இல்லவே இல்லையென
ஒப்பிக்கிறாய் நீ.

காதல்
செதுக்கும் என்கிறார்கள் சிலர்,
சிதைக்கும் என்கிறார்கள் சிலர்.

எவ்விதமெனினும்
காலங்காலமாய்
காதலால் தான் மாற்றம் நேர்கிறது
மனிதர்களுக்கு,
மனிதர்களால் மாற்றம் நேர்வதில்லை
காதலுக்கு !

நீ
என் தேவதை என்றேன்
சிறகெங்கே என்கிறாய்,
காதலித்தால் முளைக்கும்
என்கிறேன் நான்.

2 comments on “பார்த்த இடத்திலெல்லாம்…

  1. I liked the comparision between Kaadhal and Aruvi…

    “Kulithaal …saranam”…
    “Kuthithaal …maranam”

    Vaazhthukkal Xavier..!!!!

  2. //காதல்
    செதுக்கும் என்கிறார்கள் சிலர்,
    சிதைக்கும் என்கிறார்கள் சிலர்.//

    உண்மையான வரிகள். காதல், செதுக்குமா சிதைக்குமா என்பது எப்போதுமே புரியாத புதிர்தான் சார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s