விழிகளால் சிரிக்கிறாய்…


ஒருமுறை நீ சிரித்தபோது
இதயம் கொஞ்சம்
இடம் மாறியதோ என யோசித்தேன்.
மறு முறை
யோசிக்காமல் இதயத்தை
இடம் மாற்றிக் கொண்டேன்.

உன் விலகலை
ஓர் புன்னகையோடு தான்
ஒத்துக் கொண்டேன்.
நல்லவேளை
அகத்தின் அழுகை முகத்தில் தெரியவில்லை.

  

எதுவும் நிலையில்லையடி
அதை
உன் விலகலில் தான்
எனக்கு உணர்த்த வேண்டுமா ?

  

உன் காதலுக்குப் பரிசாய்
எதையேனும் தர நினைக்கிறேன்
எதுவும் உயர்வாய் தெரியவில்லை
உயர்வாக இருப்பதெல்லாம்
உன்னிடமே இருக்கின்றன !

 

துவக்கமும் முடிவும் இல்லாதது
காதல் என்கிறார்கள்.
நான் துவங்கி வைத்தேன்
நீ முடித்து வைக்கிறாய்
பழமொழி பழசாகிப் போகிறதோ ?


யாரையும் நேசிக்க யாரும்
கற்றுத் தருவதில்லை.
உன்னை நேசிக்க வேண்டாமென்று
கற்றுத் தர மட்டும்
சுற்றித் திரிகிறது சுற்றம்.

உன் உதடுகள்
நிறுத்தாமல் சொல்லும் பொய்க்காய்
தலைகுனிகின்றன உன் இமைகள்.
நிமிரும் போது
நிஜம் சொல்லி நனைகின்றன கண்கள்.


உன் சிரிப்புக்குள்
என்னதான் இருக்கிறதோ ?
அது தான் என்
பிடிவாதங்களுக்கெல்லாம்
தற்கொலை முனையாகிறது.

Advertisements

4 comments on “விழிகளால் சிரிக்கிறாய்…

 1. //யாரையும் நேசிக்க யாரும்
  கற்றுத் தருவதில்லை.//
  நிஜமான வார்த்தைகள்.

  //உன்னை நேசிக்க வேண்டாமென்று
  கற்றுத் தர மட்டும்
  சுற்றித் திரிகிறது சுற்றம்.//
  நடைமுறை எதார்த்தங்கள்.

  கவிதை மிக எதார்த்தமாக நன்றாக உள்ளது.

  Like

 2. யாரையும் நேசிக்க யாரும்
  கற்றுத் தருவதில்லை.
  உன்னை நேசிக்க வேண்டாமென்று
  கற்றுத் தர மட்டும்
  சுற்றித் திரிகிறது சுற்றம்.

  எதுவும் நிலையில்லையடி
  அதை
  உன் விலகலில் தான்
  எனக்கு உணர்த்த வேண்டுமா ?

  Simply Superb….

  Vaazhthukkal Xavier.

  Like

 3. அடேய்…
  உன்னைப் பிருந்து
  என்னை இழந்து – இங்கே
  நம் இதயம் துடிக்கிறதே

  எனது கவிதைகளையும் ஒரு வலைப்பூவில் இட ஆரம்பித்திருக்கிறேன். நானும் ஒரு கவிஞனாகும் முயற்சியில் எழுதியது. ஏற்கனவே எழுதியவை தான், இருந்தாலும் உங்களைப்போல் ஒவ்வொரு நாளும் ஒரு கவிதை என்று இடலாம் என்று உத்தேசம்.

  தயவு செய்து உங்களுக்கு எதிர்க்கடை போடுகிறேன் என்று எண்ண வேண்டாம்.

  http://kavithaikal.wordpress.com/

  ______
  CAPital

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s