காக்கைச் சிறகினிலே….

 

.

காக்கைச் சிறகினிலே நந்தலாலா
என
நெக்குருகிப் பாடுகிறாய்
கருப்பென்று என்னை
நிராகரித்துப் போன
அதே நாவுடன்.

 எல்லோரும்
காதலை வெளிக்காட்டி இருந்தால்
உனக்கான
பட்டியல்
எத்தனை பெரிதாயிருக்கும் ?

இப்போதெல்லாம்
கொலை செய்துவிட்டுக் கூட
சாரி சொல்லிக்
கடந்து போகலாம்.

அவளைப் போல.

உன்னுடைய
சிரிப்புகளையெல்லாம் சேமித்து
அழியாத குடுவையில்
அடைத்து
ஆழமாய் புதைக்க வேண்டும்.

எதிர்கால சந்ததிக்கும்
ஏதேனும்
புதையல் வேண்டுமல்லவா.

இறுக்கிப் பிடித்த
ஜீன்ஸும்,
இளமை பிரச்சாரமான
டி-சர்ட்ம் அணிந்து
கலவர வேர்களை
எனக்குள் படரவிட்டுக்
கடந்து போன அவள்
புள்ளியாய் மறைந்தபின்
போலியாய் சொன்னேன்

இந்தக் காலத்து பிள்ளைங்க…

Advertisements

11 comments on “காக்கைச் சிறகினிலே….

 1. Xavier means “Ethartham”….All your kavithais remember the incidents in my life especially “Irukki piditha Jeans ….”

  Like

 2. Kalakaringa Xavier, romba romba iyalbana kavithai, illa nijamana varthai!! “எல்லோரும்
  காதலை வெளிக்காட்டி இருந்தால்
  உனக்கான
  பட்டியல்
  எத்தனை பெரிதாயிருக்கும் ?
  ” kadhaloda azham evalavu perusunnu ellaroda karpanaike vitrukinga!!

  Fantastic!

  Like

 3. Lovely… Lively…

  As others told… Yet another yethathamana… beauty from Xavier

  Again a special hats off to the picture selection… “ethir kala sandhathikku puthayal serkkum” picture mattum… It could have been a one with some more smile…

  Like

 4. இப்போதெல்லாம்
  கொலை செய்துவிட்டுக் கூட
  சாரி சொல்லிக்
  கடந்து போகலாம்.

  அவளைப் போல.

  arumai Xavier…

  Like

 5. இப்போதெல்லாம்
  கொலை செய்துவிட்டுக் கூட
  சாரி சொல்லிக்
  கடந்து போகலாம்.

  அவளைப் போல.

  arumai Xavier..

  Like

 6. அசத்திட்டீங்க சார். இப்பவே உங்களை நேர்ல பாக்கணும் போல இருக்கு. பிரமாதம்..அனைத்துக் கவிதைகளும்… டைம் இல்லாததால google reader ல போட்டு வச்சு படிச்சுட்டு இருக்கேன். முழுசா படிச்சதும்தான் பதில் போடணும்னு நினைச்சேன். இப்படி நடுநடுவுல பதில் எழுத வச்சிடுறீங்க

  //இப்போதெல்லாம்
  கொலை செய்துவிட்டுக் கூட
  சாரி சொல்லிக்
  கடந்து போகலாம்.

  அவளைப் போல.//

  இது உண்மையில் மனசை பாதித்து விட்டது.

  சென்ஷி

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s