காதல் வாக்குவாதம்

( கதை போல் ஒரு கவிதை. அல்லது கவிதை போல் ஒரு கதை )
 

அலைகள்
சிப்பிகளை
கரையில் இறக்கிவைக்க
அயராது அலைந்துகொண்டிருந்த
மாலை வேளை.

சூரியன்
கடலில் குளிப்பதற்காய்
கால்பதித்திருந்த
கண்கவர் மாலை.

0

தரையில் விழுந்த
அயிரை மீனின் முதுகு துடைத்து,
மீண்டும்
அருவிக்குள் விடும்
மெல்லிய மனதுக்காரியிடம்
காதலன் கேட்டான்.

அவன் :

என்ன முடிவு செய்திருக்கிறாய் ?
என் பெற்றோருக்காய்
நான்
பெற்றுக் கொண்டவளை
விட்டுவிட சம்மதமில்லை எனக்கு.

நீ சொல்,
ஊரை விட்டு வருவாயா ?

0

துடைத்துத் துடைத்து
தேய்ந்து போன
விழியோரங்களோடு
காதலி விசும்பினாள்.
 
அவள் :

ஊரை விடுவதை விட
உயிரை விடுவதே
எளிதெனக்கு.

எனக்கு
சிறகு முளைத்ததென்று
சொல்லித் தந்தவர்களின்
கூட்டை எரிக்க
என்
கட்டைவிரலுக்கும்
திட்டமில்லை.

0
அவன் :

உனக்கு முன்னால்
இரண்டு முடிவுகள் மட்டுமே.

ஏதோ ஒன்றை
நீ
இழந்தாக வேண்டும்.
எதை ?

சிந்தை துலக்கிச் சிந்தி
தந்தையா ?
என் கையா ?
எதைப் பற்றிக் கொள்கிறாய் ?

0

அவள் :
 
ஏற்கனவே
பற்றிக் கொண்டு தான் இருக்கிறேன்
என்
இறக்கை கருகும் வாசம்
உனக்கு வரவில்லையா ?

சிப்பியாய் முத்தை
தர வேண்டும்
என
தியானமிருக்கிறேன் நான்
தவம் கலைக்கிறாய் நீ.

அவன் :

சம்மதிக்காத சிப்பிக் கூட்டை
திறந்து கொண்டு
பறந்து வர
இன்னுமா வரவில்லை
உனக்கு
இரண்டங்குலச் சிறகு ?

அவள் :
 
பருந்தைக் கண்டு
பதறித் துடிக்கும் தாய்க்கோழியின்
இறகுச் சூட்டில்
வெப்பம் கண்டவள் நான்.

என் தாய்க்கோழிக்கு
நான்
குஞ்சாய் இருப்பதல்லவா
பருந்தாய் மாறுவதை விட
பரவசமானது ?

அவன் :
 
அப்படியென்றால்
என்
காதல் கரைகளை விட
உனக்கு
உன் அன்புச் சிறைகள் தான்
அவசியமா ?

அவள் :
தராசுத் தட்டுகளோடு
நான் வரவில்லை.
எனக்கு
வேர் வேண்டுமா நீர் வேண்டுமா
என்றால்
வேரில் விழும் நீர் வேண்டும்
என்பேன்.

நீயோ
வேரை அறுத்து
நீரில் இட நினைக்கிறாய்.

அவன் :
 
நீ
தண்ணீர் தேடுவது
பாலை நிலத்தின்
நீர் நிராகரித்த பகுதிகளில்.

இங்கே
உன் கண்ணீர் ஈரம் கூட
கரையிறங்கும் முன்
இறந்து விடும்.

எப்படிச் சேகரிப்பாய்
தோணி செலுத்துமளவுக்குத்
தண்ணீரை ?

அவள் :
 
ஏன்
கேள்விகளால் என்னை
சிலுவையில் அறைகிறாய் ?

என் தந்தையின்
இதயத்தில்
உறைந்து கிடக்கும்
பனிப்பாறைகளை
உன்
உண்மைக் காதலால்
உருக வை.

பாருக்குள் புகுமுன்
ஒரு முறை
என்
கூரைக்குள் புகு.

அவன் :
 
என் இல்லத்து
சிக்கல்களைச் சரிசெய்வேன்
நான்.
உன்
வீட்டு வலைகளை
நீதான் விலக்க வேண்டும்.

அவள் :
 
தீமிதிக்கும் தவளையாய்
திரிகிறேன் நான்
நீயும் ஏன்
என் பாதங்களுக்குக் கீழே
தீ வளர்க்கிறாய்.

சிறு
ஈரத் துணியாய்
இருந்து விடேன்.

அவன் :
 
எனக்காய்
எதையும் நிராகரிக்க விரும்பாத
உனக்காய்
ஈரத் துணியாய் விரிவதில்
உடன்பாடில்லை எனக்கு.

என் மேல்
நம்பிக்கை வைத்தால்
என் கைமேல்
உன் கை வை
இல்லையேல்
வறண்டு போன வைகை மடியாய்
என்
காதலையும்
சூரியச் சூட்டில் உலர வை.

அவள் :
 
நீயும் வேண்டும்
என்கிறேன் நான்,
நீ மட்டும் வேண்டுமென
வலியுறுத்துகிறாய் நீ.

காதலனின் பணி
காதலிப்பதும்
காதலிக்கப் படுவதும் தானா ?

எந்த
சிக்கல் சாலையை
சீரமைப்பதிலும்
இல்லையா ?

அவள் :
 
என்னோடு வா
இல்லையேல்
உன்னோடு வாழ்.

இதுவே இறுதி.
இனிமேல்
என் காதல் உணர்வுகளை
உன் வீட்டாரின்
காலில் விழ வைக்காதே.

அவள் :
 
விழுவதற்குத் தயங்கும்
தண்ணீர்
அருவியாகும் அழகை
இழக்கும்.

வளைவதற்கு தயாராகாத
மூங்கில்
இசை விளைவிக்கும்
நிலை இழக்கும்.

நீ
விழுவதை அழிவென்கிறாய்
விழுவதால்
விழுதாகலாம் என்கிறேன்
நான்.

விழவேண்டாம் நீ
ஒருமுறை
வளைந்தேனும் கொடுப்பாயா ?

அவன் :
 
வீரனுக்கு அழகு
வீழாமல் இருப்பதில் தான்.

அவள் :
 
புறமுதுகிடுதலும்
பின் வாங்குதலும் மட்டும்
போர் வீரனுக்குப்
பொருத்தமோ ?

கவசம் மாட்டிக் கொண்டு
குகைக்குள்
குடியிருப்பவனோடு
எனக்கென்ன பேச்சு.

உனக்கு
காதல் முக்கியமென்றால்
சமரசத்துக்குச் சம்மதி.
இல்லையேல்
என்
காதலுக்கு மேல்
சமாதி வைக்கச் சம்மதி.

அவன் :
 
என்னோடு
நடைபோடு,
இல்லையேல்
எனக்கு விடைகொடு.

அவள் :
 
வீரம் என்பது
வீழ்த்துவதில் மட்டுமல்ல
வாழ்த்துவதிலும் தான்.
போய் வாழ்.
வீரனாகவே வாழ்.

நீ
உன் வீரத்தை இழக்கவேண்டாம்
ஏனென்றால்
அதற்குப் பதிலாய்
இந்த வினாடியில்
உன்
காதலியை இழந்து விட்டாய்.

0

காதலரின் சண்டை
வெப்பத்தில்,
சூரியன் மூழ்கிப் போனபின்னும்
கரையில்
வெப்பம் கலையாதிருந்தது.

செருப்புகளில் குடியிருந்த
மணலை உதறிக்கொண்டே
காதலி
கடலுக்கு முதுகு காட்டி
நடக்கத் துவங்கினாள்.

0

கூடவே நடந்த காதலன்
அவளை
ஆட்டோ வில்
அனுப்பி வைத்துக் கொண்டே
சொன்னான்.
 


அவன் :

நாளை
கொஞ்சம்
சீக்கிரமாகவே வந்துவிடு.

கடலலை
பழக்கமான காட்சியைப் பார்த்து
வழக்கம் போல
சிரித்துக் கொண்டிருந்தது.
 
0

4 comments on “காதல் வாக்குவாதம்

 1. Marvelous… I would rate this as the best in the recent times from you.

  Some points…

  துடைத்துத் துடைத்து—
  தேய்ந்து போன– Ezhutthu Pizhai

  எனக்கு—
  சிறகு முளைத்ததென்று — Ezhutthu Pizhai

  சிந்தை துலக்கிச் சிந்தி
  தந்தையா ?- Ithu Puriyavillai… Please explain

  சிப்பியாய் முத்தை–
  தர வேண்டும் — Ezhutthu Pizhai

  சம்மதிக்காத சிப்பிக் கூட்டை–
  திறந்து கொண்டு — Ezhutthu Pizhai

  வேர் வேண்டுமா நீர் வேண்டுமா
  என்றால்
  வேரில் விழும் நீர் வேண்டும்
  என்பேன். – Indha variyil, Veril Vilum Neer endru sollum bothu neengal Nerai patri pesuvathaga ninakka thondrugirathu… How about this ?

  Verodu Neerum Serndhu Vendum Enben

  இங்கே
  உன் கண்ணீர் ஈரம் கூட
  கரையிறங்கும் முன்
  இறந்து விடும். – How about “karai irangum mun kaaindhu vidum” ?

  பாருக்குள் புகுமுன்
  ஒரு முறை
  என்
  கூரைக்குள் புகு – This line is the odd man out in the whole kavithai. Given the standard of the other lines in this kavithai… I felt this line to be unparlimentry… my personal feeling…

  தீமிதிக்கும் தவளையாய்–
  திரிகிறேன் நான்– Ezhutthu Pizhai

  எனக்காய்
  எதையும் நிராகரிக்க விரும்பாத
  உனக்காய்
  ஈரத் துணியாய் விரிவதில்
  உடன்பாடில்லை எனக்கு….How about this ….

  Enakkay
  ethayum izhkka virumbatha
  unakkay
  Eerathuniyay iruppathil
  ishtam illai enakku

  காதலனின் பணி
  காதலிப்பதும்
  காதலிக்கப் படுவதும் தானா ? Can this be …

  Kathalanin kadamai
  kadhalippathum
  kadhalikkappaduvathum thana ?

  எந்த
  சிக்கல் சாலையை
  சீரமைப்பதிலும்
  இல்லையா ?

  As I have mentioned a few days back, Here you are giving importance to the activity of Seeramaiththal… It would be good to give importance to the Sikkal Salai…

  Endha
  Sikkal Salaiyaiyum
  Seeramaippathil
  Illaiya?

  வளைவதற்கு–தயாராகாத
  மூங்கில்– Ezhutthu Pizhai

  Also, Can this be…

  வளைவதற்கு விரும்பாத
  மூங்கில்

  உனக்கு
  காதல் முக்கியமென்றால்
  சமரசத்துக்குச் சம்மதி.
  இல்லையேல்
  என்
  காதலுக்கு மேல்
  சமாதி வைக்கச் சம்மதி.

  How about this?

  என் காதல் முக்கியமென்றால்
  சமரசத்துக்குச் சம்மதி- இல்லையேல்
  என் காதலுக்குச் சமாதி வைக்கச் சம்மதி.

  காதலரின் சண்டை
  வெப்பத்தில்,
  சூரியன் மூழ்கிப் போனபின்னும்
  கரையில்
  வெப்பம் கலையாதிருந்தது.

  How about this ?

  காதலரின் சண்டை
  வெப்பத்தில்,
  சூரியன் மூழ்கிப் போனபின்னும்
  கரையில்
  வெப்பம் கரையாதிருந்தது.

  Like

 2. நண்பர் சேவியருக்கு,
  விமர்சிக்க வார்த்தைகள் கிடைக்க வில்லை.
  அருமை…மிக மிக அருமை.

  //வேர் வேண்டுமா நீர் வேண்டுமா
  என்றால்
  வேரில் விழும் நீர் வேண்டும்
  என்பேன்.//
  காதலனும் வேண்டும் தாய் தந்தையரும் வேண்டும். தாய் தந்தையரின் சம்மதத்தோடு காதலன் கைபிடிக்க எண்ணும் பெண்ணின் ஆதங்கத்தை சொல்ல இதற்குமேல் வார்த்தைகள் அகப்படாது.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.