கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா ?

பெருவிரல் உயர்த்தலில்
உணர்த்தி விடுகிறார்கள்
தேவையை.

எதிர் சந்து வரையோ
சாலைகள் கைகுலுக்கும்
சந்திப்பு வரையோ,
நெரிசல் பேருந்து
நிலையம் வரையோ
என
விண்ணப்பங்கள் வேறுபடும்.

பயணக் கட்டண பயமுறுத்தலோ
வருமானத்தின் வறுமையோ
அவசரத்தின் படபடப்போ
எதுவாகவும் இருக்கலாம்
காரணம்.

பின்னால் அமர்ந்து
கடத்திச் செல்வார்கள் என்றும்,
வழிப்பறிக்கான
வசதியான உத்தியென்றும்,
எய்ட்ஸ் ஊசி போட்டு
சாகடிப்பார்கள் என்றும்
கல்வெட்டுத் திகில் கதைகள்
மனசைக் கல்லாக்கும்.

எனினும்
ஹெல்மெட் கவசத்தையும்
தாண்டி
நிறுத்தாத வாகனத்தைத்
தொடரத்தான் செய்கின்றன
லிப்ட் பிளீஸ் கோரிக்கைகள்.

தேவர்களும்
அசுரர்களும்
ஒரே சீருடையில் அலையும்
நகரத்துச் சாலைகளில்

எனது
கிராமத்து முகமும்
சொல்லாத முகமூடிக்குள் பதுங்கியே
நில்லாமல் விரைகிறது.
ஒரு
வெற்றியின் தோல்வியாய்.

10 comments on “கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா ?

  1. அருமை சேவியர்
    வாழ்த்துகள்
    ஒவ்வொன்றுமே செதுக்கப்பட்ட வரிகள்

    எனினும்

    ///
    தேவர்களும்
    அசுரர்களும்
    ஒரே சீருடையில் அலையும்
    நகரத்துச் சாலைகளில்

    எனது
    கிராமத்து முகமும்
    சொல்லாத முகமூடிக்குள் பதுங்கியே
    நில்லாமல் விரைகிறது.
    ஒரு
    வெற்றியின் தோல்வியாய்.
    ///

    நன்று

    Like

  2. *********************
    எனது
    கிராமத்து முகமும்
    சொல்லாத முகமூடிக்குள் பதுங்கியே
    நில்லாமல் விரைகிறது.
    ஒரு
    வெற்றியின் தோல்வியாய்.
    **********************
    இந்த வரி உணர்த்துகிறது உங்கள் அறிவுக்கும்
    மனசுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை!

    சொல்ல விரும்பியதை சொல்லியிருக்கிறது கவிதை.

    Like

  3. சேவியர்ஜி,

    நெரிசல் பேருந்து நிலையம் வரையோ – இது ஒரே வரியா வந்திருந்தா நல்லார்ந்திருக்குமோன்றது என் நெனப்பு.

    போட்டிக்கு அனுப்பியாகிவிட்டதா 🙂

    அன்புடன்
    ஆசாத்

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.