தலைவலி

.
பிளந்தெடுக்கும்
தலைவலி
பிரியும் சுகம் அலாதியானது.

வலிகளற்ற நாளின்
பரிசுத்தத்தை
அது தான்
பறைசாற்றிப் போகிறது.

வெற்றிகளற்ற பொழுதிலும்
பரிசுக் கோப்பையைப்
பற்றிக் கொள்ளும்
ஆனந்த அனுபவத்தை
நுகர வைக்கிறது.

சும்மா இருப்பது
எத்தனை
சுகமானது என்பதை
வலிகளற்ற பொழுது தான்
விளக்க முடியும்.

அடிக்கடி வந்து மறையும்
இந்த வலி தான்
எனக்கு
தற்காலிக மரணத்தையும்
நிரந்தர சுவர்க்கத்தையும்
காட்சிப் பிழையின்றிக்
காட்டுகிறது.

தலைவலி வரட்டும்
தவறில்லை.

வெயில்களில்லா தெருக்களில்
நிழல் மரங்கள்
சுகிப்பதில்லை.

2 comments on “தலைவலி

  1. “தலைவலி வரட்டும்
    தவறில்லை.

    வெயில்களில்லா தெருக்களில்
    நிழல் மரங்கள்
    சுகிப்பதில்லை”
    Xavier, romba alaga sollirukinga…..ella vishayathayum eppadi positive-aga eduthukarathunnu ungakitta irunthuthan kathukanum. Migavum arumai…:)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s