காலைச் சுற்றும் காதல்

 

கண்டதும் காதல்
பொய்யாகலாம் ஒருவேளை.
ஆனால்
உன்னைக்
காணும்போதெல்லாம் வருகிறதே காதல்.

என் காதலின் அடர்த்தியும்
உன் எதிர்ப்பின் அடர்த்தியும்
சமமாய் இருக்கிறது.
இரண்டையும் நாம்
சரி விகிதத்தில் வளர்த்து வருவதால்.

 

உன் நிராகரிப்புக்கும்
என் பராமரிப்புக்கும் இடையே
இந்தக் காதல்
கடந்தகாலக் கதைகளை
மேய்ந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு முறை
உன் சிரிப்பைத் தரிசிக்கும் போதும்
உள்ளுக்குள்
ஒரு பூட்டு பூட்டிக் கொள்கிறது
நான்கு சாவிகள் களவு போகின்றன.

என் உள்ளங்கை ரேகையில்
உன்
ஆள்காட்டி விரல் ஓடுமானால்,
என் ஆயுள் ரேகை
நிச்சயமாய் நீளமாகும்.
விரல் விலக்காமல் இருப்பாயா ?

காரணலில்லாமல் காதலிக்கிறேனா ?
காதல் என்பதைத் தவிர
வேறென்ன காரணம் வேண்டும்
வாழ்க்கைக்கு.

முதல் காயை நகர்த்தி விட்டேன்
சதுரங்கப் பலகை சப்தமில்லாமல் இருக்கிறது.
நீ நகர்த்தாமல்
தொடர முடியாதென்பதால்
நகம் கடித்துக் காத்திருக்கிறேன் நான்.

இல்லாமல் முடியாதா என்கிறாய்
இருந்தால்
அழகாகுமே என்கிறேன் நான்.
பிடிவாதம் பிடிக்காதே என்கிறாய்
பிடிவாதமாய்.

சிக்கி முக்கிக் கல்லில்
சிக்கிச் சிதறி பொறியொன்றைப் பிடித்தேன்
அற்புத அழகாய் இருந்தது.
அது
நழுவிக் கீழே விழுந்த போது தான்
எண்ணைக் கடலில் நிற்பதை அறிகிறேன்.


ஓர் மழை நாளில் நடந்தோம்
நம் விரல்களுக்கிடையேயும்
இமைகளுக்கிடையேயும்
ஈரமாய் கசிந்து கொண்டிருந்தது
காதல்.

ரசித்து முடிக்கும் முன்
ஈரத்துளிகளின் வினியோகத்தை
சொல்லாமல் நிறுத்திக் கொண்டது
மேகம்.

மேகம் சொல்லாமல் சென்றது
நீ சொல்லி விட்டாய்
அது ஒன்று தான் வித்தியாசம்.

மகிழ்ச்சி பூக்களில் இருக்கிறது
என்று நினைத்தேன்
உன்னைச் சந்திக்கும் வரை
இப்போது
பூக்களும் உன்னில் இருக்கின்றன என்கிறேன்.
 

Advertisements

2 comments on “காலைச் சுற்றும் காதல்

 1. சிக்கி முக்கிக் கல்லில்
  சிக்கிச் சிதறி பொறியொன்றைப் பிடித்தேன்
  அற்புத அழகாய் இருந்தது.
  அது
  நழுவிக் கீழே விழுந்த போது தான்
  எண்ணைக் கடலில் நிற்பதை அறிகிறேன் – Kadhal enbathu neruppil nirpathu enbathai ivalavu alagaga solli irukinga xavier…..arputham….ithai vida sirappaga kadalil vilunthathai solvatharku vera ondrum illai….

  Like

 2. “காலைச் சுற்றும் காதல்”… கவிதையை நானும் ரசித்தேன். பாராட்டுக்கள்.

  (கலர் கொடுத்து எப்படி எழுதுகின்றீகள் என்று கேட்டிருந்தீர்கள். வேறு எங்காவது கலர் கொடுத்து எழுதி விட்டு பின்னர் அங்கே கொப்பி பண்ணுகின்றேன்)

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s