மீண்டும் ஒரு முதல் முத்தம்


இன்னும் இனிக்கிறது,
நீ
எனக்குத் தந்த முதல் முத்தம்.

கடற்கரையின் ஈரக்காற்றோடு போரிட்ட
உன் உஷ்ணக்காற்று,
சிப்பி சேகரித்த கைகளோடு
நீ இட்ட முத்து முத்தம்.

உன்னையும் என்னையும் சுற்றி
உலகமே வேடிக்கைபார்த்ததாய்
எனக்குத் தோன்ற
நீயோ கடல் மணலில்
உலகப்படம் வரைந்து கொண்டிருந்தாய்.

பூக்காரியைப் புறக்கணித்து,
சுண்டல் காரனைத் துரத்தி,
பிச்சைக்காரனுக்கு மட்டும் காசு போட்டதன் காரணம்
எனக்கு விளங்கவில்லை.

பின்பு ஒரு நாள் சொன்னாய்.
தானம் தரும் ஒவ்வொரு காசும்
காதலைக் காப்பாற்றும் என்று
உண்மை தானோ என்று யோசித்திருக்கிறேன்.

பள்ளிச்சிறுமி கண்டெடுத்த
பவள மாலையாய்
இதயத்தீவுக்குள் உன் முத்தத்தை
இறுக்கமாய்ப் பற்றியிருந்தேன்.

அதற்குப்பின்
உதடுகள் வலிக்கும் வரை,
உணர்வுகள் சலிக்கும் வரை
பலமுறை முத்தமிட்டிருக்கிறாய்.

ஆனாலும்
அந்த முதல் முத்தம் தந்த பள்ளம்
நிரம்பிவிடவேயில்லை.
நேற்று
நம் குழந்தை முதல் முதலாய்
உதடு குவித்து
என் கன்னதில் முத்தமிடும் வரை !!!

Advertisements

7 comments on “மீண்டும் ஒரு முதல் முத்தம்

 1. பவள மாலையாய்

  மோனைக்காகவா இந்த பவளமாலை!

  அந்த முதல் முத்தம் தந்த பள்ளம்!!!???
  தராசு முள் சொல்லலாமா நண்பரே!
  அழகான கவிதை!!

  Like

 2. Kadalin muthal mutham, kulanthayin muthal mutham….edu iniyatra irandum idayathilirunthu vilagathu…..romba romba alagana unarvuporavamana kavithai….

  Like

 3. முதல் முத்தம் எப்பவுமே கிக் தான் நண்பரே.
  //நேற்று
  நம் குழந்தை முதல் முதலாய்
  உதடு குவித்து
  என் கன்னதில் முத்தமிடும் வரை !!! // — வீட்ல வாசித்தார்களா இந்த வரிகளை. பார்த்து முதுகு வீங்கப் போகுது.

  Like

 4. உங்கள் கவிதைக்கும் தலைப்புக்கும் சற்றும் பொருந்தவில்லை. முதல் முத்தம் என்பது ஒருவருக்கு வாழ்வில் ஒரு முறைதான். பிறக்கும் குழந்தையை போன்றது அது. ஒரு முறை தான் பிறக்கும். பிறக்கும் குழந்தை மீண்டும் பிறப்பதும் இல்லை. இறக்கும் உயிர் மீண்டும் பிறப்பதும் இல்லை. மீண்டும்

  Like

 5. காதலியின் முதல் முத்தம் தரும் ஆனந்த உச்சத்தின் நிலையை, குழந்தையின் முதல் முத்தம் தரும் என்பதையே கவிதையும், தலைப்பும் சொல்கின்றன.

  வருகைக்கு நன்றி தாயுமானவள்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s