காலை புலர்ந்ததும்
என் ராசி பலனை நீயும்,
உன் ராசி பலனை நானும்
தவறாமல் படிக்கிறோம்.
நல்ல வேளை
உனக்கும் எனக்கும் ஒரே ராசி.
ஒரு தடவை பார்த்ததும்
காதல் வருமா ?
கேட்கிறாய் மெல்ல என் காதைக் கடித்து.
இல்லையே.
காதலிக்கத் துவங்கும் முன்
உன்னை
இரண்டுதடவை பார்த்திருக்கிறேனே.
அப்பாக்கு காதல் பிடிக்காதாம் !
சோகத்துடன் சொல்கிறாய்.
இந்த வயதுக்கு மேல
அப்பாக்கு எதுக்கு காதல் ?
இயல்பாய் தான் சொன்னேன்.
விழுந்து விழுந்து சிரிக்கிறாய்.
நல்லவேளை
அப்பாவுக்கு காதல் பிடிக்கவில்லை.
இதுக்கு முன்னால
யாரையாவது காதலிச்சிருக்கியாடா ?
நெஞ்சில்
கோடு கிழித்துக் கேட்கிறாய்.
உன் தோழியர் யாரும்
அந்த பட்டியலில் இல்லாததால்
பதட்டமில்லாமல் பதில் சொல்கிறேன்.
இல்லை…என்று.
வீட்ல நம்ம காதலை
ஒத்துக்கலேன்னா என்ன பண்றது ?
கலவரக் குரலில் கேட்கிறாய்.
அந்த
நம்பிக்கைல தானே காதலிக்கிறேன்.
மனசுக்குள்
ஒலிக்கும் குரலை அடக்கி,
‘நல்லதே நடக்கும் ‘ என்கிறேன்.
வீட்ல நம்ம காதலை
ஒத்துக்கலேன்னா என்ன பண்றது ?
கலவரக் குரலில் கேட்கிறாய்.
அந்த
நம்பிக்கைல தானே காதலிக்கிறேன்.
மனசுக்குள்
ஒலிக்கும் குரலை அடக்கி,
‘நல்லதே நடக்கும் ‘ என்கிறேன்.
– Ennoda sirippai adakkave mudiyalai xavier…..migavum arumai.
LikeLike
அசத்தரீங்க தலைவா. தற்கால காதல்களில் பல இதே தான்.
நட்புடன்,
இவன்: மா. கலை அரசன்.
LikeLike
:)))) நல்லா எழுதி இருக்கீங்க சேவியர் 🙂
LikeLike
இதுக்கு முன்னால
யாரையாவது காதலிச்சிருக்கியாடா ?
நெஞ்சில்
கோடு கிழித்துக் கேட்கிறாய்.
உன் தோழியர் யாரும்
அந்த பட்டியலில் இல்லாததால்
பதட்டமில்லாமல் பதில் சொல்கிறேன்.
இல்லை…என்று.
அசத்தரீங்க தலைவா
LikeLike
அனைத்துமே அருமை. இன்னமும் சிரித்துக்கொண்டிருக்கிறேன் !! :))))
LikeLike
கற்பனையூரென்ற நகருண்டாம்… அங்கு கந்தர்வர் விளையாடுவராம் … மகாகவி பாரதி
LikeLike