அவரவர் வேலை அவரவர்க்கு

( நண்பர், கவிஞர். நா. முத்து குமார் அவர்கள் உலகத் தரத்தில் எழுதப்பட்ட தமிழ்க்கவிதை என்று பாராட்டிய எனது கவிதை ஒன்று ) 

 

இந்த கணிப்பொறி வேலை
பாடாய்ப் படுத்துகிறது.

எழுத்துக்களின் மேல் ஓடி ஓடி
கை விரல்களுக்குக் கால் வலிக்கிறது.

எத்தனை நேரம் தான்
வெளிச்ச முகம் பார்ப்பது ?
கண்களுக்குள் பார்வை கொஞ்சம்
பழுதடையும் வாசனை.

உட்கார்ந்து உட்கார்ந்தே
என்
முதுகெலும்புக்கும் முதுகு வலி.

எல்லாம் எழுதியபின்
அவ்வப்போது
தொலைந்துபோகும் மின்சாரம்,
எரிச்சலின் உச்சிக்கு என்னை எறியும்.

வேண்டுமென்றே பிடிவாதம் பிடிக்கும்
சில சில்லறை வேலைகள்.

நிம்மதியை நறுக்குவதற்காகவே
கத்தியோடு அலையும் வைரஸ்கள்.

அவ்வப்போது எட்டிப்பார்த்து
நிலமை கேட்கும் மேலதிகாரி.
முரண்டுபிடித்து ஸ்தம்பிக்கும் என் கணினி.
தேனீர் தேடச்சொல்லும் தளர்வு.

அப்பப்பா…
இந்த கணிப்பொறி வேலை
பாடாய்ப் படுத்துகிறது.

சோர்வில் சுற்றப்பட்டு மாலையில்,
வீடுவந்ததும் மனைவி சொல்வாள்
உங்களுக்கென்ன
“உக்காந்து பாக்கிற உத்யோகம்”  .

Advertisements

6 comments on “அவரவர் வேலை அவரவர்க்கு

 1. Pramatham…..

  “எழுத்துக்களின் மேல் ஓடி ஓடி
  கை விரல்களுக்குக் கால் வலிக்கிறது.”
  – enna oru karpanai….

  kaniporiyalargalin ethartha vazhvai appadiye solli irukinga….

  Like

 2. என்னை கவர்ந்த வரிகளே சகோதரி ஜானகியையும் கவர்ந்துள்ளன.அருமையான வரிகள்…!!

  தமிழிலுள்ள எளிமையான சொற்களை நீஙகள் உங்கள் கவிதைக்கு தேர்ந்தெடுக்கும் லாவகம் உங்கள் மீது என்னை நிறையவே பொறாமைப்படவைக்கிறது.

  எதிர்பார்க்கிறேன்.

  அடுத்த ஆக்கத்தை…

  நன்றி.

  Like

 3. உட்கார்ந்து பார்கிற உத்தியோகத்தால் நாரி வலி எடுக்குதுங்கோ 😦

  Like

 4. உங்களுக்கென்ன
  “உக்காந்து பாக்கிற உத்யோகம்” .

  …… ha ha Unnmai dhana …… !!
  Only those who have had the head ache knows the pain !!

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s