விடுதலை

 

பாவத்தின் பதுங்கு குழிகளில்
படுத்துக் கிடக்கையில்
புலப்படும்
விடுதலையின் மகத்துவம்.

சில்மிச சிந்தனையின்
சன்னலைச் சாத்துகையில்
காமத்தின்
கதவு திறந்து கொள்தலும்

வெட்கத்தின் திரைச்சீலையை
சரிசெய்து திரும்புகையில்
மோகத்தின்
முந்தானை சரிந்து விழுதலும்

விருப்பத்தின்
திரிகளில் எரிவதில்ல
பெரும்பாலும்.

விரல்களிடையே
புகையும் பகைவனையும்
மௌன மரணத்தின்
மதுப் பந்திகளையும்
தொடங்கி வைத்த
பிள்ளையார் சுழி நினைவிலில்லை.

பிறந்த நாள்
புத்தாண்டு என
தற்காலிக தீர்மானங்களுக்காய்
சில மைல்கற்கள்
வருடம் தோறும் புதுப்பிக்கப்படும்.

குற்ற உணர்வு
நெற்றியில் சுட,

இப்படம் இன்றே கடைசி
போல
படுக்கையில் பிரசவிக்கும்
இரவு நேர தீர்மானங்களை

விடியல் சூரியன்
மாற்றி எழுதும்
‘நாளை முதல்’ !

விடுதலையாய் சுற்றும்
மனம்
அடிமையாய் திரும்புதலும்,

அடிமையாய் உழலும்
மனம்
விடுதலையை வேண்டுதலும்

என
விடுகதை
வாழ்க்கை வியப்பளிக்கும்.
விடுதலை நோக்கி
மீண்டும் நடக்கும்.

11 comments on “விடுதலை

 1. Nachnu oru Kavithai….Kavithai Saalai continues to amaze me.. Rare consistency and daily updates….Never disappointing…..

  Like

 2. Pingback: Tamil Blog. Info » Blog Archive » சமீபத்தில் படித்ததில் பிடித்தது

 3. //விடுகதை
  வாழ்க்கை வியப்பளிக்கும்.
  விடுதலை நோக்கி
  மீண்டும் நடக்கும்//

  நல்ல வரிகள்.
  நம்முள் பல நல்ல கவிஞர்கள் இருப்பது சந்தோஷமான் விஷயம்.
  ஏற்கணவே ஒரு பதிவில் சொன்னது போல், கவிதை எழுதுபவர்கள், அதை ஒலிப் பதிவாகவும் செய்தால், கேட்பதர்க்கு நன்றாக இருக்கும்.

  Like

 4. katrinile varum geethame en kannanai arivayoo.Melodiuos as you say. Now it is midnight.The song takes me above….

  Like

 5. Pingback: கிறுக்கல்கள் » Blog Archive » சமீபத்தில் படித்ததில் பிடித்தது

 6. VALKAI ENPATHAI THALAIPPAAJI ,VALARNTHIDUM NAALAALAI THANATHAAJI, EERIDUM POORULAI NINAAIVAAJI, KOONDIDA VEINDUM NINAVAAJI, ITTHUDAN NAAMEE ONRAAJI , IRUPPATHU NANREE ANROO, VEERINAI NIIKI ONRAAJI, VENRIDIL NAAMEE UYARVOOM, KANDIDAL VERU INRIK, KAVALIKAL MAARUM VEELAI, NANRUDAN VAALVOOM THAPI, INRUDAN NINAITHIDU NANREE, ITHUTHAAN ULAKAMVALTHIDA URUTHI, PURINTHIDIN NIITHAANINTHA PUVIJINIL UYARNTHAVANAAVAAJII. “UYARNTHA VAN AAVAAJI” -K.SIVA- (Fr)

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.