இலவச மரணம்

 

இலவசமாகத் தான்
வினியோகிக்கப் படுகின்றன
அழிவுக்கான
ஆயுதங்கள்.

விரல்கள்
மாற்றிக் கொள்ளும்
புகைப் பழக்கமும்,

வாசலில்
வலுக்கட்டாயமாய்
வரவேற்றுச் செல்லும்
குடிப் பழக்கமும்,

பல்கலைக்கழக
சோதனைக் கூடத்தின்
பின் புறம்
பரிமாறப்படும் போதையும்,

இருமலிலும்
தலைச் சுற்றலிலும்
ஒதுக்கியும்
விடாமல் தொடரும்
சும்மா சங்கதிகள்.

பழக்கமாகி
பின்
விடமுடியாமல் அலறும்போது
இலவசங்கள்
கை வசம் இருப்பதில்லை.

பின்
இவனும் வினியோகிப்பான்
நான்கு பேருக்கு
இலவச மரணம்.

11 comments on “இலவச மரணம்

 1. //விரல்கள்
  மாற்றிக் கொள்ளும்
  புகைப் பழக்கமும்//

  :-(((

  வெற்றிபெற வாழ்த்துக்கள்….

 2. பழக்கமாகி
  பின்
  விடமுடியாமல் அலறும்போது
  இலவசங்கள்
  கை வசம் இருப்பதில்லை…

  – இந்த வரிகளுடனேயே கவிதையை நிறுத்தியிருக்கலாம்.

  வெற்றிக்கு வாழ்த்துக்கள்

 3. சேவியர்,

  மீண்டும் கடைசி வரியில் கலக்கியிருக்கிறீகள்.

  பின்
  இவனும் வினியோகிப்பான்
  நான்கு பேருக்கு
  இலவச மரணம்

  இது பல புரிதல்களைக் கொடுக்கின்றது.

  வாழ்த்துகள்.

  அன்புடன்
  ஆசாத்

 4. Anna ,

  Words are very powerful and especially the last para touched many points with different meanings.

  Excellent! After the “Receptionist”.

  Divakar.S

 5. Iavasa maranathai patri navarasamaga kooriya ungal kavithai engalukku ilavasamaga neengal koduthalum athil vilai mathippida mudiyatha arthangal ullathu enbathu unmai. Vazthukkal Xavier

 6. யதா சொன்னதை வழி மொழிகிறேன். கடைசிவரிகள், இயல்பாய் இல்லாதது போல் தோன்றுகிறது.

  “பழக்கமாகி
  பின்
  விடமுடியாமல் அலறும்போது
  இலவசங்கள்
  கை வசம் இருப்பதில்லை” என்று உணருபவன், அடுத்த வரிகளின் கருத்தைச் செய்வான் என்று தோன்றவில்லை.

  இயல்பான கவிதை. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s