நான் நேசக்குமாரா ? சொக்கன் மறுப்பு.

இணையத்தில் நேசக்குமார் என்னும் பெயரில் சொக்கன் இஸ்லாமிய விரோதக் கருத்துக்களைப் பரப்புவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை எழுத்தாளர் சொக்கன் மறுத்துள்ளார்.

இது குறித்து ‘தினம் ஒரு கவிதை’ குழுமத்துக்கு அவர் அனுப்பிய பதில் இதோ.
 

பெங்களூர்
21 11 2006

நண்பர்களுக்கு, வணக்கம்.

சமீபகாலமாக ஒரு குறிப்பிட்ட மதம் குறித்த அவதூறுகளை நான் வேறொரு பெயரில் எழுதி வருவதாக தமிழ் வலைப்பதிவுகள் சிலவற்றில் சில வதந்திகள் எழுதப்படுகின்றன.

இவற்றில் சிறிதும் உண்மை இல்லை. எந்த மதத்தின்மீதும் வெறுப்போ, துவேஷமோ, விமரிசனமோ அற்றவன் நான் என்பது நீண்டகாலமாக என்னை நன்கறிந்த உங்களுக்குத் தெரியும்.

ஆயினும் தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டாக இது வலைப்பதிவுகள் சிலவற்றில் முன்வைக்கப்படுவதை அடுத்து, தினம் ஒரு கவிதை குழுவின் நண்பர்கள் சிலர் என்னிடம் தொடர்புகொண்டு, கவலை தெரிவித்து வருகிறார்கள்.

எக்காலத்திலும் எந்த மதத்தின்மீதும் காழ்ப்புணர்வுடன், துவேஷமுடன் எழுதவோ, பேசவோ என்னால் முடியாது. தவிர, என். சொக்கன் என்கிற பெயர் தவிர, வேறு எந்தப் பெயர்களையும் நான் பயன்படுத்துவதும் இல்லை.

மேற்படி அவதூறுகளை நண்பர்கள் பொருட்படுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அலுவலகம் மற்றும் பத்திரிகைத் தொடர்கள், புத்தகப் பணிகளுக்கான நேரப் பற்றாக்குறையால் என்னுடைய இணையத் தொடர்பை முழுமையாக நான் துண்டித்துக்கொண்டு இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. என் விருப்பத்துக்குரிய தினம் ஒரு கவிதை குழுவையே இயக்கமுடியாமல் போனதும் அதனால்தான். இந்நிலையில் வலைப்பதிவு குறித்து சிந்திக்கவோ, அதில் எழுதவோ எனக்குச் சற்றும் விருப்பமோ, நேரமோ இல்லை.

என்மீது இட்டுக்கட்டப்படும் இத்தகைய அவதூறுகளை நண்பர்கள் நம்பவேண்டாம் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

என்றும் அன்புடன்,
என்.சொக்கன்

 ———-

சொக்கனை கடந்த ஒன்பது ஆண்டுகளாக நன்கறிவேன். வலைப்பதிவில் புழுதி வாரி இறைப்பவர்கள் கூறும் எந்தக் கூற்றுக்கும் சற்றும் அருகதையில்லாதவர் அவர். அவருடைய ஊக்கத்தினால் எழுத்துத் துறைக்குள் வந்தவர்கள் தொடர்ந்து எழுதுபவர்கள் அனேகம். யாரையும் மதம் பார்த்தோ, ஜாதி பார்த்தோ அவர் விரும்பியதும் இல்லை வெறுத்ததும் இல்லை. ஏராளம் இஸ்லாமிய நண்பர்களைப் பெற்றிருக்கும் நண்பர் சொக்கன் இப்படி புனைப்பெயரில் எழுதவேண்டிய அவசியம் இல்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கணினி துறையிலும், நெட்வர்க்கிங் துறையிலும் ஆழ அனுபவம் பெற்ற சொக்கன் ஐ.பி முகவரி பற்றி அறியாதவரும் அல்ல.

இந்த குற்றச்சாட்டுகள் எதுவும் அவருடைய புகழை அழிக்கப்போவதில்லை, ஆனாலும் சிறு சிறு உறவு விரிசல்களுக்கே கலங்கி விடும் மனம் கொண்ட அவர் தன்னுடைய நண்பர்கள் இந்த குற்றச்சாட்டுகளை நம்பிவிடக் கூடாதே என்னும் பதட்டத்தில் தான் இந்த மறுப்பை எழுதியிருக்கிறார்.

என்ன சொல்ல ? எழுதிப் பெயர் வாங்கும் மனிதர்களும் இருக்கிறார்கள்
எழுதுவபர்கள் மீது புழுதி எறிந்துப் பெயர் வாங்கும் மனிதர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

Advertisements
By சேவியர் Posted in பிற

7 comments on “நான் நேசக்குமாரா ? சொக்கன் மறுப்பு.

 1. நேசக்குமார் என்ற பெயரில் எழுதுபவர் மட்டும் தவறாக என்ன எழுதுகிறார்?

  இறைநேசன், நல்லடியான் என்ற பெயர்களில் ஒளிந்து கொண்டு பிற மதத்தினரை புழுதி வாரித் தூற்றும் குழுவினருக்கு நேசக்குமார் குறித்து குறை கூற துளியும் தகுதி கிடையாது.

  Like

 2. //புழுதி எறிந்துப் பெயர் வாங்கும் மனிதர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.//

  உண்மை தான். இறைநேசன், நல்லடியார் போன்றவர்கள் எதிர்வினையாக அன்றி தாக்குதல் செய்யவில்லை. நேச குமார் என்ற பெயரில் எழுதிவருபவர் தான் மதங்கள் பற்றிய காழ்ப்பை முதலில் தமிழ் வலையில் கொட்டியவர்.

  இன்று தமிழ் மணக்கும் வலையுலகின் பக்கங்களில் வெறுப்பின் கறைகள் பரவிக்கிடக்க நேச குமார் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க இயலாது.

  இஸ்லாமிய தீவிரவாதத்தால் உலகத்துக்கு ஆபத்து என்ற பூச்சாண்டி காட்டி தன் மன அரிப்புகளை ஆயுதத்தால் சொறிந்துக்கொள்கிற புஷ்சை போல அவதூறுகளால் நேச குமார் சொறிந்துக்கொள்கிறார்.

  எது, எப்படியோ, எழுத்தாளர் சொக்கனாக இல்லாத பட்சத்தில், சொக்கனுக்கு ஏற்பட்டுவிட்ட மன அழுத்தங்களுக்கு பிரதியுபகாரமாகவேனும் நேசகுமார் தான் இன்னாரில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் தான். சொக்கனுக்கு மட்டுமில்லை, அவருடன் பழகிய நண்பர்களுக்கும் இதனால் மன இறுக்கம் தான்.

  Like

 3. ராஜா என்ற பெயரில் இங்கே கருத்து கூறியிருக்கும் இஸ்லாமிய அன்பருக்கு, இறைநேசன், நல்லடியான் போன்றவர்கள் நேசக்குமாருக்கு எதிர்வினை புரிவதாக சப்பை கட்டு கட்டுகிறார். இஸ்லாமிய தீவிரவாதத்தால் உலகத்துக்கு ஆபத்து என்பது பூச்சாண்டியா? கண்ணை மூடிக் கொண்ட பூனையாக இருக்காதீர் ராஜா. முஸ்லீமகள் மட்டுமே மனிதர்களல்ல.

  Like

 4. பின்லேடன் தான் நல்லடியான், இறைநேசன் என்ற பெயர்களில் எல்லாம் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறான் என்கிறேன் நான். இல்லை என்பதை இறைநேசன், நல்லடியான் கோஷ்டிகளை நிருபிக்க சொல்லுங்களேன். பின்லேடனுக்கு மட்டுமல்ல, அவனது அடியை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் இறுக்கம் குறையும். நல்லா வருதுய்யா வாயிலே.

  Like

 5. உங்களை வெளிப்படுத்திக்கொண்ட பாசக்குமார் அவர்களே, நன்றி.

  Like

 6. நேசகுமார் சிந்தனையாளர். எழுத்தாளர். சொக்கனின் தரம் ஆங்கிலத்தில் படித்ததை செரிக்காமல் தமிழில் மொழிபெயர்த்து கூடவே நடுநிலை என்கிற பெயரில் ஆபாச கூத்தடிப்பவர். எனவே நேசகுமாருடன் சொக்கனை ஒப்பிட்டதற்கு சொக்கன் பெருமை கூட பட்டுக்கொள்ளலாம். ஆனால் சொக்கன் போல சாதியால் வாழுகிற இரண்டாந்த்ர எழுத்தாளனுடன் ஒப்பிடப்படுவதில் நேசகுமாருக்குதான் மன உளைச்சல் உண்டாக வேண்டும். மேலும் சொக்கன் உளறியிருப்பது போல நேசகுமார் எந்த இடத்திலும் இஸ்லாமை அவதூறு செய்யவில்லை. அதன் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். அவ்வளவுதான்.

  Like

 7. Nothing to wonder NeelaKandans appreciating Nesa kumars.
  Isn’t it? They are doing so reciprocally for the cause of their single agenda.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s