புறணி

 

நாம் மூவரும்
பேசிக்கொண்டிருந்த
நேற்றைய மாலைப் பொழுதில்
நான்காவது
ஒருவரைப் பற்றிப் பேசினாய்.

இன்று
நாமிருவரும்
பேசிக்கொண்டிருக்கிறோம்
நேற்றைய
மூன்றாவது நபரைக்
கிழிக்கின்றன
கூரிய உன் வார்த்தை நகங்கள்.

நாளைய
என்னைப்பற்றிய
உன் அவமதிப்பு எதுவாயிருக்கும்
எனும் கவலையில்
கிளம்பி விடுகிறேன்
உன்னிடமிருந்து.

நாம் நால்வரும்
நல்ல நண்பர்களென்று
படிக்கட்டில் உரசிச் சென்ற
இருவர்
பேசிக்கொள்கிறார்கள்.

Advertisements

3 comments on “புறணி

 1. romba romba nalla irukku xavier!! நாம் நால்வரும்
  நல்ல நண்பர்களென்று
  படிக்கட்டில் உரசிச் சென்ற
  இருவர்
  பேசிக்கொள்கிறார்கள்”

  romba iyalbana ondru!!

  Like

 2. You never believe it Xavier…The same words “We four are best friends ” I recently heard it in my life…And the beauty is, you and myself are two among the 4….

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s