அம்மாவின் கடிதம்

 

அம்மாவின்
தடுமாறும் எழுத்துக்களில்
நெளியும்
பாசத்தின் வாசனை
சுமந்து வரும்
இன்லெண்ட் லெட்டர்கள்
இல்லாமல் போய்விட்டன.

மடிக்கும் இடங்களிலும்
ஒடித்து ஒடித்து எழுதி அனுப்பும்
அப்பாவின்
நலம் விசாரித்தல் சுகம்
தொலைந்துவிட்டது.

தபால் அட்டைகளில்
விலாசத்துக்கான இடஒதுக்கீடையும்
அரைமனதுடன்
அனுமதிக்கும்
கடுகுமணி எழுத்துக்களும்
காணாமல் போய்விட்டன.

தனிமை வறுக்கும்
பின்னிரவுப் பொழுதுகளில்
நெஞ்சோடு அணைத்துத் தூங்க
கசங்கிப் போன
கடுதாசிகளே இல்லையென்றாகிவிட்டது.

தொலை பேசிகளும்
கைபேசிகளும்
மின்னஞ்சல்களும்
கடுதாசிக் கலாச்சாரத்தை
விழுங்கிச் செரிக்க,

நவீனங்களின் வளர்ச்சி
தத்தெடுத்துக் கொண்ட
என்
மின்னஞ்சல் பெட்டிகளிலும்
கிராமத்துப் புழுதிநெடியின்றியே
வந்து அமர்கின்றன
தகவல்கள்.

கல்வெட்டிகளின் காலடியில்
கசிந்துருகும்
இயலாமை மனம்போல
மறந்து போன
தபால்காரரின் முகத்தை
மீண்டெடுக்கும் முயற்சியில் மனசு.

நிறைவேறுமா எனும் ஆசையில்
முளைக்கிறது கடைசி ஆசை.
கண்ணீரிலும்
வியர்வையிலும்
அழிந்துபோன அம்மாவின் கடிதம்.

Advertisements

6 comments on “அம்மாவின் கடிதம்

 1. Interesting!!!

  We do miss our letters & their smell. Your poem does convey the message in a right way. Day might come, where in, people love to write in hand and post it. Let’s hope.

  – Lakshman

  Like

 2. அருமை யான கவிதை நன்றி உங்கள் கவிதை பழைய நியாபகங்களை தருகிறது அம்மாவும் சித்தியும் எழுதும் கடிதங்கள் ஆச்சரியமூட்டுபவையாக இருக்கும்.கின்னஸ் சாதனைக்கு நிகராக அத்தனை வார்த்தைகள் இருக்கும் ஒரு தபால் கார்டில்.மடிக்கும் பகுதியில் கூட இருக்கும் பாசம்.

  Like

 3. ரொம்ப நல்லா இருக்கு!
  கடிதங்கள் எழுதி, அதை எதிர்பார்த்து இருந்த காலங்கள்….
  மீண்டும் வருமா….தெரியவில்லை…!

  Like

 4. siruvayathil, thatha veetil irukayil, amma eluthuna oru kaditham innum manasil iramagave irukayil, ungal kavithai athan vasathai innum kotti vittathu!! Ippavum antha kadithathai parkumbothu, romba santhoshama irukkum!!athula engaloda athanai nadavadikayum nerla irupathu pola eluthi irupanga…….manasai thodura oru kavithai!!

  Like

 5. with good perspective and different angle in the telling. you are developed in the matter of poetry writing. keep it up.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s