தாவணி மலரே தாமதியாதே

தாவணி மலரே தாமதியாதே
சொர்க்கம் என்பது காதலடி
நரகம் என்பதை நீயறிவாயே
இடையே உள்ள தூரமடி

நரகம் மிதித்து சொர்க்கம் பிடித்து
காலம் முழுதும் அங்கிருப்போம்
துருவம் கடந்து உருவம் மறந்து
காணும் கனவில் தங்கிடுவோம்.

0

ஈசல் ஆயிரம் படை திரண்டாலும்
இரவின் ஆயுள் நீள்வதில்லை,
ஈசன் கோபம் கரை புரண்டாலோ
உலகில் ஏதும் வாழ்வதில்லை.

உன்னில் வீழ்ந்த எந்தன் காதல்
மரமாய் எழுந்த ஆலம் விதை
எந்தக் காற்றும் தோற்றுப் போகும்
என்பது ஊரே அறிந்த கதை.

மலைகள் மோதி அயராக் கால்கள்
அலைகள் மோதி அழிந்திடுமா
மலையென மேலே வளர்ந்தக் காதல்
மேகம் மோதி விழுந்திடுமா ?

0

ஆசை தன்னில் அடி பணியாமல்
புத்தர் சொன்னது யோக நிலை
காதல் தன்னில் அடிமை யானேன்
சித்தம் பின்னுது மோகவலை.

என்னில் வீழ்ந்த உந்தன் காதல்
சிங்கம் மீதில் சிலந்தியடி
வீரன் தோளில் மச்சம் ஆனாய்
இன்னும் அச்சம் ஏதுக்கடி.

எலிகள் கூட்டம் வருதல் கண்டு
புலிகள் பயந்து கெஞ்சிடுமா
மெழுகுக் படைகள் வருதல் கண்டு
எரியும் நெருப்பு அஞ்சிடுமா
0
 

Advertisements

5 comments on “தாவணி மலரே தாமதியாதே

 1. Xavier,

  Un Thavanaiyal ennai ne kattipottu vittai…..

  Antha thavaniin kattavizhka mudiyamal nan thilaithu nirkirean…ithuthan thavani sorgamo !!!!!!!!!

  Like

 2. Very Good One!!! Paataave paaditen….

  Kumanguthu lady, kamankarai vaadi,
  thamanthundu thaadi nee kumarivittu podi

  sama Kaalam ippadi Poitu irukku….ithuku mathiyila eppadi pozhaika poringalo?

  Like

 3. உங்கள் கவிதையில் ஓசை நயம் உள்ளது.
  //ஈசல் ஆயிரம் படை திரண்டாலும்
  இரவின் ஆயுள் நீள்வதில்லை,//
  ஈசலின் ஆயுளும் நீள்வதில்லை.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s