மன விளிம்புகளில்…

0

அறிவு ஜீவிபோல பதிலிறுக்கிறாய்,
எந்தப் பதிலும் உனதில்லை.
எல்லாம் உன்மேல்
காலம் காலமாக
தேய்க்கப்பட்ட தீர்மானங்கள்.

நீ,
கண்ணாடியில் காணும்
முகம் உனக்கானதில்லை.
நீ யாரென்று
யாரோ தீர்மானித்ததன்
யாருமல்லாதவன் தான்.

நீ
இட்டதாய் கருதும்
அத்தனையும் யாரோ ஒருவர்
இட்டதன் நீளல்களே.

செவிகளும் கண்களும்
செரித்துக் கொட்டும்
கழிவுகளிலிருந்தே,
உனக்கான விடையை
நீ இழுத்தெடுக்கிறாய்.

புலமை எனும்
புலன்களைக் கொண்டே
உன்
அகழ்வாராட்சியையும் நடத்துகிறாய்.

உன்
அத்தனை சிந்தனைகளையும்
அவிழ்த்தெறிந்துவிட்டு,
எப்போதேனும்
நிர்வாண மனதோடு
உள்மனம் கிளறிப்பார்.

விடையென்ற கருதல்கள்
கேள்விகளாய் மாறி
கேள்விகளோடே ஜனித்து
கேள்விகளோடே மரித்து
விடையல்லாத நிலையே
விடையென நிலைக்கும்.

புள்ளிக்குள்
புதையுண்டு கிடக்கும்
பிரம்மாண்டப்
பிரமிடுகள் வெளியேறத் துவங்கும்.

– ‘மன விளிம்புகள்’ கவிதை நூலிலிருந்து

Advertisements

4 comments on “மன விளிம்புகளில்…

 1. அற்புதம்.
  திணிக்கப்பட்ட சோறுபோல பழக்கப்பட்ட வார்த்தைகள் தெரிந்தோ தெரியாமலேயோ வந்து விழுகின்றன.
  ஒரே ஒரு நிமிடம் பேசுவதற்கு முன்னால்
  யோசித்தால்…

  Like

 2. UNULLE URUTHTHUM UNARVE , MANAK KANNULLE THONRA, ENNUL ONRILAI EVANOO, MANAK KANIN KARUTHTHU, PARAM PARAIYAAJI ANAIVAR, KUURUM VAARTHAI NIRANTHARM, ATHANPINNE UTHIPPATHU PUTHUMAI., ITHUVEE THAAN ULAKATHU NIYATHI, ITHUVEE THAANEM NIYATHI. ” NIYATHI ” -K.SIVA-(Fr)

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s