நில்..நிதானி…காதலி

 

காதலையும் நேரத்தையும்
வைத்து
நிறையவே கவிதைகள்.
எனக்கு
அதற்குக் கூட நேரமில்லை.
உன்னைச் சந்தித்தபின்.

நீ
சிரிக்க வேண்டுமென்பதற்காகவே
நான்
பேசியதுண்டு.
நான் பேசுவதற்காகவே
நீ
சிரித்த நிஜம் தெரியாமல்.

ஏதோ ஓர்
அதிகாலை அமைதியில்
உன்னை கண்டேன்.
அன்றிலிருந்து
அதிகாலை
அமைதியாயில்லை.

நிமிட நேரம் தான்
உன்னைப் பார்த்தேன்
இப்போது
நிமிட நேரமும் விடாமல்
நினைத்துத் தொலைக்கிறேன்.

.

பூவா தலையா
கேட்கிறாய்
நீ.

காசு
என்கிறேன் நான்.

.

அழகானதை சொல்
எனும் போது
ஏன் தான் உன்னை
நினைத்துத் தொலைக்கிறேனோ ?
உன்னை
நினைத்தபின்
எப்போது தான்
சொற்கள் வந்திருக்கின்றன ?

.

உனக்குப் பிடிக்காததை
செய்யும் போது
உனக்குப் பிடிக்காதே என்றும்,
உனக்குப் பிடித்ததைச்
செய்யும் போது
உனக்கும் பிடிக்குமே என்றும்,
எஞ்சியவற்றை
செய்யும் போது
உனக்குப் பிடிக்குமோ என்றும்….
நீ சார்ந்த எண்ணங்கள் மட்டுமே
நீள்கின்றன.
இது
உனக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ ?

.

ஒருமுறை நீ சிரித்தபோது
இதயம் கொஞ்சம்
இடம் மாறியதோ என யோசித்தேன்.
மறு முறை
யோசிக்காமல் இதயத்தை
இடம் மாற்றிக் கொண்டேன்.

.


நீ
வருவதாலேயே
சில சாலைகளை
எனக்குப் பிடிக்கும்,
எனக்கும் பிடிக்கும் என்பதாலேயே
நீ
அந்த சாலைகளை
நிராகரிக்கிறாய்.

.

எதையும் யோசிக்காமல்
பேசிக் கொண்டிருந்தது
ஒரு காலம்.
இப்போது
எதுவும் பேசாமல்
யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
உன்னால்.

.

உன்னை மனதில் நினைத்து
எதிர் வீட்டுக் குழந்தைக்கு
அழுத்தமாய்
தருகிறேன் முத்தம்.
நீ
ஏதேனும்
குழந்தையை நினைத்தாவது
எனக்கொன்று
கொடுத்து விட்டுப் போயேன்.
.

உங்களைப் போல
எனக்கு
கவிதை எழுதத் தெரியாது…
காற்றில் கேசம் மெலிதாய் புரள
தலையை அசைத்துப்
புன்னகைக்கிறாய்…
அடடா
என்ன அழகான கவிதை !!!

நில், நிதானி, காதலி – கவிதை நூலிலிருந்து
 

37 comments on “நில்..நிதானி…காதலி

  1. பூவா தலையா
    கேட்கிறாய்
    நீ.

    காசு
    என்கிறேன் நான். தல சூப்பர்

    Like

  2. என்னால் முடியவில்லையென்றாலும்
    நொடியேனும் ஒரு முறைப்பு,
    சும்மாவேனும் ஒரு கோபம்,
    பொய்க்காவது ஒரு சண்டை,
    நீயாவது போட்டுக்கொள்ளேன்
    இப்படியும் கொஞ்சம்
    வாழலாம்தானே….

    Like

  3. //
    நீ
    சிரிக்க வேண்டுமென்பதற்காகவே
    நான்
    பேசியதுண்டு.
    நான் பேசுவதற்காகவே
    நீ
    சிரித்த நிஜம் தெரியாமல்.
    //

    Ennudaiya unarvugalin ezhuthu uruvam….
    Unaradha kadhalin
    Uyri vali…..

    Arumaiyaana varigal nanbare…..

    Karthick

    Like

  4. நன்றி வேலு, உங்கள் வருகைக்கும், மனமார்ந்த பாராட்டுக்கும். தொடர்ந்து வாருங்கள்.

    Like

  5. நான் ரசித்த முதல் கவிதைச் சாலை… முற்றிலும் அருமை… 🙂

    Like

  6. for all are great poems. i never seen in my life.

    “vuerukku vuer koduthathu
    poie ie meiyakkie
    ulagukku vuerkodukkirathu
    kavitahi

    Like

  7. Superb………

    Kathalin Vali Arinthavar Neengal………..
    Ikkavithaiy……. Yositthu Eluthiyath Alla……
    Swasitthu Ezhuthiyathu……… enbathu ovvoru variyilum therihirathu……..
    Vazhtthukkal….kodi…………..

    Like

  8. ஏதோ ஓர்
    அதிகாலை அமைதியில்
    உன்னை கண்டேன்.
    அன்றிலிருந்து
    அதிகாலை
    அமைதியாயில்லை

    Endha varigal kaadhalin nijathai yaduthuraikiradhu.

    Like

  9. மிக்க நன்றி நண்பர்களே.. உங்கள் மனம் திறந்த வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும்.. 🙂

    Like

  10. “ஏதோ ஓர்
    அதிகாலை அமைதியில்
    உன்னை கண்டேன்.
    அன்றிலிருந்து
    அதிகாலை
    அமைதியாயில்லை.”

    “எதையும் யோசிக்காமல்
    பேசிக் கொண்டிருந்தது
    ஒரு காலம்.
    இப்போது
    எதுவும் பேசாமல்
    யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
    உன்னால்.”
    romba nalla irukku

    all ur writings are really superbbbb

    Like

  11. //ஏதோ ஓர்
    அதிகாலை அமைதியில்
    உன்னை கண்டேன்.
    அன்றிலிருந்து
    அதிகாலை
    அமைதியாயில்லை.//

    அமைதியான
    அமைதியின்மை
    அவளாலே !!!
    மிகவும் ரசித்தேன் !! வாழ்த்துக்கள் !

    Like

  12. உங்களைப் போல
    எனக்கு
    கவிதை எழுதத் தெரியாது…
    காற்றில் கேசம் மெலிதாய் புரள
    தலையை அசைத்துப்
    புன்னகைக்கிறாய்…
    அடடா
    என்ன அழகான கவிதை
    arumai ya na varigal….valuthukal ungal kavithaikum kathulukum

    Like

  13. பூவா தலையா
    கேட்கிறாய்
    நீ.

    காசு
    என்கிறேன் நான்

    – these lines are metaphorical… selection of words is very accurate…a nice piece of work i have read in the recent past…congratulations!

    Like

  14. arumaiyana Kavithai. Simple and yet thoughtful. ethanai naal aaghivithadu ithai pol oru nalla Kadhal Kavithaiyai padithu…

    Like

  15. அனைத்தையும் ரசித்தேன். இந்த இரண்டை அதிகம் ரசித்தேன்.

    /ஏதோ ஓர்
    அதிகாலை அமைதியில்
    உன்னை கண்டேன்.
    அன்றிலிருந்து
    அதிகாலை
    அமைதியாயில்லை./

    /பூவா தலையா
    கேட்கிறாய்
    நீ.

    காசு
    என்கிறேன் நான்./

    Like

  16. Thirumba thirumba padichalum salikatha varthaigal…..alagana karpanai….avasthayana nijangal…romba romba arumayaga irukirathu…..kathal kavithaigal endrume thanithuvathai ilapathillai…

    Like

  17. Xavi,

    Arumaiya varigal, ethanaiyoo arthangal kadalai prathibalithu.

    “நீ
    சிரிக்க வேண்டுமென்பதற்காகவே
    நான்
    பேசியதுண்டு.
    நான் பேசுவதற்காகவே
    நீ
    சிரித்த நிஜம் தெரியாமல்.”

    Idhu kathaliyin kadhalai lateaagae purindhu kondae kadhalanudayadhu, ethanai unnmai.

    Arumayanadhu idhu

    “ஒருமுறை நீ சிரித்தபோது
    இதயம் கொஞ்சம்
    இடம் மாறியதோ என யோசித்தேன்.
    மறு முறை
    யோசிக்காமல் இதயத்தை
    இடம் மாற்றிக் கொண்டேன்.”

    Chanceless really superb. Kadhal tharum amaidhiyai kuruvadhu pinnvarum vaira varigal.

    “எதையும் யோசிக்காமல்
    பேசிக் கொண்டிருந்தது
    ஒரு காலம்.
    இப்போது
    எதுவும் பேசாமல்
    யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
    உன்னால்.”

    Ungal padaippukal melum valara vaazthukkal. Ungalin varikalukku vanakkangal.

    Like

  18. Nalla erukkunu oru vaarthai sonna pothathu.eda rasikka pothathu oru naal.ennidam vaarthai ellai,elzthiya kaigalukkum ,yositha manathirkkum aayiram aayiram valzthukkal.simply outstanding….melum ungal pani thodara enn valzthukkal matrum prathanaigal.wish youu all success althrough your life.

    Anbudan,
    Viji.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.