பாவமில்லையேல் கல் எறி

 
ஆலய வாசலில் ஒருமுறை
அலையாய் அலையும்
ஆட்களின் கூட்டம்.

விபச்சாரத் தவறுக்காய்
தீர்ப்பிடலின் திடுக்கிடலில்
பெண்ணொருத்தி
சபைநடுவில்.

பரிசேயரும்,
மறைநூல் வல்லுனரும்
இயேசுவை சோதிக்க
இக்கட்டாய் கேட்டனர்.

நீர் மதிக்கும் மோயீசன்
விபச்சாரக் குற்றம்
கல்லடி மரணத்துக்கானதென்று
கட்டளையிட்டார்.
நீர்
என்ன சொல்கிறீர்.

மோயிசனையே மறுதலிப்பீரா
இல்லை
இவளை
கல்லெறிந்து கொல்வதை
வழிமொழிவீரா ?

பெண்ணோ
காற்றில் அலையும்
முகிலாய்
திகில் அலையும் கண்களோடு
நடுங்கி நின்றாள்.

இயேசு
தலை தாழ்த்தி
தரையில் விரலால்
வரையத் துவங்கினார்

கேள்விகள்
மீண்டும் மீண்டும்
கர்த்தரின் காதுக்குள்
கொட்டப்பட்டது.

இமை நிமிர்த்திய
இயேசு,
வெறியரின் வேகம் பார்த்தார்.

எல்லோருடைய கைகளிலும்
கற்கள்.
கல்லெறிந்தால் அவளுக்குக்
கல்லறைதான்.

உங்களுள்
பாவமில்லாத கரம்
முதல் கல்லை
இப்பெண்மீது எறியட்டும்.

சொல்லியவர் மீண்டும்
தரையில் எழுதத் துவங்கினார்

ஆணிவேர் வெட்டுண்ட
அவஸ்தையில்,
கோடரி வீச்சில்
நிலை குலைந்த நாணல்
மண் மோதும் வேகத்தில்,

அவர்கள்
ஒருவர் பின் ஒருவராய்
கற்களை போட்டு விட்டு
கடந்து சென்றனர்.

தனிமையில் இருந்த பெண்ணிடம்
பரமன் கேட்டார்,
மாதே
யாருமே தீர்ப்பிடவில்லையா?

இல்லை என்றாள்
மரண வாசல் வரை சென்று
மறுபடியும்
உயிர் கொண்டவள்.

நானும் தீர்ப்பிடேன்.

பிறப்பின் சிறப்பு
இறப்பிலும் இருக்கட்டும்.
தவறுதல் தவிர்த்து
திருந்துதலே தெய்வீகம்.

மன்னிப்பு
தவறுகளுக்கான
அனுமதிச் சீட்டல்ல.
இனிமேல் நீ பாவம் செய்யாதே.

பாடம் கற்றுக் கொண்ட
பெண்
பாதம் பணிந்தாள்.

– இயேசுவின் கதை/ ஒரு புதுக்கவிதைக் காவியம் – நூலிலிருந்து

9 comments on “பாவமில்லையேல் கல் எறி

 1. sa vi er nice to read.ok.what is new in this?it is alredy a existed storey.u made as poem what is new in this.if it is so pls explain.fair reply .

  Like

 2. நன்றி மாதரசன் 🙂 உங்கள் தளத்திலிருந்து ஒரு பைல் இறக்கிக் கொண்டேன். நன்றி 🙂

  Like

 3. உங்களுள்
  பாவமில்லாத கரம்
  முதல் கல்லை
  இப்பெண்மீது எறியட்டும்.
  This word is so powerful that forgive others as jesus forgave us.
  yes jesus i love you so much because you rescue me from mastru…,homo …, ladie…. addic…. thanks jesus.
  you have authority to forgive our sin.
  thanke xaviar GOD bless you and your family .
  In him
  elangoworld@gmail.com

  Like

 4. “உன் கண்ணில் இருக்கும் துரும்பை முதலில் அகற்றி விட்டால் தான்
  அடுத்தவன் கண்களிலுள்ள துரும்பை அகற்ற உனக்கு கண் தெரியும்”
  என்பதற்கிணங்க,
  “எம்மிடம் பல தவறுகளை வைத்துக் கொண்டு மற்றவர்களைத் தீர்ப்பிடுகிறோம்.”
  “தீர்ப்பிடாதீர்கள்…(உங்கள் தவறுகளுக்காக நீங்களும் கடவுளால்) தீர்ப்பிடப் படுவீர்கள்” என்பதைத் தெரிந்து கொண்டும்,
  எவ்வளவு பெரிய தவறை (தீர்ப்பிடுதல்) காலம் காலமாய்ச் செய்து வருகிறோம்…

  எத்தனை தடவைகள் இதை பைபிளில் படிக்கிறோம்… அனால் எத்தனை பேர் இப்படியான தவறு தப்புகளிலிருந்து வெளியே வருகிறோம்? வெளிவர முயல்கிறோமா?… எம்மால் முடிகிறதா?…. சாத்தியப்படுகிறதா?…. (?)

  பல தடவைகள் இக் கதையைப் படித்திருந்த போதிலும்,
  அழகாகக் கவிதை வடிவில்,
  எல்லோரின் “ஆன்ம” ஆரோக்கியத்துக்காகத் தந்து,
  சிந்தனையைத் தூண்டியமைக்கு நன்றி சேவியர்!

  [[ மன்னிப்பு
  தவறுகளுக்கான அனுமதிச் சீட்டல்ல…
  தவறுதல் தவிர்த்து
  திருந்துதலே தெய்வீகம்!]] ….
  continue posting with worthful and useful messages… Thank you Xavier.

  Like

 5. மிக்க நன்றி ஷாமா… 🙂 உங்கள் பின்னூட்டங்கள் மனதுக்கு மிகவும் உற்சாகம் அளிக்கின்றன. தொடர் வருகைக்கு மனமார்ந்த நன்றிகள்.

  Like

 6. //உங்களுள்
  பாவமில்லாத கரம்
  முதல் கல்லை
  இப்பெண்மீது எறியட்டும்.
  This word is so powerful that forgive others as jesus forgave us.
  yes jesus i love you so much because you rescue me from mastru…,homo …, ladie…. addic…. thanks jesus.
  you have authority to forgive our sin.
  thanke xaviar GOD bless you and your family .
  In him//

  மிக்க நன்றி இளங்கோவன். உங்கள் பின்னூட்டம் நிறைவளிக்கிறது !

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.