பல்லவி
மூடி வைத்த மொட்டு மெல்ல
கண் விழிக்கும் நேரம்
மூன்றடி தான் என்முன்னால்
நிலவிருக்கும் தூரம்
விரல் நுனியில் காமனவன்
கட்டிவைத்த பாரம்
என்றுந்தன் ஓரம் தீண்டி
இந்தவலி தீரும்
அனுபல்லவி
முடியா தென்பது முடியும் போதும்
துவங்கா தென்பது துவங்கும் போதும்
முடிவே இல்லாக் காதல் மட்டும்
துவங்கா நிலையில் நிற்பது சரியா ?
துவங்கிக் கொள்ள அன்பே வரியா ?
0
சரணம்
கட்டவிழ்ந்த கூந்தலுக்குள்
சிக்கிக் கொண்ட பூவாய்
தொற்றி மனம் வாடுதடி
என் அருகில் வாராய்
திட்டமிட்ட செய்கையல்ல
என் காதல் அறிவாய்
வட்டமிடும் என் காதல்
கூட்டணியில் சேர்வாய்
( முடியா தென்பது .. )
0
சரணம்
பொட்டு வைத்த நெற்றிதனைக்
கட்டிக் கொண்ட காதல்
விட்டு விடக் கூடாமல்
ஒட்டுதடி வாராய்.
முத்தமழை கண்பொழிய
கனவுக்குள் வாழ்வாய்
உதடுகளை ஒற்றிக்கொள்ள
விடிந்தபின்னே வாராய்.
( முடியா தென்பது .. )
0
super
LikeLike