சின்னப் புன்னகை

( இது காதலர் தின ஸ்பெஷல், காதலர்களுக்கு மட்டும். மத்தவங்க படிக்கலாம் ஆனா இது காதலர்களுக்கு மட்டுமே பிடிக்கலாம் ! )

 
பச்சைத் தாவணி பூத்த ரோஜா
கூந்தல் காட்டில் பதுங்கியதேனோ ?
பள்ளிச் செல்லும் முல்லைப் பூவின்
முகத்தைப் பார்க்கக் கூசியதாலோ ?

தென்றல் வந்து தேகம் தொட்டு
சொல்லிச் சென்றது என்னவோ ?
முத்தமிட்ட பூக்கள் தன்னில்
உன் முகம் மட்டும் மெல்லியதெனவோ ?

0

சின்னப் புன்னகை கண்டதும் மின்மினி
ஓடிப் போனதை அறிவாயோ,
விண்மீன் கூட மேகம் மூடி
வாடிப் போனதை அறியாயோ ?

உந்தன் குரலைக் கேட்டதும் குழல்கள்
துளைகள் அடைந்ததை அறிவாயோ ?
ஒரே ஒரு பாடல் பாடிப் போனால்
பாலை பூக்கும் அறியாயோ ?

உந்தன் சேலை உரசிப் போனதால்
புற்கள் பூத்ததை அறியாயோ ?
உந்தன் பாதம் முத்தம் தரவே
பனித்துளி காத்திருப்பத(அ)றியாயோ ?

0

பனித்துளி மீது வண்ணமடித்தால்
வெயிலில் கலையும் அறிவாயோ ?
காதல் மனசை மூடி மறைத்தால்
உயிரே அலையும் அறியாயோ ?

செதுக்கி முடித்த சிற்பத்துள்ளும்
பாறை தானதை அறிவாயோ ?
பாண்டம் செய்யும் குயவன் நீ
நான் களிமண் என்பதை அறியாயோ ?

நடந்து நடந்து மனசின் கால்கள்
முடமாய் போனதை அறிவாயோ ?
இனியும் மெளனம் உடுத்தி நடந்தால்
என்மனம் கிழியும் அறியாயோ ?

0

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s