உலகப் புதுக் கவிதைகளில் முதல் முறையாக…

நான் தூய தமிழில் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். எத்தனை பேருக்கு புரிகிறது பார்க்கலாம் !
தூய தமிழ் பிரியர்களுக்காவது புரிகிறதா பார்ப்போம் 🙂

காதலி

உயிரோடு தர்க்கம் செய்யும்
உன்
புற்கம் மீதில் பித்தம் கொண்டேன்.

மோகத்தின்
எரிதழலை
எறிந்து செல்லும்
கழலைச் சொல்வதா ?
கழலதிலே சுழலவைக்கும்
சங்கம் தனைச் சொல்வதா ?

கிறங்கடிக்கும் குறங்கதன்
வடிவைச் சொல்வதா ?
அகமிருக்கும் பகம் தனை
கற்பனை வடிவில்
சொல்வதா ?

நெஞ்சை நசுக்கிடும்
உன் நுசும்பு,
பித்தத்துக்குள் என்னை
பிடித்துத் தள்ளிடும்
நுத்தம்.

விழுந்த என்னை
விழுங்கியே தீர்த்திடும்
இதயம் தின்னும்
இதலை.

இதில் நான் எதைச் சொல்வேன் ?

அகிலமே கொஞ்சம்
எட்டிப் பார்க்கும்
அற்புத நகிலம்
அதின் கிரீடச் சிலீமுகம்.

அழகிய அத்தம்
அதன்
தங்கையெனும் அங்கை
உயிர் தீண்டும் அங்கிலி
அதன்
உயிரான உகிர்.

எது இல்லை அழகு
கூர்ப்பரம்
கிலுத்தம்
மொய்ம்ப்பு
இதில் நான் எதைச்
சொல்லாமல் விடுவேன் ?

கவிதையான களன்
அகநானூறு சொன்ன
புறன்.
அபாரமான அபரம்.

ஆனனத்தை
அழகுபடுத்தும் பாலிகை.
பாலிகைக்குள் பாதுகாப்பாய்
இருந்து
உள்ளத்தில் போரை மூட்டிடும்
தசனம்.

வினாடிக்குள் அழித்துவிடும்
நயனம்.
நயனத்தின் வியப்பான
தாரை விளிம்பு.

அசத்தும் அளிகம்
கருமையாய் ஓடும்
நெடுமை.

உன் கோதை முதல்
பாதம் வரை
தேடித் தேடி எழுதிய தமிழை
குடங்கையாலே
கசக்கி எறிவாயோ எனும்
கவலையில்
அண்ணமும் அனரியும்
ஒன்றாய் சங்கமிக்கக்
கவலையுடன் காத்திருக்கிறேன்
காண்.

Advertisements

9 comments on “உலகப் புதுக் கவிதைகளில் முதல் முறையாக…

 1. தமிழ்க்கவிதைன்னு சொன்னீங்களே? அது அடுத்த பதிவுல வருமா? இந்தக் கவிதை என்ன மொழி?

  Like

 2. ஸேவியர்!
  தயவு செஞ்சு அருஞ்சொற்பொருளாவது தரவும்!
  BTW, உங்கள் கவிதைகள் எல்லாம் தவறாம படிச்சுற்றேன்! (RSSக்கு நன்றி)
  இன்று சொக்கன் அவர்கள் சொன்ன வார்த்தைகளில் வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன்!
  Keep it up

  Like

 3. தூய தமிழ் என்று சொல்லிவிட்டு வடமொழி சொற்களை அடுக்கித் தள்ளிவிட்டீர்கள். சாருக்குத தமிழ் தெரியாதோ?

  Like

 4. புரிஞ்சுக்க முயற்சி பண்ணிட்டிருக்கேன் 🙂

  Like

 5. அங்கங்கள் 27 அதனை என் போன்ற எளியவர்க்கும் புரிய வைத்தால் தமிழையும் அறிவோம் கவிதையதன் சுவையையும் உனர்வோம்… தயை கூறுங்கள் சேவியர்…. நன்றி.——————
  புற்கம்,கழல்,சங்கம்,குறங்கதன்,பகம்,நுசும்பு,நுத்தம்,இதலை,நகிலம்,சிலீமுகம்,அத்தம்,அங்கை,அங்கிலி,உகிர்,கூர்ப்பரம்,கிலுத்தம்,மொய்ம்ப்பு,களன்,புறன்,அபரம்,ஆனனம்,பாலிகை,தசனம்,நயனம்,தாரை விளிம்பு,அளிகம்,நெடுமை,அண்ணம்
  ——————————–

  ,
  ,

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s