மண் புழுக்கள்

mp.jpg 

மெளனம் தின்னும்
மண்புழுக்கள்
கொல்லைப்புற
தண்ணீர்ப் பானையின் அடியில்
தவம் கிடக்கும்.

வடகிழக்கு மூலையில்
வாழை மர அடியிலும்
அரையடி ஆழத்தில்
உயிர் வேர்களாய்
இவை உலவித் திரியும்.

உயிரை உயிரால்
பிடிப்பதற்கு
தூண்டில் தூக்கு மேடையேறி
மீன்களுக்கு உணவாகி
உணவுக்கு மீன்களைத் தரும்.

மண் புழுக்கள்
என்
கிராமத்து மண்ணின் அடையாளம்

நகர்ப்புற
புழுதி வீட்டின்
இரண்டடி நீள முற்றத்தில்
காய்ந்து போய்
தலை சாய்க்கின்றன தாவரங்கள்.

தகவல் அறிந்தவர்கள்
சொல்கிறார்கள்
மண்புழு வளர்க்க.

மனிதர்கள் வளராத
நகரத்தில்
மண்புழுக்கள் வளருமா ?

Advertisements

11 comments on “மண் புழுக்கள்

 1. அருமை….

  காலில் மிதிப்பட்ட போதும்
  மையத்தில் வராத
  மண் புழுக்களுக்கே
  ஓர் கவிதையா???

  சூப்பர்….

  Like

 2. மனிதர்கள் வளராத
  நகரத்தில்
  மண்புழுக்கள் வளருமா ?

  //

  touching line ..sir ippolam free a ? kalkala niraya posts podureenga

  Like

 3. //touching line ..sir ippolam free a ? kalkala niraya posts podureenga//

  மெதுவா சொல்லுங்க கார்த்தி… வேலைல இருந்து பிரிச்சு விட்டுடப் போறாங்க 🙂

  Like

 4. //உயிரை உயிரால்
  பிடிப்பதற்கு
  தூண்டில் தூக்கு மேடையேறி//

  கவித்துவம் நிறைந்த அருமையான வரிகள்!

  Like

 5. உயிரை உயிரால்
  பிடிப்பதற்கு
  தூண்டில் தூக்கு மேடையேறி
  மீன்களுக்கு உணவாகி
  உணவுக்கு மீன்களைத் தரும்.

  really super….
  sreedhar

  Like

 6. ஒரு கிராமத்தை, இயற்கைய சுவாசிக்கும் ஒரு கவிஞனை பார்க்கிறேன்

  வாழ்த்துக்கள் !!

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s