உன் புன்னகை

smile3.jpg 

ஒரு
பரவச தேசத்தின்
பளிங்கு மாளிகை போல்
பரிசுத்தமானது
உன் புன்னகை.

அது
இரவை உடைக்கும்
ஓர்
மின்னல் கோடு போல
தூய்மையானது

தேவதைக் கனவுகளுடன்
தூக்கத்தில் சிரிக்கும்
ஓர்
மழலைப் புன்னகையுடனும்
ஒப்பிடலாம்
உன் புன்னகையை.

எனக்குள் கவிழ்ந்து வீழும்
ஓர்
பூக்கூடை போல
சிதறுகிறது உன் சிரிப்பு.

ஒரு மின்மினியை
ரசிக்கும்
இரவு நேர யாத்திரீகனாய்
உன்
புன்னகையை நேசிக்கிறேன்.

ஆதாமுக்கு
ஆண்டவன் கொடுத்த
சுவாசம் போல
எனக்குள் சில்லிடுகிறது
உன் புன்னகை.

எனினும்
உன் புன்னகை அழகென்று
உன்னிடம் சொல்ல
மட்டும்
ஆயுள் கால தயக்கம் எனக்கு.

நீ
புன்னகைப்பதை
நிறுத்தி விடுவாயோ என்று.

·

Advertisements

10 comments on “உன் புன்னகை

 1. ஆதாமுக்கு
  ஆண்டவன் கொடுத்த
  சுவாசம் போல
  எனக்குள் சில்லிடுகிறது
  உன் புன்னகை.//

  ippadi la epadi pa yosikireenga..why don u try to write a thodar in vikatan ..indha madhri puriyira madhri yarum elduhuradhiallai ..andha kurayai pokalam !! so try pannunga

  Like

 2. // why don u try to write a thodar in vikatan //

  நன்றி நண்பரே.. நான் என்ன வேணாம்ன்னா சொல்றேன்.. விகடன்ல வாய்ப்பு கிடைக்கணுமே 🙂

  Like

 3. அன்பிற்கினிய சேவியர்,

  உங்கள் கவிதை மிகவும் நன்றாக உள்ளது. உங்கள் புகைப்படத்தை பார்த்தேன். நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்க செல்லாத ஓர் அழகன் அந்த புகைப்படத்தில் சிரிக்கிறான். ஏழு புத்தக வெளியீடு முடிந்தும் இத்தனை வளர்ச்சியில் வென்றும் உங்களின் தாழ்மையும் அன்பும் எல்லா எழுத்துக்களிலும் தெரிகிறது. இதை பராட்டுகிறேன்.

  வாழ்த்துக்கள்

  என் சுரேஷ், சென்னை

  Like

 4. சுரேஷ்.. ஏதோ முடிவோட தான் களத்துல குதிச்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன் 🙂 . உண்மையிலேயே இலக்கியத்தை நான் மன நிம்மதிக்காகத் தான் செய்கிறேன். கர்வக் கிரீடம் அணிந்து கொள்ள அல்ல 🙂

  உங்கள் பாராட்டுகளுக்கும், கருத்துகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்

  Like

 5. really superb lines…
  தேவதைக் கனவுகளுடன்
  தூக்கத்தில் சிரிக்கும்
  ஓர்
  மழலைப் புன்னகையுடனும்
  ஒப்பிடலாம்
  உன் புன்னகையை.

  எனக்குள் கவிழ்ந்து வீழும்
  ஓர்
  பூக்கூடை போல
  சிதறுகிறது உன் சிரிப்பு.

  ஒரு மின்மினியை
  ரசிக்கும்
  இரவு நேர யாத்திரீகனாய்
  உன்
  புன்னகையை நேசிக்கிறேன்…
  ivai kavithai alla, punnagaiyai varthaienum thoorigaiyal varaintha oru kaviyam..azhagiya ooviyam….

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s