எல்லோருக்குள்ளும் எரியும் நெருப்பு.

ltte1.jpg 

எல்லோருக்குள்ளும்
எரிவதற்குத் தயாராய்
சில
கனல்கள்.

கவனமாக நடக்கின்றோம்.
சட்டென்று பற்றிக் கொள்ளும்
எதிலும்
மோதி விடாத
எச்சரிக்கையின்
விரல்களைப் பிடித்துக் கொண்டு.

சந்தர்ப்பங்கள்
சந்தித்துக் கொண்டே இருக்கின்றன
சருகுகளையும்
வைக்கோல்களையும்
முதுகுக்குப் பின்னால்
மறைத்துக் கொண்டு.

அகத்தின் கனல்கள்
முகத்தில் அசையாதபடி
வெப்பத்தின் ஜுவாலைகளை
இதயத்தின்
இருட்டுப் பகுதிக்குள்
இடமாற்றம் செய்து கொண்டு
சலனமில்லாமல் நடக்கிறோம்.

அதனால் தான்
மனிதர்கள் என்று நாமும்,

போராளிகள் என்று
அவர்களும்
அழைக்கப் படுகிறார்கள்

·

4 comments on “எல்லோருக்குள்ளும் எரியும் நெருப்பு.

  1. சகோதரர்கள் இரத்தை கண்டபின்னும் இப்படி நடக்கலாகாது. இல்லையேல் அதெ நெருப்பு ஒரு நாள் உன்னையும் சுற்றிவளைத்து விழுங்கும். உன்னால் வேல் எந்த் முடியவிட்டால், பேனா ஏந்தி போராடு. போராட தயங்கும் எதுவும் காலத்தின் காலடியில் காணாமல் போகும். சகோதரா விழித்துக்கொள்ள இதுவெ தருனம். சகோதரா விழித்துக்கொள்ள இதுவெ தருனம். துணிந்து வா சேர்ந்து வாழ.

    வாழ்க தமிழ்

    Like

  2. அகத்தின் கனல்கள்
    முகத்தில் அசையாதபடி
    வெப்பத்தின் ஜுவாலைகளை
    இதயத்தின்
    இருட்டுப் பகுதிக்குள்
    இடமாற்றம் செய்து கொண்டு
    சலனமில்லாமல் நடக்கிறோம்.

    நல்ல ஆழமான வரிகள். சாமான்யர்கள் எல்லாருக்கும் இது பொருந்தும். இதயத்திலிருப்பதெல்லாம் முகத்தில் பிரதிபலித்தால்
    பல மிருகங்கள் திரிந்துகொண்டிருக்கும்.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.