முத்தக் குளத்தில் நீராடு

bb.jpg

ஆடைகள் மூடிய மேனியடி – இது
மேடைகள் ஆகிடும் காலமினி
ஓடைகள் போலவே மேனியடி – இதில்
ஓடிடும் ஆசைகள் மிச்சமினி.

வாடிடும் கனவுகள் போதுமடி – தா
லாட்டிடும் நிலையில் எந்தன்மடி
ஓடிடும் விரல்களை ஓடவிடு – அவை
தங்கிடவேண்டும் வெட்கம் விடு.

மூடிடும் பூவில் தேனிருக்கும் – அது
நாவிடம் சேரா நிலையிருக்கும்
திறக்கும் வேளை இல்லையெனில் – நா
இறக்கும் வரையில் இன்பமில்லை.

தாவிடும் ஆசைகள் உடல்வருடும் – பின்
தூவிடும் வாசனை தனைநுகரும்
மேவிடும் தாபம் இமைஎரிக்கும் – அது
தீயினைத் தின்று குளிரெடுக்கும்.

ஒற்றைப் போர்வை போதுமடி – இனி
மற்ற ஆடைகள் போகவிடு
வெட்கம் வந்து உடல்தின்றால் – நீ
என்னைப் போர்த்தி வெப்பமெடு.

கலைந்த கூந்தலை விட்டுவிடு – அது
இரவின் சாட்சியாய் இருக்கவிடு
காற்றை ஆடையாய் அணிவதையே – நீ
விடியும் வரைக்கும் வழக்கமெடு.

முத்தக் குளத்தில் நீராடு – பின்
யுத்தக் களத்தில் போராடு
சத்தம் செத்த காலையிலும் – சில
மோகச் சத்தம் மிச்சமிடு.

kiss1.jpg
 

Advertisements

6 comments on “முத்தக் குளத்தில் நீராடு

  1. கலக்கிட்டீங்க சேவியர்! 🙂 ஆமா.. நீங்க சந்தக்கவிதைகள் எழுதி நான் அதிகம் பார்த்ததில்லை. இது நல்லா வந்திருக்கு.

    Like

  2. நன்றி சுகன்யா… நாவல் எழுதியதில்லை. ஆனால் நீள் கவிதைகள் எழுதியிருக்கிறேன். நாவல் போல, படித்துப் பாருங்களேன் 😀

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s