உயிர் நண்பனை இழந்தேன்.

navanee.jpg
உயிர் நட்பு ஒன்று எதிர்பாராத விதமாய் சடுதி மரணமடைந்தால் மனம் எத்தனை பாடுபடும் என்பதை நேற்று இரவு தான் கண்டு கொண்டேன்.

எட்டு ஆண்டுகளாக மிகவும் நெருக்கமாகப் பழகி, குடும்ப நண்பனாகி விட்டிருந்த நண்பன் நவனீ நேற்று இரவு சென்னையில் சாலை விபத்தில் கட்டுமிராண்டித் தனமான ஒருவனுடைய வாகனச் சக்கரத்தில் சிக்கி பலியான நிகழ்வை ஏற்றுக் கொள்ளக் கூட மனம் மறுக்கிறது.

எனது நண்பர் வட்டாரத்திலேயே எந்த விதமான கெட்ட பழக்கங்களும் இல்லாதவன் அவன். அமெரிக்காவில் மூன்று ஆண்டுகள் ஒரே அறையில் தங்கி இருந்த தருணங்களில் கூட ஒரு முறை கூட தவறிழைக்காமல், யாரையும் காயப்படுத்தாமல் வாழ்ந்தவன் அவன்.

சாலை விதிகளை மதிக்காமல் ஓடும் மக்கள் மத்தியில் ஒழுங்காக ஹெல்மெட் போட்டுக் கொண்டு மெதுவாகவே பைக் ஓட்டுபவன் அவன். இரவு பத்தரை வரை அலுவலகத்தில் இருந்தவன் நள்ளிரவில் சாலையில் பலியான செய்தி வந்தபோது பதறிப்போனேன்.

இப்போது தான் ஒரு வயதைப் பூர்த்தி செய்த குழந்தையும், இரண்டாம் வருட திருமண நாளைக் கூட நிறைவு செய்யாத திருமண வாழ்வின் சாட்சியான மனைவியும், ஒரே மகனைப் பலி கொடுத்த பெற்றோரும் கதறிய காட்சிகள் இதயத்திலிருந்து எப்போதும் இறங்கப் போவதில்லை.

பிரிய நண்பனே.. உன் உயிருக்குள் என் நட்பைக் காயப்படாமல் காப்பாற்றியவனே.. உன் பிரிவினால் கண்ணீர் விட்டுக் கதறிய உன் நண்பர்களின் இதயம் எப்போது ஆறுதல் அடையுமோ தெரியவில்லை.

உனது ஆன்மா சாந்தியடையவும், உனது குடும்பம் ஆறுதலடையவும் பிரார்த்தனை செய்வதைத் தவிர ஏதுமறியாமல் கலங்கி நிற்கிறேன் நான். இன்னும் நம்ப முடியாத இதய வலியுடன்.

10_03_2007_012_008.jpg

Advertisements

23 comments on “உயிர் நண்பனை இழந்தேன்.

 1. 😦

  மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. உங்கள் நண்பரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

  உங்கள் துயரத்தில் நாமும் பங்கு கொள்கிறோம்!

  Like

 2. மனம் கனக்கச் செய்யும் நிகழ்வு..
  வேறு ஏதும் எழுத தோணவில்லை. நண்பரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள்.

  சென்ஷி

  Like

 3. உங்கள் நண்பரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள்.

  Like

 4. Netru iravu 9.30 manikku ennodu unavu unda nanban…ippodhu ivvulagathil illai. Manam namba marukiradhu.

  Aazhndha varuthangaludan…

  Like

 5. மனதிற்கு கஷ்டமாக உள்ளது. அவரின் குடுபத்திற்கு ஆறுதல் அளிக்க இறைவனை வேண்டுகிறேன் !

  Like

 6. romba kashtamaa irukku padikkirappove. ithe pondra oru anubavathai unarnthavan engira muraiyil avarin kudumbathinar padum vethanaiyai unara mudigirathu.

  avarin kudumbathinarukku mana valivu pera praarthppom.

  Sadish

  Like

 7. Uravugali thaandiya yuir natpu, thudikkum vethanyil idyayam. Navani, yaar endru theriyatha makkal kooda, ithai pesumbothu, naam ellam ivanudan 8 varudam vaaznthom efunds il.. Idayam ganakkiradhu….!!

  Like

 8. உங்கள் நண்பரின் ஆன்ம சாந்திக்கும் உற்றார் உறவினரின் ஆறுதலுக்கும் என் பிரார்த்தனைகள்..

  Like

 9. Navanee is not only a teetotaler and his philanthrophic quality is high. I still remember his words on “Banyan” and his support to Banyan and other non-profit organisations. He is a magnanimous person.

  Like

 10. Navanee, man can’t imagine him not being with us. May your family be blessed with the strength to pull. Xavi, vedanayana oru nigazhvu idhu.

  Like

 11. Pingback: நண்பனின் நினைவாக « கவிதைச் சாலை

 12. Pingback: நண்பன் நவனீ நினைவாக… « கவிதைச் சாலை

 13. To,
  RTO Office,

  Enimalavathu Panam vangitu License kudukama, Test la pass panninathan license kudukanum. Manasatchipadi Nadanthukanum.Panam yeppa venalum sampathichukalam. But Uyir ????…. Inniku mathavangaluku nadakurathu nalaiku namaku nadakum pothuthan athoda vali theriyum.

  Dear Xavier,

  Nanbarin nenaivaga neengal vizipunarchiyai undakka, enimelum ethu pola nadakama eruku nammalanathai seivom. Uyir Pali thadupom.

  Nanbarin aathma shanthi adaiya Ellam valla erivanai vendugirein..! Avar ungaloduthan erukirar. Erupar.!

  Nandri…!

  Like

 14. Dear friend

  Ennalaje ettukkolla mudijala intha pirivai. I’m so woory. However unka nanpan athma santhijadaja iraivanai vendukiren.

  Like

 15. manathai uruga vaithu vittathu irappu enpathu valkaiyil miga periya varuthathai erpathividugirathu vaalga ungal natpu i love you your frndship

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s