பிரியமே,
நீ யாரோ
எவரோ நானறியேன்.
ஒரு வசந்தகால வளைவில்
சரேலென
என்
விழிச்சக்கரங்களைத் திருப்புகையில்
உன்னைச் சந்தித்தேன்.
பின்
திருப்பப்பட முடியா நிலையில்
சுருண்டுகிடக்கின்றன
என் நினைவுகள்.
பின்பொரு நாள்
ஓர்
குளிர்காலக் கூரையருகில்
கசிந்த மெல்லிசையிலும்,
மாலை நேர
மழைத்துளி ஒன்றின்
ஜீவப் பாய்ச்சலிலும்,
கடத்தி வரப்பட்ட
காட்டாறு போல
புரண்டு படுத்தன
உன் நினைவுகள்
காலங்கள் தரும்
உன்னதமானவற்றில்
உன்னைக் கண்டேன்,
நீ
ஒரு முறை கூட
என்னைக் காணவில்லையே
எனும் உண்மையை மட்டும்
இலையுதிர் காலத்துக்காய்
ஒத்தி வைத்திருக்கிறேன்
இயற்கை காதலியை நினைவூட்டும் அலாதியே தனி தான், இல்லையா?
முடிந்தால், நேரம் கிடைத்தால், மழை பற்றிய என்னுடைய கிறுக்கலைப் பாருங்க (http://kaattaaru.blogspot.com/2007/03/blog-post_1184.html)
LikeLike
நன்றி நண்பரே.. கண்டிப்பாகப் பார்க்கிறேன்
LikeLike