எப்போது உன்னைக் காதலிக்கத் துவங்கினேன் ?

10.jpg

காதல்
அத்தனை சோகத்தையும்
துடைக்கும்
ஒற்றைக் கைக்குட்டை.

காதல்
அத்தனை கைக்குட்டைகளையும்
நனைக்கும்
ஒற்றை சோகம்
10.jpg
உனது
சிரிப்பை மொழிபெயர்க்கும்
கலை
வாய்த்திருந்தால்
ஆயிரம்
கவிதைத் தொகுதிகள் போட்டிருப்பேன்.
10.jpg
விழித்து விடக் கூடாதே
என்னும்
நினைப்பில் தூங்கப் போகிறேன்,
தூங்கவே விடாமல்
விழிக்கின்றன உன் நினைவுகள்
10.jpg

பிரசுரத்துக்கு அனுப்பாத
முத்தம் ஒன்று
என்னிடம் காத்திருக்கிறது.
உன்
இதழ்களில் பிரசுரிக்கும் ஆசையுடன்.
10.jpg

அதிகாலைக் கதிரவனும்,
கை நீட்டும் கடலலையும்,
மனம் நனைக்கும் மழைச்சாரலும்,
இருள் கவிதை வான் வெளியும்
எதையும் விட
அழகானவள் நீயென்று
தோன்றிய தருணத்தில்
நான்
உன்னைக் காதலிக்கத் துவங்கியிருக்கலாம்.

Advertisements

12 comments on “எப்போது உன்னைக் காதலிக்கத் துவங்கினேன் ?

 1. காதல்
  அத்தனை சோகத்தையும்
  துடைக்கும்
  ஒற்றைக் கைக்குட்டை.

  காதல்
  அத்தனை கைக்குட்டைகளையும்
  நனைக்கும்
  ஒற்றை சோகம்

  nice one

  Like

 2. உனது
  சிரிப்பை மொழிபெயர்க்கும்
  கலை
  வாய்த்திருந்தால்
  ஆயிரம்
  கவிதைத் தொகுதிகள் போட்டிருப்பேன்.

  enakku therindhu irundhaal kappiyamae vadithu iruppaen :), nalla maniyana varigal xavie.

  Like

 3. //காதல்
  அத்தனை சோகத்தையும்
  துடைக்கும்
  ஒற்றைக் கைக்குட்டை.

  காதல்
  அத்தனை கைக்குட்டைகளையும்
  நனைக்கும்
  ஒற்றை சோகம்//

  அப்படிப் போடுங்க!

  //பிரசுரத்துக்கு அனுப்பாத
  முத்தம் ஒன்று
  என்னிடம் காத்திருக்கிறது.
  உன்
  இதழ்களில் பிரசுரிக்கும் ஆசையுடன்.//

  இது ரொம்ப அழகா இருக்கு…

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s