பின்னல் போட்ட மின்னல் காரி
காதில் காதல் சொல்வாளா
கன்னம் கோர்த்த கன்னம் கொண்டு
கவிதை எழுதிச் செல்வாளா ?
0
மேற்கு வானம் மஞ்சள் பூசி
நீலக் கடலில் குளிக்க,
வெப்பம் போன காற்றுக் கூட்டம்
தெப்பத்துக்குள் கிடக்க,
வெள்ளிப் பாத வெள்ளை வாத்து
அல்லி விலக்கி மிதக்க,
காதல் கொண்ட என்மனம் மட்டும்
உந்தன் பின்னே நடக்குதடி.
0
தாழக்கரையின் தாழம் பூவும்
வாசனை வீசிச் சிரிக்க – அது
பட்டுப் பூச்சியின் வண்ண இறகில்
மெல்ல மோதிக் களிக்க
பச்சை கொட்டிய வயலின் நண்டுகள்
வளைகளை உடம்பில் உடுத்த,
காதல் கொண்ட என்மனம் மட்டும்
உனக்குள்ளேயே கிடக்குதடி.
0
பாத்தியோரம் பளபளப்பாக
பாசிப் பூக்கள் கிடக்க
கன்னிப்பெண்ணின் உடையும் வளையாய்
சின்ன அருவி சிலிர்க்க
வாழை மரத்து இலை மேடையிலே
பொன்வண்டுகள் களிக்க,
காதல் குயிலே என் மனம் மட்டும்
உனக்குள்ளேயே வழுக்குதடி.
paadal arputham. vaalthukkal. vetri vichayam idu vedha sathyam.kolgai velvadhe namadhu ilatchiam.
sundharabuddhan,
chennai – 24.
LikeLike
very long time, i seen your blog. i read your article on kopam. its fine.
sundharabuddhan
the sunday indian
LikeLike
நன்றி புத்தன்.
LikeLike