என்னைப் பற்றி நானே பெருமையாய் நினைக்கும் 8 விஷயங்கள் !

xvr.jpg
என்னைப்பற்றி நானே பெருமையாய் நினைக்கும் எட்டு விஷயங்கள்.

1. கிராமத்தில் பிறந்ததும், கிராமம் சார்ந்த வாழ்க்கையை அன்பான குடும்பத்தினரோடு கால் நூற்றாண்டு காலம் செலவிட்டதும், ( பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி படித்ததன் அருமை இப்போது தான் புரிகிறது ! )

2. குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என்னுடைய கவிதை ஒன்றைப் பாராட்டி அனுப்பிய மடல்.

3. உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டின் சிறந்த கவிஞராக எனை தேர்வு செய்து என்னுடைய கவிதைகள் அனைத்தையும் தொகுத்தது. ‘சேவியர் கவிதைகள் காவியங்கள்’ எனும் தலைப்பில் அது ஆயிரம் பக்க புத்தகமாக என்னை சிலிர்க்க வைத்தது.

4. கவிதைகள், சிறுகதைகள், வாழ்க்கை வரலாறு என பத்து புத்தகங்களை இதுவரை வெளியிட்டிருப்பது. மற்றும் தொலைக்காட்சியில் பேட்டி ஒளிபரப்பானது.

5. சுஜாதாவின் புது நானூறு பகுதியில் எனது கவிதை இடம் பிடித்தது. ‘இயேசுவின் கதை’ நூலுக்கு விருது வாங்கியது. இன்னும் பல போட்டிகளில் பரிசுகள் வென்றது.  கல்கி, குமுதம், புதிய பார்வை, சண்டே இந்தியன் உட்பட பல வெகுஜன இதழ்களிலும், நிறைய இணைய இதழ்களிலும் படைப்புகள் வெளியானது. ஜெர்மனியிலிருந்து வெளியான ‘காதல் வேகம்’ ஆல்பத்திற்குப் பாடல்கள் எழுதியது

6. மென்பொருள் நிறுவனத்தில் ப்ராஜக்ட் மேனேஜராய் முழுநேர வேலையாய் இருந்தாலும் குடும்பத்தினரோடு செலவிடவும், இரண்டு தளங்களை தினமும் அப்டேட் செய்யவும், இதழ்களுக்குக் கட்டுரை எழுதவும், நூல் எழுதவும் நேரம் கண்டு பிடிப்பது.

7. நேரில் பார்க்காமலேயே உள் மனதின் ஆழமான நம்பிக்கையின் துணையோடு திருமணம் செய்தது. ஜாதகம், ஜோசியம், நாள், நேரம் என எந்தவிதமான பழக்கங்களையும் பார்க்காமல் திருமணத்தை நடத்தியது. ( ஆனந்தமான வாழ்க்கை வாழ்வது )

8. நல்ல பொறுமை சாலியாக இருக்க முடிவது. ( சென்னை டிராபிக்கில் யாரையும் திட்டாமல், எரிச்சலடையாமல் ஒரு மணி நேரம் காரோட்ட முடிவது ஒரு உதாரணம் 🙂  . எல்லாவற்றையும் விட முக்கியமாய் ஐகாரஸ் பிரகாஷ் போல நிறைய நல்ல நண்பர்களைச் சம்பாதித்திருப்பது.

அட !! சுய தம்பட்டம் அடிப்பது நல்லா தான் இருக்கு !

சரி.. என் பங்குக்கு நானும் எட்டு பேரை அழைக்கிறேன்.
சிரில் அலெக்ஸ் 
நேர்மை
கலை அரசன்
நவீன் பிரகாஷ்
ரவி
உண்மைத் தமிழன் 
செல்வேந்திரன்
நளாயினி 
 

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

Advertisements

22 comments on “என்னைப் பற்றி நானே பெருமையாய் நினைக்கும் 8 விஷயங்கள் !

 1. அந்த ஃபோட்டோ ஒண்ணே போதுமே.. டில்லி வரைக்கும் பேசுமே 🙂

  வாழ்க……

  Like

 2. ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு சேவியர்…..(உங்களைப் பற்றிய தகவல் மற்றும் இந்த விளையாட்டு :))

  Like

 3. சேவியர் ஸார்.. தங்களிடமிருந்து இப்படி ஒரு அழைப்பு வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.. அவரவர் பெருமைகளைப் பற்றி அவரவரே வெளிப்படையாகச் சொல்வதுதான் மிகுந்த சிரமம். இதில் எனக்கு எதுவுமே இல்லை என்பது எனக்குத்தான் தெரியும்.. இருந்தாலும் முயற்சி செய்கிறேன்.. அழைப்புக்கு மிக்க நன்றி..

  டிஸ்கி : மேலே பிரகாஷ் சொல்லியிருப்பதைப் போல் இந்த புகைப்படத்தை வைத்து இந்தியா முழுக்க சுத்தலாமே.. வாழ்க சேவியர் ஸார்..

  Like

 4. மிகவும் சிறப்பாக இருந்தது சேவியர். உங்களை பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

  Like

 5. என்னைப் பற்றி எட்டு விஷயங்கள் எழுதுவது இருக்கட்டும். சேவியர் எனும் பெயரை என் மனதில் பதிய வைத்தது எது?

  உற்றுக் கேட்டுப்பாருங்கள்
  நம்மை நோக்கி வருவது
  வெறும் நாய்களின் வெற்றுக்கூக்குரல்
  கொட்டில் நரிகளின் காட்டுக்கத்தல்
  தொட்டிச் சகதிக்குள் நாம் ஏன் முகம் கழுவ வேண்டும்?

  வேலி தாண்டாமல் குரைத்துக் குரைத்து
  குரல்வளை தேய்ந்து
  குட்டைக்குள் தலைசாய்க்கும்
  தெருநாய்களோடு நமக்கென்ன வாதம்? ஆஹா, யாரிந்த சேவியர்? துவண்டமனதில் தீப்பந்தம் கொழுத்தும் வரிகளை எழுதியிருக்கிறாரே என்று 2004ல் தேட துவங்கி, வசதி வாய்ப்பு பெருகி இதோ சேவியருக்கு பின்னுட்டம் போடுகிற அளவிற்கு வளர்ந்திருக்கிறேன்.

  எட்டு பெருமைகளோடு உங்களனைவரையும் சந்திக்கும்வரை வணக்கம் கூறி விடைபெறுவது உங்கள் செல்வேந்திரன்.

  Like

 6. —சென்னை டிராபிக்கில் யாரையும் திட்டாமல், எரிச்சலடையாமல்—

  நிஜமாகவே மெச்சத்தக்க (கஷ்டமான) மேட்டர்..

  Like

 7. //ஆஹா, யாரிந்த சேவியர்? துவண்டமனதில் தீப்பந்தம் கொழுத்தும் வரிகளை எழுதியிருக்கிறாரே என்று 2004ல் தேட துவங்கி//

  ஐயோ.. சிலிர்க்க வைக்கிறீர்கள் செல்வேந்திரன்.

  Like

 8. //மிகவும் சிறப்பாக இருந்தது சேவியர். உங்களை பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி//

  நன்றி சிவராமன்

  Like

 9. 1. நான்கு குழந்தைகள் போதும் இதற்கு மேல் குழந்தை வேண்டாம் என்று தீர்மானித்த எனது பெற்றோர் ஒரு கிறித்துவ மிஷினரி மருத்துவமனையில் கருவைக் கலைக்க தீர்மானித்து சிகிச்சை எடுத்திருந்தனர். அதில் ஏதோ தவறு நேர்ந்து, இந்த பழுதடைந்த பூமியில் அவதரித்தது.

  2. அமைதியான சுபாவமும், கூச்சமும் உள்ள பாரம்பரியம் மாறாத ஒரு குடும்பத்தில் விநோதமான ஜந்தாக சிறுவயதிலிருந்தே கிரிக்கெட், பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, சொற்பொழிவு, கவியரங்கம், பட்டிமன்றம், சிறுபத்திரிக்கை என சிறகுகளை விரித்தது.

  3. வறுமை, பிரச்சனைகள் என பள்ளிப்படிப்பே பாதியில் முடிந்தாலும், போராட்ட குணத்தோடு தொலைதூர கல்வியில் பட்டமும், கணிணி, தட்டச்சு இன்னபிற குமாஸ்தா சமாச்சாரங்களை கற்றுக்கொண்டது.

  4. பதினைந்தாவது வயதிலிருந்தே சொந்த உழைப்பில் சாப்பிடுவதும், சாப்பாடு போடுவதும் (குடும்பத்திற்கு)

  5. ஒப்பந்த ஊழியனாக தமிழகத்தின் முன்னனி ஊடகம் ஒன்றில் பணியில் சேர்ந்து இரண்டே ஆண்டுகளில் அதன் முக்கிய பொறுப்பு ஒன்றினை வகிக்கும் அளவிற்கு உயர்ந்தது.

  6. பணி ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பால் எண்ணற்ற ஆளுமைகளை, எழுத்தாளர்களை சந்திக்க முடிகிறது. எத்தனையோ ஊர்களுக்கு பயணிக்க முடிகிறது.

  7. அழகாக இருப்பது.

  8. நல்ல நண்பர்களை சம்பாதித்துக் கொண்டது.

  Like

 10. //அவரவர் பெருமைகளைப் பற்றி அவரவரே வெளிப்படையாகச் சொல்வதுதான் மிகுந்த சிரமம்//

  நீங்க வேற. இது தான் தமிழர்களின் தலையாய பணியே 🙂

  Like

 11. பாராட்டுக்கள். சுருக்கமாக அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
  செல்வேந்திரன்: பிரமித்து போனேன். நன்று

  Like

 12. //சுஜாதாவின் புது நானூறு பகுதியில் எனது கவிதை இடம் பிடித்தது.//

  ஏன் உங்க பெருமையை நீங்களே கெடுக்கிருங்க.

  Like

 13. adaaa. சுய தம்பட்டmaa- mm- nallathan eruku.

  ஞாபகம் வெச்சு அழைத்ததுக்கு nanre.

  Like

 14. என்னை பிரமிக்க வைக்கிறீர்கள் சேவியர் !! :))) இவ்வளவு சாதனையாள்ரை நண்பராக கொண்டிருப்பது எனக்கு பெருமை ! மேன்மேலும்வளர என் உள்ளம்கனிந்த வாழ்த்துக்கள் சேவியர்!

  என்னையும் அழைத்த உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சேவியர் :))))
  உண்மையில் என்னை பற்றி பெருமிதமாக சொல்லும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை என்பதே உண்மை :))))) .

  என்றும் அன்புடன்
  நவின்

  Like

 15. நண்பர் சேவியர் அவர்களிடமிருந்து அழைப்பு வந்ததில் மிக்க மகிழ்ச்சி. அதுவும் எட்டுபேரில் ஒருவராக என்னையும் தாங்கள் தங்கள் வட்டத்திற்குள் இணைத்துக்கொண்டதில் மிகமிக மகிழ்ச்சி. நான் தற்போது வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே தளங்களில் பிரவேசிப்பதால் தங்களின் அழைப்பை உடனே பார்க்க முடியாமல் போனது.
  ஆனா என்னைப் பற்றி எட்டு விசயம் என்ன சொல்ல என்று தான் புரியவில்லை.
  ஆனாலும் தருவதுதானே முறை…
  தாமதத்தைப் பொருத்தருள்க.

  நட்புடன்,
  மா.கலை அரசன்.

  Like

 16. ஒரு வாரம் விடுப்பில் இருந்தேன். ! வருகை தந்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

  Like

 17. செல்வேந்திரன்..
  ‘அளவுக்கதிகமாக பேசுவது’ என்பதை உங்களின் ஒன்பதாவது தகுதியாக சேர்க்க மறந்துவிட்டீர்கள்.::+)&)(_ (சிரிக்கிற simple இதுதானே..)

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s