சார்த்தரின் சொற்கள் : நூல் விமர்சனம்

sar.jpg
பிரஞ்ச் தத்துவஞானியான ஜீன் பால் சாத்ரூ ( சார்த்தர் ) வைப் பற்றியும் அவருடைய எழுத்துக்களைக் குறித்தும் எனக்குக் கிடைத்த முதல் அறிமுகம் கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்களிடமிருந்து தான். அவர் மிகவும் சிலாகித்துப் பேசும் சார்த்தர் எனக்கு பிடிபடாதவராகவே இருந்தார்.

‘மனிதனின் இருத்தல் அவனைச் சுற்றிலுமுள்ள உலகத்தைப் படைக்கிறது’ என்பது போன்ற ஆழப் பரந்து விரியும் தத்துவார்த்த சிந்தனைகளின் சொந்தக்காரர் அவர் என்பதனாலேயே அவர் மீதான பிரமிப்பு விரிவடைந்தது. எனினும் அவருடைய நூல்கள் எதையும்  முழுமையாய் வாசித்ததில்லை.

சமீபத்தில் தான் அவருடைய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘சொற்கள்’ எனும் நூலைப் படிக்க நேர்ந்தது. ஐம்பத்து ஒன்பதாவது வயதில் சார்த்தர் எழுதிய “The Words” எனும் நூலின் தமிழாக்கத்தை எழுத்தாளரும், மருத்துவருமான திரு வசந்த் செந்தில் தந்திருக்கிறார்.

ஐம்பத்து ஒன்பது வயதான ஒருவருடைய மழலைக்கால நிகழ்வுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்த நூலைக் கொள்ளலாம்.

சார்த்தரின் மழலைக்காலக் கனவுகளில் அன்றைய சமூக அரசியல் முகமும் கூடவே வருவது அவருடைய அனுபவத்தின் வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை.

தன்னுடைய தத்துவார்த்த சிந்தனைகளை மழலைக்கால அனுபவங்களின் வாயிலாகவும் அவர் சொல்ல முயற்சித்திருப்பது சார்த்தரின் ஆளுமையை உறுதிப்படுத்தியிருக்கிறது.

அதனாலேயே அவருடைய மழலைக்கால நினைவுகள், மழலைக்காலத்துக்கே உரிய துடிப்பை சற்று இழந்து விடுகிறது.

வசந்த் செந்தில் தன்னுடைய கவிதைகளுக்கு துள்ளல் நடையையும், கட்டுரைகளுக்கு எள்ளல் நடையையும் கொண்டிருப்பவர். இந்த மொழிபெயர்ப்புக்கு அவர் கடினமான ஒரு நடையை பயன்படுத்தியிருக்கிறார்.

ஒரு வேகமான வாசிப்பை அவருடைய மொழிபெயர்ப்பும், பக்கங்கள் கணக்காக விரியும் பத்திகளும் தடுத்து நிறுத்திவிடுகின்றன. ஒருவகையில் நிதானமான வாசிப்பையே சொற்கள் எதிர்பார்க்கின்றன என்று அவர் கருதியிருக்கக் கூடும்.

ஆனால் ஒரு டப்பிங் ஆங்கிலப் படம் பார்த்த உணர்வு மேலிடுவதற்கு அவருடைய மொழிபெயர்ப்பே முழு பொறுப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

நினைவுகளை மீண்டெடுப்பது சுவாரஸ்யம். அதுவும் மழலைக்கால நினைவுகளை திரும்பிப் பார்ப்பது அதைவிட சுவாரஸ்யம். அந்த சுவாரஸ்யத்தையும் சீரியஸாகச் செய்து பார்த்திருக்கிறார் சார்த்தர்.

சார்த்தர் என்னும் தத்துவ மேதையின் பாசாங்கற்ற மழலைக்கால அனுபவங்களை தத்துவ வெளிச்சத்தில் வாசித்துப் பார்க்கும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை இந்த நூல் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

பக்கம் 238 : விலை 125/-
தோழமை வெளியீடு
5டி, பொன்னம்பலம் சாலை,
கே.கே. நகர்,
சென்னை 78
9444302967

Advertisements

4 comments on “சார்த்தரின் சொற்கள் : நூல் விமர்சனம்

 1. // அதனாலேயே அவருடைய மழலைக்கால நினைவுகள், மழலைக்காலத்துக்கே உரிய
  துடிப்பை சற்று இழந்து விடுகிறது//

  விமரிசனம் நேர்மையாக இருந்தது.
  முதிர்ந்த காலத்தில் ஒருவன் தன் மழலைக்காலத்தை பின்னோக்கிப் பார்க்கும் பொழுது
  முதிர்ந்த அறிவு வளர்ச்சியில் மழலைக்காலத்தை ஒரு விமர்சனப்பார்வையோடு தான்
  பார்க்க முடிவது தவிர்க்க முடியாதது.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s