ஒரு அவசர முத்தம்

kiss.jpg

கனவுகள் கண்விழித்த
ஒரு
கணப்பொழுதில்
எனக்குள் பிரவாகமெடுத்த
ஆசையின் அவசியமாய் இருக்கலாம்
அந்த முத்தம்.

அல்லது
என் காதலின் கடலுக்குள்
மூழ்கிக் கிடந்த
மோகத்தின் முத்தாய் இருக்கலாம்

அல்லது
எப்போதேனும் நிகழுமென
நான்
பொத்தி வைத்த
என்
எதிர்பார்ப்புகளின் எதிரேறலாய் இருக்கலாம்

உன் மேல் எனக்கிருந்த
காதலின் புதை குழியில்
பயிரான
புதையலாய் கூட இருக்கலாம்
அந்த முத்தம்

எப்படியோ,
இலக்கணங்களின் அகரமும்
நாகரீகத்தின் ‘ன’கரமும்
இல்லாததே அந்த முத்தம்

எனினும்
அந்த
கத்துக் குட்டி முத்தம்
இன்னும்
கத்திக் கொண்டிருக்கிறது
மோகத்தின் முனைகளெங்கும்
காதல் கசியக் கசிய


 

2 comments on “ஒரு அவசர முத்தம்

  1. Kalakala iruku..

    //எப்படியோ,
    இலக்கணங்களின் அகரமும்
    நாகரீகத்தின் ‘ன’கரமும்
    இல்லாததே அந்த முத்தம்//

    Idha line dhaan puriyalla!!

    -aru!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s