முற்றமும், மாற்றமும்

village.jpg

முன்பெல்லாம்
திருவிழாக்காலங்களில்
முற்றங்களில்
வரிசையாய் இருக்கும்
குட்டிக் குட்டி
சட்டி பானைகள்.

மரச்சட்டத்தில் சொருகிய
பிளாஸ்டிக் பொம்மை
சுற்றிச் சுற்றி
நடனமாடும்
தள்ளு வண்டிகளில்.

பனை ஓலை
விரல் கலைகள்
வரம் தந்த
கிலுகிலுப்பைகள்

வண்ணக் காகித
சுழல் விளையாட்டுகள்
காலமாற்றத்தால்
கருப்பு வெள்ளையில்
மாறிவிட்டது.

திருவிழா செல்ல
நேரமின்றி,
வரவேற்பறையில்
டி.வி.டி பார்க்கும்
கிராமத்து வீட்டு முற்றங்களில்
சீறிப் பாய்கின்றன
மேட் இன் சைனாக்கள்.

Advertisements

4 comments on “முற்றமும், மாற்றமும்

 1. சினிமா கும்பல் முழுக்க சீரியல் கும்பல் ஆனது இந்த முற்றதில் விளையாடுபவகளை இழுப்பதற்குத்தானே?

  Like

 2. நன்றிங்க. குடும்பமாக அமர்ந்து பேசிச் சிரித்திருந்தது ஒரு காலம். இப்போ பேசினாலே.. பேசாதே ஒண்ணும் கேக்க மாட்டேங்குது ” என்று திட்டும் காலம் 🙂

  Like

 3. வெளி நாட்டிலிருந்து வந்திருந்த விருந்தாளிகளைக்கூடக் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று சொல்லி விட்டு சீரியல் பார்க்கிறாங்களாம் நம்ம ஊரு மக்கள். உறவினரின் வருத்தம் இது.
  பல்ல்லாங்குழியும், கண்ணமுச்சியும் ஆடும் நம் குழந்தைகளுக்கு இப்போ என்னென்னவோ விளையாட்டுப்பொருட்கள்.
  ஆனால் பாருங்கள் சேவியெர்!என் வீட்டுக் குழந்தைகள் என்னுடன் கண்ணாமுச்சியும், ஒடிப்பிடித்து விளையாடுவதையும் ரொம்ப நேசிப்பார்கள். நான் அவர்கள் ஊருக்குப்போனாலும் அவர்கள், நம் ஊருக்கு வந்ததாலும் என்னோடு இங்கு விளையாடுவது, நமது பழைய விளையாட்டுக்களைத்தான். நான் அவர்களோடு ஒரு குழந்தையைப்போல் விளையாடுவேன். உடம்புதான் அவர்களுக்கு சமமாக ஒத்துழைக்காது.

  Like

 4. //வெளி நாட்டிலிருந்து வந்திருந்த விருந்தாளிகளைக்கூடக் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று சொல்லி விட்டு சீரியல் பார்க்கிறாங்களாம் நம்ம ஊரு மக்கள்//

  பாருங்கள் !!! ஊடகங்களும், அதில் வரும் நாடகங்களும் மனித உறவுகளை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி விட்டது !!! வேதனை !

  //…என்னோடு இங்கு விளையாடுவது, நமது பழைய விளையாட்டுக்களைத்தான்.//

  உங்களைப் போல சிலர் இல்லையேல் நாளைய தலைமுறை அதென்னம்மா கண்ணாமூச்சி ? சத்தியராஜ் படமா ? ன்னு கேப்பாங்க !

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s