கசங்கிய தலையணைகள்.

guy.jpg

நேற்றைய தழுவல்களின்
விரல்கள்
தனிமையிலும்
காது வருடுகின்றன.

மாலை நேரம்
முளைக்கும் போதில்
தாபத்தின் கனவுகளும்
வேகத்தைக் கூட்டுகின்றன.

ஆடைகளின்
பாரம் தாங்காமல்
வியர்வை
அவிழ்கிறது.

மோக கற்பனைகளால்
நிர்வாணமாகின்றன
இரவுகள்.

போர்வைகளுக்கு
வாய் முளைத்தால்
புரியும்
படுக்கை அறைகளின்
ரகசிய மூச்சுகள்.

நரம்புகளுக்குள்
நகரும் நரகமாய்
மேனி தேய்த்து முன்னேறும்
நாகங்கள்.

புரளல்களுக்கும் உளறல்களுக்கும்
இடையே
நசுங்கி வெளியேறும்
இரவு.

விடியலில்
இரவு துடைத்து
கனவு கழுவி
எதுவும் நிகழா பாவனையில்
அலுவலகம் கிளம்புகையில்

கபடச் சிரிப்புடன்
கண் சிமிட்டும்
கசங்கிய தலையணைகள்.

5 comments on “கசங்கிய தலையணைகள்.

 1. அடடா – என்ன கவிதை. உணர்ந்து, ரசித்து, அனுபவித்து, மகிழ்ந்து எழுதிய கவிதை.

  //விடியலில்
  இரவு துடைத்து
  கனவு கழுவி
  எதுவும் நிகழா பாவனையில்
  அலுவலகம் கிளம்புகையில்

  கபடச் சிரிப்புடன்
  கண் சிமிட்டும்
  கசங்கிய தலையணைகள்.//

  கற்பனைத் திறம் பாராட்டத்தக்கது.

  //ஆடைகளின்
  பாரம் தாங்காமல்
  வியர்வை
  அவிழ்கிறது.//

  //புரளல்களுக்கும் உளறல்களுக்கும்
  இடையே
  நசுங்கி வெளியேறும்
  இரவு.//

  எப்படி ஐயா சிந்திக்கிறீர்கள் இது மாதிரி எல்லாம்

  வாழ்த்துகள்

  Like

 2. ***
  போர்வைகளுக்கு
  வாய் முளைத்தால்
  புரியும்
  படுக்கை அறைகளின்
  ரகசிய மூச்சுகள்.
  ***

  Kaamam illakiyam aagalaam; Illakkiyam kaamam aagakudadhu ennbar Vairamuthu…..ungal padaippu mudhalaam vagaiyai cherndhadhu….Xavier

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.