பூக்களில் உறங்கும் மெளனங்கள்

ltte.jpg

ஈழம் பதிந்த கண்களில்
ஈரம் பொதிந்த ஏக்கங்கள்.

வீதியில் முளைக்கும்
பூட்ஸ் காலடி ஓசைகள்
வாசல் தாண்டும் வரை
ஈசல் உயிருடன்
ஊசலாடும்
உரிமைகளின் உயிர்கள்.

அமைதிப் பேச்சுகளின்
முடிவுகளைத்
தீர்மானிக்கும்
ஈரமற்ற பீரங்கிகள்.
 
தலைமுறை தாண்டியும்
முறைத்தலை நிறுத்தாத
சிங்களச் சினம்.
அறுபட்ட நாணலாய்
வீதியில் விழுகிறது
செந்தமிழ் இனம்.

வாழும் வசதியுமில்லை
கிரிக்கெட்டிற்காய்
தீக்குளிக்கும் தேசத்தில்
அகதியாகும் தகுதியுமில்லையாம்.

தோட்டாக்களும்,
வெடிகுண்டுகளும்
மரண ஓலங்களும்
ஈழத்தின் தேசிய கீதமென்றாகி விட,

தினம்
வீதியில் போர்ப்பறைச் சத்தங்கள்
எப்படி
பூக்களில் உறங்கும் மெளனங்கள் ?

11 comments on “பூக்களில் உறங்கும் மெளனங்கள்

 1. அருமை அருமை – பூக்களில் உறங்கும் மவுனங்களையே – எப்படி உறங்கும் எனக் கேட்ட வித்தியாசமான சிந்தனை. இதுவரை எனக்குத் தெரிந்த வரை – அனைத்துப் போட்டி கவிதைகளிலுமே யாருமே கேட்கவில்லை. பாராட்டுகள்.

  Like

 2. Pingback: தேன் » Blog Archive » ‘நச்’ கவிதைப் போட்டி - அறிவிப்பு

 3. /வாழும் வசதியுமில்லை
  கிரிக்கெட்டிற்காய்
  தீக்குளிக்கும் தேசத்தில்
  அகதியாகும் தகுதியுமில்லையாம்./

  /
  தோட்டாக்களும்,
  வெடிகுண்டுகளும்
  மரண ஓலங்களும்
  ஈழத்தின் தேசிய கீதமென்றாகி விட,

  தினம்
  வீதியில் போர்ப்பறைச் சத்தங்கள்
  எப்படி
  பூக்களில் உறங்கும் மெளனங்கள் ?/

  எண்ணங்களை
  எழுத்தாக்கவில்லை.
  உயிர்க்கொடுத்திருக்கிறது
  உங்களின் கவிதை

  வாழ்த்துக்கள்
  கவிதைக்கும்

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  Like

 4. //தினம்
  வீதியில் போர்ப்பறைச் சத்தங்கள்
  எப்படி
  பூக்களில் உறங்கும் மெளனங்கள் ?//

  ஈழச் சகோதரர்களின் நிலைமை கண்முன் விரிந்து மௌனமாகிப் போனது மனது.

  Like

 5. “”வாழும் வசதியுமில்லை
  கிரிக்கெட்டிற்காய்
  தீக்குளிக்கும் தேசத்தில்
  அகதியாகும் தகுதியுமில்லையாம்.””

  கவிதையில் உங்கள் மனம் கண்டேன்
  அருமை

  Like

 6. Pingback: தேன் » Blog Archive » நச் கவிதைப் போட்டி முடிவு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.