மழையும், என் காதலியும்

rain.jpg

ஓர்
மழைத்துளியின்
புனிதத்தை ஒத்திருக்கிறது
உன்
புன்னகை.

உன்
உதடு தொடும் ஆசையில்
மேகம் குதிக்கும்
முத்தத் துளிகளை
குடைக் கேடயங்களால்
தடை செய்து நடக்கிறாய்.

உன்
கன்னம் தொடாத கவலையில்
பெருங்குரலெடுத்து
அழுகிறது வானம்.

பூமியில் விழுந்து புரண்டு
அழுது ஓடுகிறது
உன்
பாதங்களையேனும்
முத்தமிடும் மோகத்தில்.

பாதம் தொட்ட பரவசத்தில்
சில துளிகள்
வீடு பேறு அடைகின்றன.

முக்தி பெறாத
மிச்சத் துளிகள்
தோல்வியின் துயரம் தாக்க
கடலில் விழுந்து
தற்கொலை செய்து கொள்கின்றன.

ஓர்
மழைத்துளியின்
புனிதத்தை ஒத்திருக்கிறது
உன்
புன்னகை.

ஓர் பெருமழையின்
துயரத்தை ஒத்திருக்கிறது
நீ சிந்தும்
ஒற்றைக் கண்ணீர் துளி.

Advertisements

5 comments on “மழையும், என் காதலியும்

 1. Hi Xavier,
  the longing desire of a rain drop to touch the girl and become immortal is well written . A very similar imagination is remembered by me when i read yours.Kaviperarasu Vairamuthu has penned like this in “Minnalai pidithu” song of shajahan movie” maarbai kadanthu erangum poluthu mukthi adainthu muthukkal aagindrathe”.The comparison of divinity of a rain drop with the smile of the women has to be really appreciated.
  i started to read your site while browsing through the links present in another site http://blog.arutperungo.com/. From that time onwards, i have been regularly reading your works and enjoying the tamil literary fervour.
  Thanks a ton for your efforts to quench the poetical thirst of tamilians spread across the world.
  Though I have been reading for a long time ,I could not get time to give a feedback. i am really sorry about that.. I like to read a pongal poem speaking about the hard labour of a farmer starting from sowing the seed to reaping it, since most of the people including me have neither seen the cultivation nor experienced the village culture .Hopefully you will be writing it by tomorrow,right??.
  If you could write in that context, it would be great.
  ENIYA PONGAL NALVATHUKKAL

  Regards
  Guhan

  Like

 2. அன்பின் குகன், உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். உங்கள் விருப்பத்துக்கு இணங்க, ஒரு பொங்கல் கவிதை. சற்றே நீங்கள் சொன்னது போல 🙂

  Like

 3. நன்றாக உள்ளது கவிதைகள்….அடிச்சு தூள் பண்ணுங்க பாசு….

  நந்தன் கௌஷிக்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s